Published:Updated:

கொட்டும் மழையில் நடந்த 'செம்பருத்தி' ஷபானா திருமணம்... 'பாக்கியலட்சுமி' ஆர்யனை கரம்பிடித்தார்!

திருமணத்திற்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்தார் ஷாபனா!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் 'செம்பருத்தி'. இந்தத் தொடரில் நாயகியாக ஷபானா நடித்துக் கொண்டிருக்கிறார்.

'பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஆர்யனை' ஷபானா காதலிப்பதாக சமீபத்தில் இருவரும் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்தனர். இந்நிலையில், இன்று (11.11.2021) அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் காதலை உறுதிப்படுத்திய `செம்பருத்தி' ஷபானா... காதலருடன் வெளியிட்ட புகைப்படம் வைரல்!
ஷபானா-ஆர்யன் திருமணம்!
ஷபானா-ஆர்யன் திருமணம்!

இந்நிலையில் இன்று காலை ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், 'வேலைக்காக சென்னைக்கு வந்தேன்.. சென்னையில் செட்டில் ஆவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. சீரியல் முடிச்சிட்டு மறுபடி ஊருக்கு போகணும்னு தான் நான் முடிவு பண்ணியிருந்தேன். ஆனா, கடவுளோட திட்டம்.. நான் சென்னையிலேயே செட்டில் ஆகுற மாதிரி ஆகிடுச்சு. நீங்க எல்லாரும் எப்ப கல்யாணம்னு கேட்டுட்டே இருந்தீங்க.. அதுக்காகத்தான் இந்த வீடியோ.. இன்னைக்கு எனக்கு கல்யாணம்.. உங்க எல்லாரோட வாழ்த்தும் எனக்கு தேவை.. !' என பதிவிட்டிருக்கிறார் ஷாபனா.

இன்ஸ்டாகிராமில் காதலை உறுதிப்படுத்திய `செம்பருத்தி' ஷபானா... காதலருடன் வெளியிட்ட புகைப்படம் வைரல்!
ஷபானா-ஆர்யன் திருமணம்!
ஷபானா-ஆர்யன் திருமணம்!

சமூக வலைதளங்களில் பலரும் இந்த தம்பதியினருக்கு திருமண வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வாழ்த்துகள் ஷபானா - ஆர்யன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு