Published:Updated:

ரகசியத் திருமணம் செய்து கொண்டாரா `குக்கு வித் கோமாளி' புகழ்?

விருந்து நிகழ்ச்சியில் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கியமான சிலரும் அழைக்கப்பட்டார்களாம். அவர்களில் ஒரு சிலருக்கு விருந்து நடந்த இடத்துக்குச்சென்ற பிறகே விஷயம் தெரிந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'சிரிப்புடா', 'குக்கு வித் கோமாளி' உள்ளிட்ட விஜய் டிவியின் ஹிட் ஷோக்கள் பலவற்றில் பங்கு கொண்டு பிரபலமானவர் புகழ். அதிலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி இவரை ரொம்பவே பிரபலப்படுத்தியத்தியது என்று சொல்லலாம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் இவருக்கு வரிசை கட்டத்தொடங்கியிருக்கின்றன. அஜித்தின் 'வலிமை' படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்தச் சூழலில்தான் தற்போது இவர் குறித்துக் கிளம்பியிருக்கும் ஒரு தகவல் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. ஆமாம், சில தினங்களுக்கு முன் புகழ் ரகசியமாகத் திருமணம்செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். சில வார‌ங்களுக்கு முன் நடந்த இந்தத் திருமணத்தில் புகழின் நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்து சிலர் மட்டுமே கலந்துகொண்டதாகத் தெரிகிறது.

`குக்கு வித் கோமாளி' புகழ்
`குக்கு வித் கோமாளி' புகழ்

"இது காதல் திருமணம். பொண்ணு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஆரம்பத்துல காதலுக்கு எதிர்ப்பு இருந்தாலும் பிறகு ரெண்டு பேர் வீட்டுலயுமே சம்மதம் சொல்லிட்டாங்கனுதான் கேள்விப்பட்டோம். அதனால மேரேஜ் எல்லாருக்கும் தெரிய நடக்கும்னுதான் நினைச்சோம். ஆனா, இப்ப திடீர்னு கல்யாணம் நடந்துட்டதா சொல்றாங்க. அவசரமா, ரகசியமா நடந்ததுக்கு என்ன காரணம்னு யாருக்கும் தெரியலை. ஒருவேளை கோவிட் சூழலா இருக்கிறதால எளிமையாப் பண்ணினாரோ என்னவோ!" என்கின்றனர்.

சமீபத்தில் 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொன்ட அந்தப் பிரபல நடிகை, ஒரு விருந்து தந்துள்ளார். அந்த விருந்தில் ஜோடியாகக் கலந்து கொண்டுள்ளார் புகழ். இவ்விருந்துக்கு 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கியமான சிலரும் அழைக்கப்பட்டார்களாம். அவர்களில் ஒரு சிலருக்கு விருந்து நடந்த இடத்துக்குச்சென்ற பிறகே விஷயம் தெரிந்திருக்கிறது. விருந்து முடிந்ததும், எல்லோரும் ஜோடியுடன் வந்திருந்த புகழை வாழ்த்தி அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட பின் கிளம்பியிருக்கிறார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

`குக் வித் கோமாளி’ புகழ்
`குக் வித் கோமாளி’ புகழ்

கல்யாணத் தகவல்குறித்துப் புகழிடமே கேட்டேன். ‘’பிரபலமாகிட்டாலே இந்த மாதிரி தகவலும் வந்துடுமோ ப்ரோ. நானே எல்லா இடத்துலயும் சிங்கிள் சிங்கிள்னு சொல்லிட்டுவர்றது எல்லாருக்கும் தெரியும். நீங்க சொல்ற தகவலைக் கேட்கிறப்ப, எனக்குச் சிரிக்கவா அல்லது எப்படி ரியாக்ட் செய்யறதுனு தெரியலை’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு