Election bannerElection banner
Published:Updated:

"ஆமாம்... நாங்க சட்டப்படி பிரிஞ்சிட்டோம்"- `பகல் நிலவு’ அஸீம்

அஸீம்
அஸீம்

அஸீமுக்கு சில ஆண்டுகளுக்கு முன் சல்மா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பிறகு சீரியல் பக்கம் வந்தவர் அஸீம். சன் டிவியில் ‘பிரியமானவள்’ விஜய் டிவியில் ‘பகல் நிலவு’, `தெய்வம் தந்த வீடு’, ‘கடைக்குட்டி சிங்கம்’ எனப் பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இதில் ‘பகல் நிலவு’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய தொடர்களில் `பிக்பாஸ்' புகழ் ஷிவானிக்கு ஜோடியாக நடித்தார். ஷிவானியுடன் ‘ஜோடி’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஷிவானி - அஸீம்
ஷிவானி - அஸீம்

அஸீமுக்கு சில ஆண்டுகளுக்கு முன் சல்மா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்தச் சூழலில் அஸீம்-சல்மா இருவருக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டானதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

திருமணம், பிரிவு குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்து வந்த அஸீம் தற்போது முதன் முறையாக தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

"ஆமாம்... நாங்க சட்டப்படி பிரிஞ்சிட்டோம். பரஸ்பரம் ஒப்புக்கொண்டு இந்த விவாகரத்து கிடைத்துள்ளது. ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் பேச நான் விரும்பவில்லை" என்கிறார் அஸீம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு