Published:Updated:

Rewind 2022: சர்சையால் சரிந்த டி.ஆர்.பி.; எஸ்கேப் ஆன சாயாசிங்; டிவி ரவுண்ட் அப் 2022

அர்னவ் திவ்யா

சின்னத்திரை ஏரியாவில் 2022 யார் யாருக்கு என்ன தந்தது? கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமா?

Published:Updated:

Rewind 2022: சர்சையால் சரிந்த டி.ஆர்.பி.; எஸ்கேப் ஆன சாயாசிங்; டிவி ரவுண்ட் அப் 2022

சின்னத்திரை ஏரியாவில் 2022 யார் யாருக்கு என்ன தந்தது? கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமா?

அர்னவ் திவ்யா

பொண்ணு பார்க்கலாம்னு நினைச்சேன்.. மாமியார் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க!

ஜனவரி 12 தேதியிட்ட ஆனந்த விகடன் ‘ரிமோட் பட்டன்’ பகுதியில் தனது திருமணம் குறித்துப் பேசியிருந்தார் நாஞ்சில் விஜயன். ’சகோதரியைக் கட்டிக் கொடுத்தாச்சு, தம்பிக்கும் ஒரு பிஸினசைத் தொடங்கிக் கொடுத்தாச்சு. இனி நமக்கு ஒரு பொண்ணைப் பார்த்துச் சட்டுபுட்டுனு செட்டில் ஆக வேண்டியதுதான்’ என அப்போது பேசியிருந்தார்.

நாஞ்சில் விஜயன்
நாஞ்சில் விஜயன்

’என்ன ஆச்சு பாஸ்’ எனக் கேட்டால், ‘எல்லாம் தெரிஞ்சும் இப்படிக் கேக்கறீங்களே பாஸ்’ எனச் சிரித்தவர், ‘பொண்ணாடா பார்க்குற, மாமியாரே வீடே காத்திருக்கு’ எனச் சம்பவம் செஞ்சிடுச்சு இந்த வருஷம். வாழ்க்கையில முதல் முறையா ஜெயிலைப் பார்த்துட்டு வந்திருக்கேன். என்ன வருத்தம்னா, ஏதாவது ஒரு தப்பைச் செஞ்சுட்டுப் போயிருந்தாக் கூட சந்தோஷமாப் போயிருப்பேன். எதுவுமே தப்பு செய்யாம போயிட்டு வந்ததுதான் ஆதங்கமா இருக்கு’ என்கிறார். யூ டியூபர் சூர்யா தேவி தந்த புகாரில் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் ஜெயிலில் இருந்தவர் சில தினங்களுக்கு முன் தான் வெளியில் வந்திருக்கிறார்.

தப்பித்த சாயாசிங், சாய்ந்த டி.ஆர்.பி..’செல்லம்மா’ பஞ்சாயத்து!

விஜய் டிவியில் ‘செல்லம்மா’ சீரியல் தொடங்கப்பட்டபோது அதில் ஹீரோயினாக நடிக்கக் கேட்டு சாயாசிங்கை அணுகினார்கள். சன் டிவியில் கமிட் ஆன சீரியல் அப்போதுதான் ஹிட் ஆகத் தொடங்கி இருந்ததால் விஜய் டிவிக்கு வர மறுத்து விட்டார் சாயாசிங். இந்த செல்லம்மா சீரியலின் ஹீரோ அர்னவ்தான் மனைவி திவ்யா உடனான பிரச்னை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு புழலில் பதினைந்து நாள் சிறையிலிருந்து வந்தார்

அர்னவ் திவ்யா
அர்னவ் திவ்யா

அர்னவ் சிறைக்குப் போனதும் சீரியலின் ஹீரோ மாற்றப் படுவார் என நினைத்தார்கள் சீரியலின் ரசிகர்கள். ஆனால் சிறையிலிருந்து வெளியில் வந்து அர்னவே மீண்டும் தொடரில் நடித்து வருகிறார். இதனால் தொடரின் டி.ஆர்.பி. சமீப தினங்களாக அடி வாங்கி வருவதாகவும் தெரிகிறது.

சங்கம் வரை வந்த சம்பளப் பஞ்சாயத்து:

சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, சீரியல் ஆர்ட்டிஸ்டுகளின் சம்பள விஷயத்தில் தாராளமாகச் செயல்படுவதாகச் சொன்னார்கள். இதனால் கனிகா, பிரிய தர்ஷினி, ரேஷ்மா என ஏகப்பட்ட நடிகைகள் அந்த டிவியை நோக்கிப் படையெடுத்தார்கள்.

கலர்ஸ் தமிழ்
கலர்ஸ் தமிழ்

ஆனால் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பல சீரியல்கள் சில தினங்களுக்கு முன் சத்தமில்லாமல் நிறுத்தப் பட்டு விட்டன. அவற்றில் நடித்த நடிகர் நடிகைகளுக்குச் சம்பளமும் செட்டில் செய்யப் படவில்லை. விவகாரம் சின்னத்திரை நடிகர் சங்கம் வரை வந்துள்ளது. என்ன காரணம் என விசாரித்தால் சேனலில் மேல்மட்டத்தில் இருந்த சிலர் நிதியை முறையாகக் கையாளவில்லை எனச் சொல்லப்படுகிறது. சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் லைம் லைட்டுக்கு வரவேண்டுமென்பதே பலரின் விருப்பம்.

பாட்டு டு ஆக்ட்டு.. ராஜலட்சுமியின் ராஜநடை!

சிறந்த பின்னணிப் பாடகி’ விருதுடன் 2022 தொடங்கியது பாடகி ராஜலட்சுமிக்கு. கேரளாவில் உள்ள கலாபவன் மணி நினைவு அறக்கட்டளை அந்த விருதை கடந்த ஜனவரியில் வழங்கியது.

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

இதோ வருடம் முடிவதற்குள் ஹீரோயினாகக் கமிட் ஆகி விட்டார். ’அடுத்த வருஷம் சிறந்த நடிகைக்கான விருதை எதிர்பார்க்கலாமா’ என்றால், ‘நம்ம கையில என்னங்க இருக்கு. காலம் என்ன நிகழ்த்தணுமோ அதை மட்டுமே நிகழ்த்தும்’ என்கிறார்..

நாளையும் தொடரும்