Published:Updated:

'நண்பர்கள் ஏற்பாடு செய்த வளைகாப்பு!' - நெகிழும் சசிகலா!

வளைகாப்பு நிகழ்வில் சசிகலா

நீலிமா அக்காவுடைய வளைகாப்புக்குப் போயிருந்தோம். அங்கே தான் ஶ்ரீதேவி அக்காவும், அசோக் அண்ணாவும் கிறிஸ்துமஸ் பார்ட்டி, அதோட சேர்ந்து பாப்பாவோட 6-வது மாத பிறந்தநாள் செலிப்ரேஷன் இருக்கு கண்டிப்பா வந்திடுன்னு சொன்னாங்க

'நண்பர்கள் ஏற்பாடு செய்த வளைகாப்பு!' - நெகிழும் சசிகலா!

நீலிமா அக்காவுடைய வளைகாப்புக்குப் போயிருந்தோம். அங்கே தான் ஶ்ரீதேவி அக்காவும், அசோக் அண்ணாவும் கிறிஸ்துமஸ் பார்ட்டி, அதோட சேர்ந்து பாப்பாவோட 6-வது மாத பிறந்தநாள் செலிப்ரேஷன் இருக்கு கண்டிப்பா வந்திடுன்னு சொன்னாங்க

Published:Updated:
வளைகாப்பு நிகழ்வில் சசிகலா

தொகுப்பாளர், நடிகை என பன்முக கலைஞராக வலம் வந்தவர், சசிகலா. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'ஒளிமயமான எதிர்காலம்' என்கிற ஆன்மிக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் தற்போது பிரசவத்திற்காக பிரேக் எடுத்திருக்கிறார். அவருடைய மீடியா நண்பர்கள் அவருக்கு சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

வளைகாப்பு நிகழ்வில் சசிகலா
வளைகாப்பு நிகழ்வில் சசிகலா

நீலிமா அக்காவுடைய வளைகாப்புக்குப் போயிருந்தோம். அங்கே தான் ஶ்ரீதேவி அக்காவும், அசோக் அண்ணாவும் கிறிஸ்துமஸ் பார்ட்டி, அதோட சேர்ந்து பாப்பாவோட 6-வது மாத பிறந்தநாள் செலிப்ரேஷன் இருக்கு கண்டிப்பா வந்திடுன்னு சொன்னாங்க. அவங்க வீட்ல வெச்சு செலிப்ரேஷன்னு சொன்னதால எனக்கு எந்த சந்தேகமும் வரலை. ஆனா, அவங்க நேரடியா என் கணவர் பிரபாகிட்ட சொல்லி வளைகாப்புக்கு பிளான் பண்ணியிருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏற்கெனவே, அக்‌ஷயாவும், ஸ்வேதாவும் இதே மாதிரி வளைகாப்பு நடத்தலாம்னு திட்டமிட்டிருந்ததால அவங்களும் ஶ்ரீதேவி அக்கா கூட ஜாயின் பண்ணிட்டாங்க. அக்காவுடைய வீட்டில் தான் பார்ட்டி..சரியா 6.30 மணிக்கு வந்திடுங்கன்னு எங்ககிட்ட சொல்லியிருந்தாங்க. லேட் ஆகிட்டதால அக்‌ஷயா ஃபோன் பண்ணி, 'பாப்பாவுக்கு கேக் கட் பண்ணாம உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. சீக்கிரம் வாங்க'ன்னு திட்டினா. எப்பவுமே ஏதாச்சும் பங்ஷன்னா நாங்க வர்ற வரைக்கும் தேவி அக்கா வெயிட் பண்ணுவாங்க. அதனால, பிரபாவை சீக்கிரம் ரெடியாகுன்னு கிளப்பி கூட்டிட்டு போனேன்.

வளைகாப்பு நிகழ்வில் சசிகலா
வளைகாப்பு நிகழ்வில் சசிகலா

அங்கே போன பிறகுதான் எனக்கு வளைகாப்பு ஃபங்ஷன்னு தெரிஞ்சது. அப்புறம் அதை ரசிக்க ஆரம்பிச்சிட்டேன். இதுவரை என்னுடைய பிரெண்ட்ஸ் நிறைய பேருக்கு நான் சர்ப்ரைஸ் பண்ணியிருக்கேன். ஆனா, என் பிரெண்ட் சர்க்கிளில் எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது இதுதான் முதன்முறைங்கிறதனால தொம்ப சந்தோஷமா இருந்தது.

என்னோட ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்கிட்ட வீடியோ வாங்கியிருந்தாங்க. பன் & எமோஷன் கலந்த கலவையா இருந்துச்சு. சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் கொடுத்து என்னை அழ வெச்சிட்டு இருந்தாங்க. ஶ்ரீதேவி அக்காகூட 'கல்யாண பரிசு' சீரியலில் ஒர்க் பண்ணினேன். அப்போதிலிருந்து இப்ப வரைக்கும் எங்களுக்குள்ள நல்ல பாண்டிங் இருக்கு. அவங்க அம்மா சூப்பரா சமைப்பாங்க. செட்ல எல்லாருக்கும் அக்கா சமைச்சு எடுத்துட்டு வருவாங்க. அவங்களுடைய எல்லா பங்ஷனுக்கும் என்னை கூப்டுவாங்க.. நாங்களும் அப்படித்தான்! சமீபத்தில் 'அரண்மனைக்கிளி' சீரியலில் ரெண்டு மாதம் நானும், அக்காவும் சேர்ந்து ஒர்க் பண்ணினோம். அந்த பாண்ட் மறுபடி ரீ கிரியேட் ஆகிடுச்சு. பிரபாவும், அசோக் அண்ணனும் குளோஸ் ஆகிட்டாங்க. அப்படித்தான் எங்களுடைய ப்ரெண்ட்ஷிப் வளர்ந்தது.

வளைகாப்பு நிகழ்வில் சசிகலா
வளைகாப்பு நிகழ்வில் சசிகலா

ஸ்வேதா, அவளோட அம்மா, அக்‌ஷயா, ஶ்ரீதேவி அக்கா, அவங்க அம்மா, அசோக் அண்ணா, குட்டி பாப்பான்னு எல்லாருடனும் பேபி ஷவர் பங்ஷன் செலிபிரேட் பண்ணினதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்!

இன்னும் 10 நாள் தான் டெலிவரிக்கு டைம் இருக்கு. புது வருடத்தில் எங்களோட புது சொந்தத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!' என்றார்.