Published:Updated:

`ஆயிஷா -விஷ்ணுவுக்காக மேல் திருப்பதிக்கு நடந்தே போனேன்!' - `சத்யா’ இந்திரன் ஷேரிங்ஸ்

இந்திரன், ஆயிஷா, விஷ்ணு
இந்திரன், ஆயிஷா, விஷ்ணு

கல்யாண சீக்வன்ஸுக்குப் பிறகு சத்யா சீரியல் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. 

அண்மையில் கானா பாட்டு, ஊர்வலம் என கங்கா நகரை அதகளப்படுத்தியுள்ளது சத்யா சீரியல் டீம். விஷ்ணு - ஆயிஷா ஜோடிக்குப் பிறகு சீரியலில் முக்கியத்துவம் பெற்ற கேரக்டர் என்றால் அது குள்ளபூதம் ரோல்தான். `குள்ள பூதம்’ இந்திரன் ஆன் ஸ்கீரினில் மட்டுமின்றி ஆஃப் ஸ்கிரீனிலும் ஆயிஷா, விஷ்ணுவுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட். நட்பு, வேண்டுதல், டான்ஸ் என பல்வேறு விஷயங்களை இந்திரன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்திரன், ஆயிஷா, விஷ்ணு
இந்திரன், ஆயிஷா, விஷ்ணு

``சத்யா - பிரபுவின் திருமண எபிஸோட்டைவிட மறுவீட்டு அழைப்பு எபிஸோட் எங்களுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்திருக்கு. கானா பாட்டு, டான்ஸுன்னு ஒரே கொண்டாட்டமா இருந்துச்சு. இதற்கு முக்கியக் காரணம் எங்க ஸ்கிரிப்ட் ரைட்டர்.

கானா பாடகர், இசைக் கலைஞர்களை அழைத்து வந்து காட்சிகளைப் படம் பிடிச்சாங்க. நானெல்லாம் அந்தளவுக்கு டான்ஸ் ஆடமாட்டேன். ஆனால், கானா மியூசிக் என்னையும் ஆட வெச்சிடுச்சு.

வளசரவாக்கம் கங்கா நகரில்தான் ஷூட் நடந்துச்சு. மக்கள் கூடிட்டாங்க. அவங்களும் டான்ஸ் ஆட வந்துட்டாங்க. ரொம்ப லைவ்வா இருந்துச்சு அந்தக் காட்சி. ஸ்கூல் பிள்ளைகள் ஆண்டுவிழாவில் எப்படி என்ஜாய் பண்ணுவாங்களோ அப்படி பண்ணோம் நாங்க. `அட ஆடாம நில்லுங்கப்பா ஷூட் போய்ட்டிருக்கு’-ன்னு இயக்குநர் எங்களிடம் கெஞ்சாத குறை.

இந்திரன்
இந்திரன்

ஆயிஷாவும் விஷ்ணுவும் ஆன் ஸ்கிரீன்ல என்னை எப்படி கலாய்கிறாங்களோ ரியல் லைஃப்ல அதைவிட அதிகம ஓட்டுவாங்க. பர்சனல் பிரச்னையெல்லாம் முடிஞ்சு இப்போ ஆயிஷா கொஞ்சம் நிம்மதியா இருக்கு.

ரெண்டு பேரும் திடீர்னு எங்கயாச்சு போலாம்னு பிளான் பண்ணிட்டு வா போலாம்-னு என்னைக் கூட்டிட்டு போய்டுவாங்க. அப்படித்தான் போன மாசம் திருப்பதி போலாம் வாடா-ன்னு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. நானும் நம்பி போனேன்.

இந்திரன், ஆயிஷா, விஷ்ணு
இந்திரன், ஆயிஷா, விஷ்ணு

கீழ் திருப்பதி வந்ததும் காரில் இருந்து இறங்கி வா நடக்கலாம்-ன்னு சொல்றாங்க. என்னது நடக்கணுமா-ன்னு நான் ஷாக் ஆயிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது அவங்க ரெண்டு பேரும் மேல் திருப்பதிக்கு நடந்தே வர்றோம்னு வேண்டிக்கிட்டாங்களாம்.

`அடப் பாவிங்களா நீங்க வேண்டிக்கிட்டு, என்னை ஏண்டா கூட்டிட்டு வந்தீங்க’-ன்னு பதறிட்டேன். வேற வழி... நட்புக்காக நானும் மலையேறினேன். 3,550 படி.. பாதி வழி போனதும் என் கிட்னி, குடல், லிவர்லாம் வெளிய வர அளவுக்கு உடம்பு வலி. ஆயிஷா ஜாலியா படி ஏறி வந்துச்சு. இதற்கு நடுவுல ரசிகர்கள் எங்கள சூழ்ந்து செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க. ஆயிஷா தெலுங்கு சீரியல்ல நடிப்பதால், ஆந்திரா ஃபேன்ஸ் நிறைய பேர் வந்து பேசினாங்க.

இந்திரன், ஆயிஷா, விஷ்ணு
இந்திரன், ஆயிஷா, விஷ்ணு

ஒரு வழியா மலை ஏறி சாமி கும்பிட்டோம். ஏதும் வேண்டுதல் இல்லாம மலை ஏறக் கூடாதுன்னு சத்யா சீரியல் நல்லாப் போகணும், நான் சீக்கிரமா வீடு கட்டு முடிக்கணும்-னு வேண்டிக்கிட்டேன். வீட்டுக்கு வந்து நாலு நாள் எந்திரிக்கவே இல்ல. ரெண்டு கிலோ குறைஞ்சிட்டேன்.

சாதி மதம்லாம் தாண்டினது எங்களோட நட்பு. ஆயிஷா தர்கா கூப்பிட்டா கூட நானும் விஷ்ணுவும் போவோம்.

இந்திரன், ஆயிஷா, விஷ்ணு
இந்திரன், ஆயிஷா, விஷ்ணு

அதே மாதிரி விஷ்ணுவுக்கு பக்தி அதிகம். அவனுக்காகத் தான் ஆயிஷா முழு மனசோடு 3,550 படி ஏறுச்சு. நானும் தான்..’’ என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு