Published:Updated:

பென்ஸ், மினி கூப்பர் - ஆல்யாவிற்கு கார்களாக பரிசளிக்கும் சஞ்சீவ்... வைரலான புகைப்படங்கள்!

ஆல்யா - சஞ்சீவ்

மகள் அய்லா பிறந்த பிறகு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்து மீண்டும் சின்னத்திரைக்குள் கதாநாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்தார், ஆல்யா.

பென்ஸ், மினி கூப்பர் - ஆல்யாவிற்கு கார்களாக பரிசளிக்கும் சஞ்சீவ்... வைரலான புகைப்படங்கள்!

மகள் அய்லா பிறந்த பிறகு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்து மீண்டும் சின்னத்திரைக்குள் கதாநாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்தார், ஆல்யா.

Published:Updated:
ஆல்யா - சஞ்சீவ்

'ராஜா ராணி' தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமான ஜோடி ஆல்யா - சஞ்சீவ். இந்தத் தொடரில் நடிக்கும்போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆல்யா - சஞ்சீவ்
ஆல்யா - சஞ்சீவ்

ஆல்யாவிற்கு கார் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் முதன்முறையாகக் கர்ப்பமாக இருந்தபோது அவருக்குப் பரிசளிக்க விரும்பிய சஞ்சீவ் அவருக்காக பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்திருந்தார். அவர்களுடைய மகள் அய்லாவின் முதல் பிறந்தநாளின் போது மீண்டும் மினி கூப்பர் ஒன்றை பரிசளித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மகள் அய்லா பிறந்த பிறகு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்து மீண்டும் சின்னத்திரைக்குள் கதாநாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்தார், ஆல்யா. 'ராஜா ராணி சீசன் 2'வில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் மீண்டும் கர்ப்பமானார். ஒன்பது மாதம் வரையில் ஷூட்டிங் சென்று நடித்துக் கொண்டிருந்தவர் சமீபத்தில்தான் அந்தத் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகினார்.

ஆல்யா - சஞ்சீவ்
ஆல்யா - சஞ்சீவ்

இந்தத் தம்பதியினருக்குத் தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த உற்சாகத்தில் சஞ்சீவ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக வாங்கிய மற்றொரு பென்ஸ் கார் புகைப்படத்துடன், 'இப்போது எங்களுடைய குடும்பம் முழுமை அடைந்துவிட்டது. நன்றி ஆல்யா!' எனப் பதிவிட்டிருக்கிறார். அவருடைய ரசிகர்கள் பலரும் 2020ல் வாங்கிய கார் புகைப்படத்தையும், 2022ல் வாங்கிய கார் புகைப்படத்தையும் இணைத்து சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.