Published:Updated:

`செம்பருத்தி' ஷபானா - ஜிம் கோச் ஆர்யன் - காதல் மலர்ந்தது எப்படி? அவசரத் திருமணத்தின் பின்னணி என்ன?

ஆர்யனுடன் ஷபானாவின் காதல் எங்கே எப்போது தொடங்கியது? ஏன் இந்த அவசரத் திருமணம்?

செம்பருத்தி' ஷபானா - 'பாக்யலட்சுமி' ஆரியன் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமூக வலைதளத்தின் வழியே முதன்முதலாக இந்த ஜோடி காதலை அறிவித்தபோதே 'ஜீ தமிழ் பொண்ணு, விஜய் டிவி பையன்' என ஆச்சர்யப்பட்டது டிவி உலகம்.

தொடர்ந்து 'எப்போ கல்யாணம்' எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள் ஷபானாவின் ரசிகர்கள். 'இப்பதானே காதலைச் சொல்லியிருக்கிறாங்க, எப்படியும் ரெண்டு மூணு வருஷம் ஆகலாம்' என்றுதான் ஷபானாவுக்கு நெருங்கிய நண்பர்களே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

'செம்பருத்தி' ஷபானா
'செம்பருத்தி' ஷபானா

இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராதபடி திடீரென கடந்த வாரம் இந்த ஜோடியின் திருமணம் நடந்து முடிந்து விட்டது. காதலை அறிவித்த சில மாதங்களிலேயே அவசர அவசரமாக அதேநேரம் சிலர் மட்டுமே கலந்து கொண்ட எளிமையான ஒரு திருமணமாக இந்தத் திருமணம் நடந்ததன் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

ஆர்யனுடன் ஷபானாவின் காதல் எங்கே எப்போது தொடங்கியது? ஏன் இந்த அவசரத் திருமணம்? சின்னத்திரை வட்டாரத்தில் இருவருக்கும் நெருக்கமான சிலரிடம் பேசினேன்.

"ஆர்யனுடைய உண்மையான பெயர் வேலு லக்ஷ்மனன். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஜிம் கோச் ப்ளஸ் மாடல். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சிரியல் மூலமா சீரியலுக்கு அறிமுகமானார். அந்த சீரியல்ல நெகட்டிவ் ரோல். தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வர நடிக்கத் தொடங்கினார். நடிக்க வந்த பிறகே தன்னுடைய பெயரை ஆர்யன்னு மாத்திக்கிட்டார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த திருமணம்... தம்பதிகளான `பூவே பூச்சூடவா' மதன் - ரேஷ்மா!

சென்னையில் சீரியல் ஷூட்டிங் நடக்கிற முக்கியமான ஒரு இடம் பூந்தமல்லியை அடுத்த இ.வி.பி.ஃபிலிம் சிட்டி. எல்லா சேனல்களின் சீரியல் ஷூட்டிங்கும் நடக்கும். அப்படித்தான் 'செம்பருத்தி' ஷூட்டிங்கும் ஆர்யன் நடிக்கிற சீரியலின் ஷூட்டிங்கும் இங்கு நடந்தபோது இருவருக்கும் அறிமுகம் உண்டாகியிருக்கு. பக்கத்துப் பக்கத்து செட்டுங்கிறதால சேனல் பேதமில்லாம எல்லா ஆர்ட்டிஸ்டுகளும் மதிய உணவு இடைவேளைகள்ல சந்திச்சுப் பேசறது வழக்கம்தான்.

ஆர்யன் ஜிம் கோச்னு தெரியவந்ததும், ஏற்கெனவே ஃபிட்னெஸ்க்காக ஜிம் போக நினைச்சிட்டிருந்த ஷபானா அந்த விருப்பத்தை அவரிடம் சொல்ல தனக்குத் தெரிஞ்ச ஜிம்முக்கு ஷபானாவைக் கூட்டிப் போயிருக்கிறார் அவர்.

 ஆர்யன் - ஷபானா
ஆர்யன் - ஷபானா

இப்படியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடங்கி ஜிம்மில் வளர்ந்து கொண்டிருந்த காதலலை இருவருமே ரொம்பநாளாவே ரகசியமாவே வச்சிருந்தாங்க. காரணம் ரெண்டு பேரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவங்க.

அதுவும் போக கேரளாவிலும் மும்பையிலும் வளர்ந்துட்டு, சென்னைக்கு வந்த ஷபானாகிட்ட‌ 'நடிச்சது போதும்'னு சொல்லிட்டிருந்ததாம் அவரது குடும்பம்.

மேலும் ஷபானா வீட்டுல அவருடைய காதல ஏத்துக்கலைனும் சொல்றாங்க. இதனாலேயே அவசர அவசரமா திருமணத்தை நடத்தியிருக்காங்க" என்கின்றனர் இவர்கள்.

எப்படியோ இன்று (நவம்பர் 15) ஆர்யனுக்குப் பிறந்த நாளாம். திருமணத்துக்குப் பிறகு வரும் முதல் பிறந்த நாள் என்பதால் புதுமண தம்பதியரின் கொண்டாட்டங்களுக்கு அளவிருக்காது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு