`நிறைமாத நிலவே' வெப் சீரிஸ் மூலம் பிரபலமானவர் சம்யுதா. இவர் `பாவம் கணேசன்' தொடரின் மூலமாக சின்னத்திரைக்குள் என்ட்ரியானார். சம்யுதா அவருடன் `சிப்பிக்குள் முத்து' தொடரில் நடித்த விஷ்ணுவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சமூகவலைதள பக்கங்களில் தங்களுடைய காதலை அறிவித்திருந்தனர். இருவருடைய வீட்டிலும் சம்மதம் தெரிவித்து முறைப்படி இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இவர்கள் பிரிந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இது தொடர்பாக விஷ்ணுவிடம் பேசி விகடன் இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். சம்யுதா இது தொடர்பாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
"மை டியர் ஹேட்டர்ஸ்... நீங்கள் நினைத்தது நடந்ததாக அனைவரும் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நல்லது!
என் வாழ்க்கை இனிமேல்தான் தொடங்கப் போகிறது. நீங்கள் யாரும் நினைத்துக்கூடப் பார்க்காதது இனிமேல் நடக்கப் போகிறது. அதனால், பெரும் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள வலிமை வேண்டும் என பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். குட் லக்!" என்கிற குறிப்புடன் பகிர்ந்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இரண்டு நாள்களுக்கு முன்னர், "ஒரு பெண்ணைத் தோற்கடிக்க முடியாது என்று தெரிந்ததும், அவளது நடத்தை குறித்த விமர்சனத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்" எனக் குறிபிட்டு 'ஃபேக் லவ்' என்கிற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருக்கிறார். மேலும், 'Peace over drama & distance over disrespect' என்கிற கேப்ஷனுடன் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.