Published:Updated:

`நான் கை தட்டவில்லை, அது எடிட்டிங்!' - சர்ச்சையான ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நடந்தது இதுதான் - அமுதவாணன்

அமுதவாணன்

ஸ்டேஜ்ல ஏறினதும் பசங்களும் பேச வேண்டிய டயலாக் மறந்து, எடுத்துக் கொடுக்க வேண்டியதாத்தான் இருந்தது.

`நான் கை தட்டவில்லை, அது எடிட்டிங்!' - சர்ச்சையான ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நடந்தது இதுதான் - அமுதவாணன்

ஸ்டேஜ்ல ஏறினதும் பசங்களும் பேச வேண்டிய டயலாக் மறந்து, எடுத்துக் கொடுக்க வேண்டியதாத்தான் இருந்தது.

Published:Updated:
அமுதவாணன்

ஜீ தமிழ் சேனலில் சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான ’ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிதான் தற்போது ஹாட் டாபிக். மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பத் துறை சேனலுக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு சேனலின் பதில் என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. நிகழ்ச்சியில் பிரதமரின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றும் கருத்துச் சுதந்திரம் என்றும் ஒருசாரார் கருத்து தெரிவிக்க, திராவிட சித்தாந்த எண்ணம் கொண்ட சிலர் சேனலுக்குள் இருப்பதாலேயே வம்படியாக இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன; அவர்களை சேனல் வெளியேற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்தச் சூழலில் மேற்கண்ட அந்த நிகழ்ச்சியில் குழ்ந்தைகளுக்கான வழிகாட்டி என்ற பொறுப்பில் இருக்கும் நடிகரும் சின்னத்திரை பிரபலமுமான அமுதவாணனிடம் பேசினேன்.

அமுதவாணன்
அமுதவாணன்

" நிகழ்ச்சி ஒளிபரப்பானதுல இருந்து இப்ப வரைக்கும் நிறைய போன் கால் வந்துட்டேதான் இருக்கு. ஆனா நல்ல வேளையா என்னை யாரும் தவறாப் பேசலை. ‘என்ன சார், உங்க மேல எங்களுக்கு ஒரு மரியாதை இருக்கு. அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பிரதமரைத் தவறாப் பேசியிருக்காங்க. நீங்களும் கைதட்டி ரசிச்சிருக்கீங்களே’னு கேட்டாங்க பொறுமையா அவங்க பேசறதைக் கேட்டு நான் பதில் சொன்னேன்’’ என்றவர் அன்று ஷூட்டிங்கில் நடந்ததையும் அப்படியே விளக்குகிறார்...

"நான் கையெல்லாம் தட்டலை. சொல்லப் போனா அன்னைக்கு ஷூட்டிங்ல எடுத்துகிட்ட கான்செஃப்ட்லயே சுமாரா இருந்த கான்செஃப்ட்னா அதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டேஜ்ல ஏறினதும் பசங்களும் பேச வேண்டிய டயலாக் மறந்து, எடுத்துக் கொடுக்க வேண்டியதாத்தான் இருந்தது. நடுவர்கள் உள்ளிட்ட ஆடியன்ஸே அமைதியாத்தான் இருந்தாங்க. அதனால மார்க் பாத்தீங்கன்னா. 3 தான் கிடைச்சது. அதனால பசங்களை என்கரேஜ் செய்யணும்னு சில இடங்கள்ல நான் கைதட்டினேன்.

உண்மையைச் சொல்லணும்னா, பிரதமரைக் குறிப்பிடுதுன்னு கட்சிக்காரங்க சொல்கிற குறிப்பிட்ட அண்ட இடங்கள்ல நான் கைதட்டவே இல்லை. எடிட்டிங் மூலமா மத்த இடங்கள்ல நான் கைதட்டினதை எடுத்து வந்து அந்த இடத்துல சேர்த்து விட்டுட்டாங்க. பொதுவா ரியாலிட்டி ஷோக்கள்ல இது மாதிரி பண்ணுவாங்க. இது வழக்கம்தான்" என்கிறார் அமுதவாணன்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism