Published:Updated:

" 'செம்பருத்தி’யோட ரீச் எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கு..!’’ - பிரியா ராமன்

பிரியா ராமன் நடித்த 'வள்ளி' படத்தில் இடம்பெற்ற 'என்னுள்ளே...' பாடலை எளிதில் மறந்திருக்க முடியாது. தொடர்ந்து பல படங்களில் நடித்தவர், சிறிது இடைவெளிக்குப் பிறகு கமிட் ஆனது 'ஜி தமிழில்' தற்போது ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' சீரியலில்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'ஜி தமிழ்' சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'செம்பருத்தி' சீரியலில் அகிலாண்டேஸ்வரியாக நடித்து வருபவர் பிரியா ராமன். 2017 அக்டோபரில் ஆரம்பித்து இதுவரை 460 எபிசோடையும் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது.

பிரியா ராமன்
பிரியா ராமன்

அகிலாண்டேஸ்வரி என்கிற பெயரை வைத்துத்தான் பிரியா ராமனை அழைக்கிறார்களாம். ஷூட்டிங் பரபரப்பில் இருந்த பிரியா ராமனிடம் பேசினேன்.

''இரண்டு வருடங்களைக் கடந்து தற்போதும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் 'செம்பருத்தி' சீரியலில் நடிப்பது எப்படி இருக்கிறது?''

'நிஜமாகவே செம்ம திருப்தியாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. கதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான டுவிஸ்டை கொடுத்துட்டே இருக்கு. வாரத்துக்கு வாரம் இன்னும் புது புது ரியாக்‌ஷன் மற்றும் பரிணாமத்தை எனக்குள் செலுத்திட்டே இருக்கிறேன். தமிழின் முக்கியமான ஹீரோயினாக இருந்த நான் இப்போது இதுவரை செய்திராத ஒரு பாசிட்டிவான, வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிப்பது நிச்சயமாக சவாலான விஷயம். அதை செய்கிறேன் என்கிற திருப்தியும் இருக்கு. கூடவே, பெண்களிடமிருந்து செம்ம ரெஸ்பான்ஸ் கிடைச்சிட்டே இருக்கு. நீங்கள் எங்களுக்கு ரோல் மாடல் மாதிரி'னு சொல்றாங்க. இதெல்லாம் எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கு'''

பிரியா ராமன்
பிரியா ராமன்

''ஹிட் படங்களில் நடித்த ஹீரோயினான நீங்கள் இப்போது சீரியலும் அதே உயரத்தைப் பிடித்திருக்கிறீர்கள்.. எப்படி உணர்கிறீர்கள்..?''

''ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் சில சறுக்கல்கள் இருக்கும். அதை தாண்டி வராமல் யாராலும் சக்சஸ் என்கிற ஒரு விஷயத்தை பெறவே முடியாது. அப்படி, ஹீரோயினாக நடித்து முடித்தப் பிறகு கொஞ்ச காலம் என் குழந்தைக்காக பிரேக்கில் இருந்தேன். அப்போதுதான் இந்த வாய்ப்பு வந்தது. கதைப் பிடித்திருந்தது. ஓ.கே சொன்னேன். இப்போது அகிலாண்டேஸ்வரி ஒவ்வொரு குடும்பத்திலும் முக்கியமான நபராகிவிட்டார். இன்னும் சொல்லப்போனால் நானும் கிட்டத்தட்ட அகிலாண்டேஸ்வரி மாதிரிதான்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'இந்த கேரக்டர்தான் உங்களை மாற்றியிருக்கும் என்று நினைத்தோம்.. அப்படியில்லையா..?''

''கண்டிப்பாக இல்லை. நான் அகிலாண்டேஸ்வரி மாதிரிதான் சரியான விஷயத்தை எப்போதுமே செய்ய தைரியமாக செய்வேன். எதற்கும் கவலைப்படமாட்டேன். என்னுடன் பழகியவர்களுக்கும் சரி, என்னுடன் இருப்பவர்களுக்கும் சரி என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். அகிலாவுக்கும் எனக்கும், ஒரே ஒரு வித்தியாசம்தான். நான் ஒரு விஷயத்தை தீர்க்கமாக முடிவு செய்துதான் அதை கையில் எடுப்பேன். ஆனால், அகிலா கோபத்தில் சில நேரம் சட்டென முடிவெடுப்பார். அதே நேரம், தவறு என்று தெரிந்துவிட்டால் மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டார். எனக்குள் உண்மையில் இருக்கும் இந்த தைரியம் என் அப்பா, அம்மா கொடுத்தது.''

பிரியா ராமன்
பிரியா ராமன்

''நீங்கள் நடிப்பதற்கு ஆரம்பத்தில் எந்த எதிர்ப்பும் எழவில்லையா..?''

