Published:Updated:

``இந்தப் பிரிவு தற்காலிகமானதுன்னு நம்புறேன்" - மனைவி ரச்சிதா குறித்து தினேஷ்

ரச்சிதா - தினேஷ்

என்னைவிட தைரியசாலி அவங்க. அதனால அவங்களுக்கும் இந்தச் சூழ்நிலையைக் எப்படி கையாள்றதுன்னு தெரியும்.

``இந்தப் பிரிவு தற்காலிகமானதுன்னு நம்புறேன்" - மனைவி ரச்சிதா குறித்து தினேஷ்

என்னைவிட தைரியசாலி அவங்க. அதனால அவங்களுக்கும் இந்தச் சூழ்நிலையைக் எப்படி கையாள்றதுன்னு தெரியும்.

Published:Updated:
ரச்சிதா - தினேஷ்
’சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. பெங்களூருவைச் சேர்ந்த இவர் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் தமிழ்த் தொலைக்காட்சிக்கு அறிமுகமானார். இந்த சீரியலில் ரச்சிதாவின் ஜோடியாக நடித்த தினேஷுக்கும் ரச்சிதாவுக்கும் இடையில் காதல் மலர, சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு நிஜ வாழ்விலும் இனைந்தனர்.

இல்வாழ்க்கை சுமூகமாகப் போய்க் கொண்டிருந்த சூழலில் இருவருக்கும் இடையில் என்ன பிரச்னையோ தெரியவில்லை, கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து தனித் தனியே வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்தான செய்தி முன்பே நம் தளத்தில் வெயிட்டிருந்தோம். அந்த செய்தி

காதல் கணவருடன் பேசி ஒரு வருஷமாச்சு! என்ன ஆச்சு `சரவணன் மீனாட்சி’ ரச்சிதாவுக்கு?

ரச்சிதா, தினேஷ் இருவருமே இது தொடர்பாக வெளிப்படையாகப் பேச மறுத்து வந்தனர்.

ரச்சிதா
ரச்சிதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர்கள் இப்படிப் பேச மறுத்ததாலோ என்னவோ, மேலும் மேலும் இவர்கள் குறித்த தாறுமாறான தகவல்கள் சமூக வலைதளங்களில் வட்டமடிக்கத் தொடங்கின. அதில் உச்சமாக, சிலதினங்களுக்கு முன், ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகக்கூட ஒரு செய்தி வெளியானது.

இந்தச் சூழலில், சமீபத்தில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு இணைச் செயலாளராகத் தேர்வு செய்யப் பட்டார், தினேஷ். சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் அணியினர் வென்ற தேர்தலில் எதிரணியில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார் இவர்.

தேர்தல் வெற்றி தொடர்பாக அவருக்கு வாழ்த்துச் சொல்லி அவரிடம் பேசிய போது, ரச்சிதா குறித்தும் கேட்டோம். அப்போது,

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

’வீட்டுக்கு வீடு வாசப்படி’னு சொல்வாங்க. அதேதான். எங்களுடைய வாழ்க்கையிலும் சமீப காலங்கள் அசாதாரண நாட்களா நகர்ந்திட்டிருக்கு. எப்படியோ இந்த நாட்களைக் கடந்து போயிட்டிருக்கேன் நான். என்னைவிட தைரியசாலி அவங்க. அதனால அவங்களுக்கும் இந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்றதுன்னு தெரியும்.இடையில், சமூக ஊடகங்கள்ல பரபரப்புக்காக வர்ற தினுசு தினுசான செய்திகளையெல்லாம் நான் புறந்தள்ளிடுறேன். வெறும் வாயை மென்னவங்களுக்கு அவல் கிடைச்ச மாதிரி என்னென்னவோ செய்தியைப் பரப்பி விடுறாங்க. லைக்ஸ்க்காகப் பண்றவங்களைப் பத்தி நாம என்ன சொல்ல முடியும்? பண்ணிட்டுப் போகட்டும்’ என்றவரிடம்,

ரச்சிதா
ரச்சிதா

ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாகப் பரவிய தகவல் குறித்தும் கேட்டோம்.

‘கணவன் மனைவி இடையிலான சண்டை நடந்தா சிலர் ஒரே வீட்டுல இருந்துகிட்டே ஒருத்தருக்கொருத்தர் பேசாம இருப்பாங்க. சிலர் ஒரு சேஞ்சுக்காக கொஞ்ச நாள் தனித்தனியா இருக்கலாம்னு முடிவெடுப்பாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் எங்களுக்கிடையிலான பிரிவு தற்காலிகமானதுன்னுதான் நம்பறேன்.

தவிர, நானோ ரச்சிதாவோ, சட்டபூர்வமா பிரியறதுக்கான எந்தவொரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் முன்னெடுக்கலைங்கிறதையும் இந்த இடத்துல சொல்ல விரும்பறேன்.

எல்லா பாரத்தையும் காலத்தின்மீது போட்டுட்டு பேசாம இருக்க வேண்டியதுதான். காலம் எந்தவொரு கடுமையான சூழலையும் மாத்திடும்’ என்கிறார்.