Published:Updated:

`` பெரிய நடிகருடன் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பை தவறவிட்டுட்டேன்!" பர்சனல் பகிரும் 'செம்பருத்தி' கதிர்

'செம்பருத்தி' கதிர்
News
'செம்பருத்தி' கதிர்

'கோயில் விழாக்களில் நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் பின்நாளில் அந்த விழா மேடைகளிலேயே சிறப்பு விருந்தினராக மைக் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார். லோக்கல் சேனல் ஆங்கராக தன் மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் இன்று சக்ஸஸ்புள் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..!'

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' தொடரில் செக்கண்ட் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார், விஜே கதிர். 'கோயில் விழாக்களில் நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் பின்நாளில் அந்த விழா மேடைகளிலேயே சிறப்பு விருந்தினராக மைக் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார். லோக்கல் சேனல் ஆங்கராக தன் மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் இன்று சக்ஸஸ்புள் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..!'

'செம்பருத்தி' கதிர்
'செம்பருத்தி' கதிர்

சீரியலில் நடிக்கும்போதே 'ஜில் ஜங் ஜக்'னு ஒரு ஷோ எனக்கு கொடுத்தாங்க. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் அந்த ஷோ போச்சு. ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் அந்த ஷோ ஒளிபரப்பாகும். அந்த ஷோ முடிஞ்சு கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு பிறகு, 'மாஸ்டர் தி பிளாஸ்டர்'னு ஒரு ஷோ கொடுத்தாங்க. முதல் மூன்று எபிசோட் நானும், ஆனந்தியும் தான் ஆங்கரிங் பண்ணினோம். தொடர்ந்து சீரியல் ஷூட்டிங் இருந்ததனால தேதி பிரச்னைகள் வந்துச்சு. அதனால, அந்த ஷோவைத் தொடர்ந்து பண்ண முடியாம போச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என் அப்பா லாரி டிரைவர். அம்மா, கட்டட வேலைக்குப் போயிட்டு இருந்தாங்க... அப்பா, அவர் லாரி பின்னாடி சீரியலில் நான் இருக்கிற போஸ்டரை ஒட்டி வச்சிருக்கார். கேட்கிற எல்லார்கிட்டேயும் இது என் பையன்னு பெருமையா சொல்லுவார். அதே மாதிரி, 'பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர்' என்கிற கேட்டகரியில் ஜீ தமிழ் விருது , 'செம்பருத்தி' தொடருக்காக எனக்கு கிடைச்சது. அந்த விருதை என் அம்மாவுக்காக சமர்பித்தேன். என் ஃபேமிலி இல்லைனா இந்த அளவுக்கு என்னால வந்திருக்க முடியாது. என் குடும்பம் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்! ஃபேமிலின்னு சொன்னாலே எமோஷனல் ஆகும் டைப் நானு!

'செம்பருத்தி' கதிர்
'செம்பருத்தி' கதிர்

சீரியல் தொடர்ந்து போயிட்டு இருக்கு. ஒரு பெரிய நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. சில தவிர்க்க முடியாத காரணங்களால், அந்த வாய்ப்பு கைநழுவி போயிடுச்சு. நல்ல கதைக்களம் அமைஞ்சா நிச்சயம் வெள்ளித்திரையிலும் சந்திப்போம்!' என்றார். ஆனந்த விகடனில் வெளியான கதிரின் முழு நேர்காணலைப் படிக்க க்ளிக் செய்யவும் ஆங்கர் to ஆக்டர்: “கோயிலில் டான்ஸ் ஆடியதுதான் ஆரம்பம்!”