''நான் ரொம்ப நன்றாகப் படிக்ககூடிய ஆள். படிப்பு விஷயத்தில்தான் சாதிக்க வேண்டும் என என்னைச் சுற்றி நினைத்துக் கொண்டிருந்தார்கள். 'எனக்கு நடிக்கத்தான் பிடிச்சிருக்கு' என நான் சொன்னதும் வீட்டில் கொஞ்சம் கலக்கம் இருந்தது. இருந்தாலும், 'அவளுக்கு பிடிச்சிருக்குனா அதையே செய்யட்டும். எதிர்காலத்தில் என்னை விட்டிருந்தால் சிறந்த நடிகையாகியிருப்பேன்'னு சொல்லிடக்கூடாது'னு அனுமதிச்சாங்க. அதை இப்போ நிரூபிச்சிட்டேன். ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து நடிகையாக அனுமதிப்பதெல்லாம் எங்கள் காலத்தில் அவ்வளவு கஷ்டம். இப்போது நடிக்கிறது ரொம்ப ஈஸியாகிடுச்சு. எத்தனையோ சிரமங்களைத் தாண்டி நல்ல நிலைமைக்கு வந்துவிட்டேன்''

குடும்பம், குழந்தைகள் என இப்போ சந்தோஷமா இருக்கேன்
பிரியா ராமன்

''நீங்கள் பிசியாக இருக்கும் நேரத்தில் உங்கள் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?''

''எனக்கு என் அப்பா, அம்மா என்றால் அளவுக்கடந்த பாசம். எல்லோருக்குமே பெற்றோர் மீது பாசம் இருக்கும். இருந்தாலும், என்னுடைய உலகமே என் அப்பா, அம்மாவிலிருந்துதானே ஆரம்பிக்கிறது. அவங்க இல்லாம எப்படி இந்த உலகத்தை என்னால் பார்த்திருக்க முடியும். அதனால்தான், இப்போதுவரை என் பெற்றோரை என்னுடனே இருக்க வச்சிருக்கேன். நான் ஷூட்டிங், வெளியூர் என சென்றுவிட்டால் என் அப்பா, அம்மாதான் என் இரண்டு பசங்களையும் பார்த்துக்கிறாங்க. நான் தாமதமாக வரும் நாட்களில், என் அப்பாக்கூடத்தான் படுத்து தூங்குறாங்க. என் அம்மா கையால்தான் சாப்பிடுறாங்க. என் அப்பா அப்டேட்டாக இருப்பார்''

பிரியா ராமன்
பிரியா ராமன்

''உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்களேன்..?''

''அப்பா ராமன், அம்மா ராதா. எனக்கு ஒரு தங்கை பிரபா இருக்காங்க. என் கணவர் ரஞ்சித். என் மகன்கள் ஆதித்யா ஏழாம் வகுப்பு படிக்கிறார், ஆகாஷ் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அப்பா ஹைட், வெயிட் என அப்படியே இருக்காங்க. அவங்களுடைய வளர்ச்சிக்கு எப்போதும் நான் தடையாக இருக்கமாட்டேன். எல்லாம் பெரிய பசங்களாகிட்டாங்க. எல்லாத்துக்கும் அம்மாவை தேடமாட்றாங்க. பிஸ்கட் டப்பா இருந்தால்கூட நான் எடுத்து கொடுப்பேன். இப்போ அவங்களே வளர்ந்ததால் அவங்களே எடுத்துக்கிறாங்க. இந்த விஷயஙக்ள் எல்லாம் சில நேரம் கஷ்டப்படுவேன். இது எல்லாருக்கும் நடக்குறதுதானே. இதுதான் என் குடும்பம். என்னுடைய வேலைகளில் என் கணவரும் தலையிட மாட்டார். நானும் அவருடைய வேலைகளில் தலையிடமாட்டேன். ஒரு இடத்தில் நிம்மதியாக வேலைப் பார்க்க குடும்பம் ஒத்துழைக்கணும். எல்லாப் பிரச்னைகளையும் இழுத்துப்போட்டுட்டு கண்டிப்பாக வெளியில் வேலைப் பார்க்கவே முடியாது. எனக்கு குடும்பம், வேலை இரண்டும் சரியான நேரத்தில் கிடைத்திருப்பது ஒரு கொடுப்பனை. என் குடும்பம், குழந்தைகள் என இப்போ சந்தோஷமா இருக்கேன்''.

''உங்கள் கணவர் ரஞ்சித் பா.ம.கவிலிருந்து விலகக் காரணம்?''

''நான் முன்பே சொன்னதுபோலதான். அவருடைய விருப்பம், வேலைகளில் நான் என்றைக்குமே மூக்கை நுழைச்சது கிடையாது. சில கருத்து வேறுபாடுகளால் அந்த கட்சியிலிருந்து பிரிந்து வந்துவிட்டார். இப்போது, அண்ணன் டி.டி.வி.தினகரன் கட்சியில் இணைந்திருக்கிறார். நல்ல மாற்றத்திற்காக காத்திருக்கிறார்'' என்று முடித்தார் பிரியா ராமன்.

" 'செம்பருத்தி’யோட ரீச் எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கு..!’’ - பிரியா ராமன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு