Published:Updated:

`விநாயகர் கோயிலில் எளிமையாகத் திருமணம்' - காதலனைக் கரம் பிடித்த`ரோஜா' பிரியங்கா!

`ரோஜா' பிரியங்கா

சமீபத்தில் ஆனந்த விகடன் இதழுக்காக பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் அவருடைய திருமணம் குறித்துக் கேட்ட கேள்விக்கு விரைவிலேயே நல்ல செய்தி சொல்கிறேன் எனக் கூறியிருந்தார்.

Published:Updated:

`விநாயகர் கோயிலில் எளிமையாகத் திருமணம்' - காதலனைக் கரம் பிடித்த`ரோஜா' பிரியங்கா!

சமீபத்தில் ஆனந்த விகடன் இதழுக்காக பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் அவருடைய திருமணம் குறித்துக் கேட்ட கேள்விக்கு விரைவிலேயே நல்ல செய்தி சொல்கிறேன் எனக் கூறியிருந்தார்.

`ரோஜா' பிரியங்கா
சன் டிவியில் ஒளிபரப்பான `ரோஜா' தொடரின் மூலம் பிரபலமானவர் பிரியங்கா. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `சீதா ராமன்' தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
`ரோஜா' பிரியங்கா
`ரோஜா' பிரியங்கா

சமீபத்தில் ஆனந்த விகடன் இதழுக்காகப் பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் அவருடைய திருமணம் குறித்துக் கேட்ட கேள்விக்கு விரைவிலேயே நல்ல செய்தி சொல்கிறேன் எனக் கூறியிருந்தார். தற்போது அவருடைய இன்ஸ்டாகிராமின் மூலம் அந்த நல்ல செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

`ரோஜா' பிரியங்கா
`ரோஜா' பிரியங்கா

விநாயகர் கோயிலில் வைத்து எளிமையான முறையில் தன் காதலனைக் கரம் பிடித்திருக்கிறார் பிரியங்கா. `Just married' என அவர் தனது காதல் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அதில் பகிர்ந்திருக்கிறார்.

"தெலுங்கு சினிமாவிலும், சில டிவி தொடர்களிலும் முன்பு நடித்திருந்தார் ராகுல். அவரை பிரியங்கா காதலித்து வந்தார். இருவரும் ஒரே துறையில் பிஸியாக இருந்ததால் ராகுல் இந்தத் துறை வேண்டாம் என முடிவெடுத்துவிட்டு மலேசியாவில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டார். விரைவிலேயே எங்களுடைய திருமணத்தை அறிவிப்போம்!" என முன்னதாக விகடனுக்குக் கொடுத்த பேட்டியில் பிரியங்கா தெரிவித்திருந்தார். 

`ரோஜா' பிரியங்கா
`ரோஜா' பிரியங்கா

இன்று விநாயகர் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்திருக்கிறது. அவருடைய திருமணத்திற்கு அவருடைய ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வாழ்த்துகள் பிரியங்கா - ராகுல்!