Election bannerElection banner
Published:Updated:

‘’நான் யாரையும் ஏமாத்தல... எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆனது ஊருக்கே தெரியும்!’’ - டிவி நடிகை ஜெனிஃபர்

ஜெனிஃபர்
ஜெனிஃபர்

நேற்று முன்தினம் நவீன் வீட்டாருக்கும், ஜெனிஃபர் வீட்டாருக்கும் இடையில் அடிதடி நடந்து போலீஸ் வரை புகார் போய் விட்டதாகத் தகவல்கள்.

’செம்பருத்தி’ சீரியலில் ஆரம்பத்தில் ஹீரோ ஆதியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் கேரக்டரில் நடித்தவர் நகைச்சுவை நடிகை ஜெனிஃபர். சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவ இவர் கடந்த 2019-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். ட்ராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த சரவணன் என்பவரோடு இவருக்கும் திருமணம் நடைபெற்றது.

ஆனால், தம்பதியினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சின்னத்திரையில் உதவி இயக்குநராக இருக்கும் நவீன் என்பவருடன் ஜெனிஃபர் பழகி வருவதாகவும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் கசிந்தன.

ஜெனிஃபர்
ஜெனிஃபர்

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் நவீன் வீட்டாருக்கும், ஜெனிஃபர் வீட்டாருக்கும் இடையில் அடிதடி தகராறு நடந்து போலீஸ் வரை புகார் போய் விட்டதாகத் தகவல்கள்.

என்ன நடந்தது என ஜெனிஃபரிடமே கேட்டேன்.

‘’சரவணனுக்கும் எனக்குமிடையில் விவாகரத்து வழக்கு போயிட்டிருக்கிறது உண்மை. அந்த வழக்கு முடிவடைஞ்சு விவாகரத்து கிடைச்சதும் நானும் நவீனும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சிருந்ததும் உண்மை.

நவீன் வீட்டுக்காரங்களுக்கும் இதெல்லாமே தெரியும். இப்படியிருக்க, ’முதல் கல்யாணத்தை மறைச்சுட்டா’னு ஒரு அபாண்டமான பொய்யை என் மீது சொல்லியிருக்காங்க. நான் யாரையும் ஏமாத்தல. நான் டிவி சீரியல்ல நடிக்கிறேன். எனக்கு கல்யாணம் முடிச்சது ஊருக்கே தெரியும். நவீனுக்கும் அவரது வீட்டாளுங்களுக்கும் மட்டும் எப்படித் தெரியாமப் போகும்?

ஜெனிஃபர்
ஜெனிஃபர்

நான் நவீனைத் திருமணம் செய்யலாம்னு நினைச்சது உண்மைதான். ஆனா, சமீபமா அவரோட நடவடிக்கைகள்ல கொஞ்சம் மாற்றம் தெரிஞ்சது. அதனால நான் கொஞ்சம் யோசிக்கணும்னு முடிவு செஞ்சேன். முதல் திருமண வாழ்க்கை தோல்வியில முடிஞ்ச மாதிரி இதுவும் ஆகிடக் கூடாதுனு நினைச்சேன். இது தப்பா?

ஆனா அவங்க தரப்புல பணம் கேட்டு டார்ச்சர் செஞ்சாங்க. இனியும் இது சரிப்பட்டு வராதுனு நினைச்சுத்தான் சுத்தமா அந்தத் திருமண எண்ணத்தையே கை விட்டுட்டேன். உடனே கடுப்பாகி இல்லாததையும் பொல்லாததையும் பரப்பி விடுறதோட எங்க வீட்டுக்கே வந்து தகராறு செய்றாங்க. நவீன் அப்பா காவல் துறையில வேலை பார்க்கிறதால தன்னுடைய பதவியையும் தப்பா பயன்படுத்தி என்னைப் பத்திப் பொய்யான செய்தியைப் பரப்பி விட்டிருக்காங்க.

நான் இதை சட்டபூர்வமா எதிர்கொள்ளலாம்னு இருக்கேன்’’ என்றார் ஜெனிஃபர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு