பிக் பாஸ் வீட்டிலிருந்து 50வது நாள் வெளியேறிய போட்டியாளர் ராபர்ட். பல்வேறு காரணங்களுக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் தற்போது அந்த வீட்டிலிருந்து வெளியேறியிருக்கார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.
` உறவைத்தேடி தான் பிக்பாஸ் வந்திருக்கேன்னு பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகும்போதே சொல்லியிருப்பேன். நான் எதைத்தேடி போனேனோ அது எனக்குக் கிடைச்சிடுச்சு. குயின்சி எனக்கு பொண்ணா கிடைச்சிட்டா. அதனால பயங்கர சந்தோஷம்! கேம் விளையாட உடம்புல தெம்பு வேணும்.. அந்த வீட்டுல மிகப்பெரிய பிரச்னை சாப்பாடுதான்!
டாஸ்க் எல்லாம் வேற லெவலில் இருக்கும். அந்த டாஸ்க் விளையாடி ஜெயிச்சா தான் நான் வெஜ் சாப்பிடவே முடியும். இத்தனை நாள் பிக்பாஸ் வீட்டுல இருந்ததுல ஒரு 3,4 தடவை தான் சிக்கன் சாப்பிட்டிருக்கேன். எனக்கு கத்துறது சுத்தமா பிடிக்காது. நான் எப்பவுமே ஜாலியா சிரிச்சிட்டே மத்தவங்களை சிரிக்க வச்சிட்டு இருப்பேன். அங்க போடுற சண்டை எல்லாமே வேற லெவலில் இருக்கும். அதனால பெரும்பாலான சண்டைக்குள் போக நான் விரும்பல என்றவரிடம் ரச்சிதா குறித்துக் கேட்டோம்.
"எனக்கு கிரஷ் ஆக ரச்சிதாவை ரொம்பப் பிடிக்கும். அதனால அவங்களை பார்த்துட்டே இருந்தேன். என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் பெங்களூரில் இருக்காங்க.. அவங்க மூக்குத்தியிருப்பாங்க. ரச்சிதா எனக்குப் பிடிச்ச பொண்ணு.. அவங்களும் மூக்குத்தி போட்டிருந்தாங்க. எனக்கு மூக்குத்தி குத்தியிருந்தா பிடிக்கும். அதனாலதான் அவங்களை மூக்குத்தின்னு கூப்பிட்டுட்டு இருந்தேன்" என்றவரிடம் அசிம், தனலட்சுமி குறித்துக் கேட்டோம்.
தனலட்சுமியும், அசிமும் பிக் பாஸை கரைச்சு குடிச்சிட்டு வந்திருக்காங்க. தனலட்சுமி ரத்தம் வந்தாலும் ஆடிட்டே இருக்கும். ஜெயிக்கணும்னு அப்படி ஒரு வெறி அந்தப் பொண்ணுக்கு! அசிமெல்லாம் கமல் சார்கிட்ட இருந்து பல முறை ரெட் கார்டு வாங்கிட்டான். ஆனாலும், அவன் குணத்தை மாத்திக்கவே மாட்டேன்றான். அவனுடைய பெயரையே நான் கான்பிடென்ட்னு தான் வச்சிருக்கேன். ஏன்னா, ஒவ்வொரு முறை நாமினேட் ஆகும்போதும் பெட்டியில் அவன் துணியை நிரப்பவே மாட்டான். கேட்டா, நான் போக மாட்டேன்னு ரொம்ப நம்பிக்கையா சொல்லுவான். அமுதவாணன் என்னை சிரிக்க வச்சிட்டே இருந்தான். அதனாலேயோ என்னவோ அவனோட பயங்கரமா ஜெல் ஆகிடுச்சு. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே போயும் நான் கையோடு கொண்டு போற நபர்கள்னா குயின்சியும், அமுதவாணனும் மட்டும்தான்! மீதியெல்லாம் ஹாய்... பாய் தான்! என்னுடைய புரொடக்ஷன் கம்பெனியோட பெயரே குயின்ஸின்னு தான் வைக்கப் போறேன். அவ பெயர் அளவில் மட்டும் என் பொண்ணு இல்ல. உண்மையா என் சொந்தப் பொண்ணா தான் நினைக்கிறேன்!
பலர் என்னை பயன்படுத்திட்டு விட்டுடுவாங்க. என்னை ஏமாத்துறதுக்காகவே இருப்பாங்க. எல்லாம் பழகிடுச்சு என்றவரிடம் சிம்பு குறித்துக் கேட்டதும் புன்னகைத்தார்.
சிம்பு என்னை மீட் பண்ண வரச் சொல்லியிருக்கார். டார்லிங் ஒல்லியான பிறகு படம் எதுவும் பண்ணல. அவருடன் இணைந்து சாங் பண்ணனும். நல்லதா ஒரு பர்ஃபாமன்ஸ் கொடுத்துட்டா அது ஒரு பத்து வருஷம் தாங்கும்!' என்றார்.