Published:Updated:

விகடன் TV: “எனக்கு சீரியல், சினிமா ரெண்டுமே ஒண்ணுதான்!”

‘‘நடுவுல ‘ஆனந்தம்’ சீரியலுக்கு அப்புறம் பெரிய பிரேக் விட்டேன். செகண்ட் இன்னிங்ஸ் ‘தெய்வ மகள்’ வாணி போஜனுக்குப் பேசினதுல தொடங்குச்சு

பிரீமியம் ஸ்டோரி

‘`ஜீ தமிழ் சேனல்ல நான் நடிக்கிற சீரியல் இப்ப நம்பர் ஒன். இந்த வெற்றிக்குக் காரணங்கள்ல ஒரு விஷயமா நான் நினைக்கிறது சீரியல்ல என்னுடைய வாய்ஸ். பல இடங்கள்ல என்னைப் பார்க்கிறவங்க, ‘உங்க வாய்ஸ் செமங்க’ன்னு சொல்வாங்க. உண்மையில அந்த கிரெடிட் இன்னொருத்தங்களுக்குச் சேர வேண்டியது. அவங்கதான் எனக்கு டப்பிங் கொடுக்கிற ரேணுகா கதிர்’’ - ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ அஷ்வினி தன் மகிழ்வான தருணத்தில் மறக்காமல் குறிப்பிட்டிருந்த ரேணுகா கதிரிடம் பேசினேன்.

‘`அப்பா டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா இருந்ததால் நானும் டப்பிங் பக்கம் வந்தேன். ‘காதல் வைரஸ்’ படத்துல ஸ்ரீதேவிக்குப் பேசினதுதான் முதல் வாய்ப்பு. தொடர்ந்து நடிகை த்ரிஷாவுக்கு அவங்க முதல் படமான ‘லேசா லேசா’வில் தொடங்கி, ‘கில்லி’, ‘அலை’, `திருப்பாச்சி’ன்னு வரிசையா வாய்ஸ் கொடுத்துட்டு வந்தேன். அதேபோல ரீமா சென், மீரா ஜாஸ்மின், ஹன்சிகா, அனுஷ்கா, சந்திரமுகியில நயன்தாரா வரைக்கும் நான் டப்பிங் பேசிய ஆர்ட்டிஸ்டுகள் லிஸ்ட் நீளும்’’ என்றவரிடம்,

“பிரைம் டைம்ல எந்த சேனல் பார்த்தாலும் உங்க குரல்தான்னு சொல்றாங்களே, நிஜமா?” என்றேன்.

‘‘நடுவுல ‘ஆனந்தம்’ சீரியலுக்கு அப்புறம் பெரிய பிரேக் விட்டேன். செகண்ட் இன்னிங்ஸ் ‘தெய்வ மகள்’ வாணி போஜனுக்குப் பேசினதுல தொடங்குச்சு. இப்ப சன் டிவியில ‘தாலாட்டு’, ‘மகராசி’, ‘அபியும் நானும்’ சீரியல்கள் போயிட்டிருக்கு. ஜீ தமிழ்ல சூர்யவம்சம் ஹீரோயினுக்கும், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி அஷ்வினிக்கும் பேசறேன்’’ என்கிறார்.

விகடன் TV: “எனக்கு சீரியல், சினிமா ரெண்டுமே ஒண்ணுதான்!”

‘`சீரியல் டப்பிங் அனுபவம் எப்படி? மாமியார் மருமகள் சண்டை, அல்லது, வில்லி ஆக்ரோஷமாகக் கத்தறதுன்னு போகுமே?’’

‘`ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா எனக்கு சீரியல், சினிமா ரெண்டுமே ஒண்ணுதான். சீரியல்களுக்கு டப்பிங் பேசறப்ப தினமும் எல்லா வீடுகள்லயும் நம்ம குரலைக் கேட்கிறாங்கன்னு பெருமையா இருக்கும். என்ன ஒண்ணு, ‘அது நான்தான்’னு என்னைத் தெரிஞ்சவங்களுக்கு மட்டுமே தெரியும்.

அதேபோல, ‘அந்தப் பொண்னு வாய்ஸ் சூப்பர். அந்த வாய்ஸுக்காகவே சீரியல் பார்க்கலாம்’ங்கிற ரீதியில ஏதாவது பாராட்டு கிடைச்சா, அந்த நிமிடங்கள் சிலிர்ப்பா இருக்கும்’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு