Published:Updated:

பிக்பாஸ், மாஸ்டர் செஃப், சர்வைவர்... கமல்ஹாசன், விஜய் சேதுபதி, அர்ஜுனுக்கு சம்பளம் எவ்வளவு?

அர்ஜுன், கமல்ஹாசன், விஜய் சேதுபதி
அர்ஜுன், கமல்ஹாசன், விஜய் சேதுபதி

ஒரே நேரத்தில் மூன்று சேனல்களில் உலக கவனம் பெற்ற மூன்று வெவ்வேறுவிதமான ரியாலிட்டி ஷோக்கள். மூன்றையும் தொகுத்து வழங்குவது முன்னணி சினிமா நட்சத்திரங்கள். சின்னத்திரை தொகுப்பாளர்களாக வெள்ளித்திரை நாயகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்?

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் மூன்று முன்னணிச் சேனல்களில் மூன்று ரியாலிட்டி ஷோக்கள் டி.ஆர்.பி-க்காக முட்டி மோதுகின்றன.

சன் டிவியில் 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியும், ஜீ தமிழ் சேனலில் 'சர்வைவர்' நிகழ்ச்சியும் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. விஜய் டிவியின் 'பிக்பாஸ்' அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

மூன்று நிகழ்சிகளை தொகுத்து வழங்குபவர்களும் சினிமா நட்சித்திரங்களே. 'பிக்பாஸ்' மூலம் கமல்ஹாசன் சின்னத்திரைக்குள் வர, அர்ஜுன் 'சர்வைவர்' மூலம் வந்திருக்கிறார். விஜய் சேதுபதிக்கு 'மாஸ்டர் செஃப்' இரண்டாவது டிவி நிகழ்ச்சி

சரி, மூன்று நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு எவ்வளவு சம்பளம்? சிட்டுக் குருவிகளிடம் விசாரித்தோம்!

பிக்பாஸ் - கமல்

பிக்பாஸ் கமல்
பிக்பாஸ் கமல்

பிக்பாஸ் சீசன் 5-ல் கமல்ஹாசனுக்கு சம்பளமாகப் பேசப்பட்டிருக்கும் தொகை ஒருநாள் ஷூட்டுக்கு 4 கோடி ரூபாய். அதாவது வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் எபிசோட்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சி இரண்டு நாட்கள் ஒளிபரப்பானாலும் கமல்ஹாசனின் ஷூட்டிங் ஒரே நாள்தான். அதனால் கமல்ஹாசனின் ஒருநாள் கால்ஷீட் 4 கோடியாம்.

ஒரு பிக்பாஸ் சீசனுக்கு கமல்ஹாசனின் மொத்த கால்ஷீட் 15 நாட்கள். அதன்படி பிக்பாஸ் 5 சீசனுக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் கமல். முதல் சீசனில் கமல்ஹாசனின் 1 நாள் கால்ஷீட் 1 கோடி ரூபாயாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப்
விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப்

விஜய் சேதுபதிக்கு 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு ஒரு எபிசோடுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறதாம்.

'மாஸ்டர் செஃப்' தவிர்த்து, சன் டிவியுடன் 15 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் விஜய் சேதுபதி இருப்பதாகவும் பேசப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த 'லாபம்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட சில படங்களின் டிவி உரிமையும் சன் டிவிக்கே வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

சர்வைவர் - அர்ஜுன்

சர்வைவர் -1, அர்ஜூன்
சர்வைவர் -1, அர்ஜூன்

'சர்வைவர்' நிகழ்ச்சிக்கு அர்ஜுனுக்கு மொத்தமாக வழங்கப்படும் சம்பளம் 5 கோடி ரூபாய். இதுதவிர அர்ஜுன் தயாரித்து அவரது மகள் நடிக்கும் சில படங்களையும் 'ஜீ தமிழ்' சேனல் வாங்கலாம் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு