Published:Updated:

`அரேஞ்ச்டு மேரேஜ்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க!’ - கல்யாண குஷியில் `செம்பருத்தி’ கதிர்

`செம்பருத்தி’ கதிர்
`செம்பருத்தி’ கதிர்

``எங்க வீட்டுல இருந்து 6 பேர், அவங்க வீட்டுல நடந்ததால கூடுதலா கொஞ்சம் பேர்னு மொத்தம் 20 பேர்தான் நிச்சயதார்த்தத்துல கலந்துகிட்டாங்க.''

சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்ற ப்ரைம் டைம் தொடர் `செம்பருத்தி.’ இந்த சீரியலில் ஹீரோவின் தம்பியாகக் கலகலப்பூட்டும் கேரக்டரில் நடித்து வருபவர் கதிர். கோயம்புத்தூரில் உள்ளூர் சேனலில் ஆங்கராகக் கரியரைத் தொடங்கியவர் தற்போது சீரியல் நடிகராக நடித்து வருகிறார்.

நீண்ட நாள்களாக இவரது வீட்டில் இவருக்கு திருமணத்துக்குப் பெண் பார்த்து வந்த நிலையில் கடந்த ஜூலை 2-ம் தேதி இவரது நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடந்துள்ளது.

கதிர் நிச்சயதார்த்தம்
கதிர் நிச்சயதார்த்தம்

கதிரிடம் பேசினேன். ``பொண்ணு பேரு சிந்து. ஊர் திருச்சி. சென்னையில பிரபல சாஃப்ட்வேர் கம்பெனியில கம்ப்யூட்டர் இன்ஜினீயரா வேலை பார்த்துக்கிட்டுருக்காங்க. படிப்புல படுசுட்டியாம். யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர். எங்க அப்பா அம்மா பார்த்து, நான் கட்டிக்கப் போற பொண்ணு. `அரேஞ்டு’னு சொல்ல வந்தேன். ஏன் இதை அழுத்திச் சொல்றேன்னா நிறைய பேர் நம்ப மாட்டேங்கிறாங்க ப்ரோ’’ என்றவரிடம், இந்தக் கொரோனா நேரத்தில் நடத்தியது குறித்துக் கேட்டேன்.

`செம்பருத்தி’, `பாண்டியன் ஸ்டோர்ஸ்’லாம் இன்னும் 3 நாள்கள்தானா?! - என்ன சொல்கிறது சேனல்கள்

‘’எனக்கு பொண்ணு பார்த்தே வீட்டுல டயர்டு ஆகிட்டாங்க. சினிமாக்காரன்னாலே பொண்ணுங்க தெறிச்சு ஓடுறாங்களே. ஏதோ இந்தப் பொண்ணு கட்டிக்கறேன்னு சொல்றப்ப சட்டுபுட்டுனு முடிச்சுடலாம்னுதான்.

இ-பாஸ் நடைமுறைகள்லாம் இருந்ததால எங்க வீட்டுல இருந்து 6 பேர், அவங்க வீட்டுல நடந்ததால அங்க கூடுதலா கொஞ்சம் பேர்னு மொத்தம் 20 பேர் வரைக்கும்தான் கலந்துகிட்டாங்க.

‘செம்பருத்தி’ டீம்ல இருந்து ஒருவரைக்கூட கூப்பிட முடியலைன்னு நினைச்சப்ப வருத்தமாத்தான் இருந்தது. ஆனா, அவங்களும் சூழலைப் புரிஞ்சுக்கிட்டாங்க. வீடியோ கால் போட்டு அன்றைக்கு எல்லோரும் வாழ்த்தினாங்க.

கதிர்
கதிர்

`கல்யாணத்துக்காவது கூப்பிடுவியா’னு கேட்டாங்க சிலர். அதுக்கும் என்னால `சரி’னு தலையாட்ட முடியலை. ஏன்னா, ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் கல்யாணத்தை நடத்திடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். தேதி இன்னும் முடிவாகலை. ஆனா, நிச்சயம் கொரோனா இந்த ரெண்டு மாசத்துக்குள்ள போயிடும்னு எனக்குத் தோணலை.

அதனால எல்லார்கிட்டயும் அட்வான்ஸா `சாரி’ கேட்டுக்கிறேன். சூழல் மாறினதும் தனியா நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி வச்சிட வேண்டியதுதான்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு