Published:Updated:

``நானும், என் மகளும் இருக்க எங்க முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு வெறுப்பேத்துவார்!'' -சீரியல் ஜெயஶ்ரீ

``கணவனோ, காதலியோ சீரியலில் நடிக்க கமிட் ஆகிட்டா, அவங்க நமக்குச் சொந்தமில்லைனு ஆகிடுது'' என்கிற புலம்பல்களைச் சாதாரணமாகக் கேட்க முடிகிறது.

வெள்ளித்திரையைவிட சின்னத்திரையில் `ஏ'டாகூட களேபரங்கள் அதிகளவில் நடப்பதாக புகார்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் நீண்டநேரம் செலவிடுவதால், ஒரு சிலர் அவர்களின் சொந்த குடும்பங்களையே மறந்துவிட்டு உடன் நடிப்பவர்களுடன் நெருக்கமாகி விடுகிறார்கள் என சீனியர் நடிகர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.

``கணவனோ, காதலியோ சீரியலில் நடிக்க கமிட் ஆகிட்டா, அவங்க நமக்குச் சொந்தமில்லைனு ஆகிடுது'' என்கிற புலம்பல்களைச் சர்வ சாதாரணமாகக் கேட்க முடிகிறது. சமீபத்தில் நான்கு ப்ரைம் டைம் சீரியல்களின் நடிகர்கள், தங்கள் கணவன், மனைவி, காதலரை விட்டுவிட்டு ரீல் ஜோடிகளுடன் நெருக்கமானது, தொடர்ந்து பஞ்சாயத்தாகி வருகிறது. இதில் பலநாள்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த ஈஸ்வர் - மகாலக்ஷ்மி விவகாரம் தற்போது போலீஸ் நிலையம் வரை போயிருக்கிறது.

'ஆமாம்.. இனி எங்களுக்குள் எதுவுமில்லை!- 'ரோஜா' சீரியல் ப்ரியங்காவின் பிரேக்-அப் மெசேஜ்

விவகாரம் இதுதான்...

ஒரு தனியார் தொலைக்காட்சியில் பகலில் ஒளிபரப்பாகிற சீரியல் `தேவதையைக் கண்டேன்'. `இந்தத் தொடரில் வில்லியாக நடிக்கும் மகாலக்ஷ்மியும், ஹீரோவாக நடிக்கும் ஈஸ்வரும் சீரியல் காட்சிகளில் முட்டிக்கொண்டாலும் இடைவேளை நேரங்களில் அநியாயத்துக்கு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்’ என்கிற தகவல் சீரியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டுவந்தது. ஈஸ்வர், மகாலக்ஷ்மி இருவருக்குமே ஏற்கெனவே திருமணமாகி குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஈஸ்வரின் மனைவி ஜெயஶ்ரீயும் சீரியல் நடிகையே. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடப்பவை ஜெயஶ்ரீக்குத் தெரியவர, அவர் கணவரைக் கண்டித்திருக்கிறார். அவருக்குத் தெரிந்த காவல் துறை அதிகாரியைச் சந்தித்து கணவரையும் அந்த நடிகையையும் எச்சரிக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால், தனக்குத் தெரிந்த அரசியல் தொடர்பைப் பயன்படுத்தி விவகாரத்தை ஆஃப் செய்திருக்கிறார் மகாலக்ஷ்மி. போலீஸ் வரை போனதால் மனைவியை டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருக்கிறார் ஈஸ்வர். இந்த நிலையில்தான் தற்போது தன்னிடம் விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஜெயஸ்ரீ முறைப்படி புகார் அளிக்க, அதன் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார் ஈஸ்வர். இவர் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

மகாலக்ஷ்மி சின்னத்திரையில் சீனியர் நடிகை. மியூசிக் சேனலில் விஜே-வாக இருந்து கரியரைத் தொடங்கியவர் இவர். சமீபத்தில் ``முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் அர்ச்சனை’' என்கிற அரசு விளம்பரத்திலும் இவர் நடித்திருந்தார்.

மகாலக்ஷ்மி
மகாலக்ஷ்மி

நடந்த விவகாரம் குறித்து ஜெயஸ்ரீயிடம் பேசினேன்.

``எங்களுக்கு கல்யாணமாகி நாலு வருஷமாகுது. அவர் குடிப்பார்ங்கிறது கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். ஆனா, கடன் வாங்கிச் சூதாடுவார்ங்கிறதெல்லாம் பிறகுதான் தெரிஞ்சது. லட்சக்கணக்குல கடன் வெச்சிருக்கார். அந்தக் கடனை எல்லாம் நான்தான் கட்டிக்கிட்டிருக்கேன். `தேவதையைக் கண்டேன்’ தொடர்ல நடிக்கத் தொடங்கின பிறகுதான் மகாலக்ஷ்மியுடன் பழக்கம். அவங்கக்கூட வாழ ஆசைப்பட்டு என்கிட்ட இருந்து டைவர்ஸ் கேட்டார். நான் மறுத்தேன். அதனால என்னைக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நானும் என் பொண்ணும் இருக்கும்போது எங்க முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார். அவங்களுக்கும் ஏற்கெனவே கல்யாணமாகி ஒரு பையன் இருக்கான். அந்தப் பையன்கிட்ட தன்னை `அப்பா’ன்னு கூப்பிடச் சொல்லுவார். என் பொண்ணு இதனாலேயே மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கா. குடிச்சுட்டு வந்து என்னை அடிப்பார். வயித்துல எட்டி உதைச்சதோட வலி எனக்கு இன்னும் இருக்கு. நடு வீட்டுல சிறுநீர் கழிப்பார். இப்படி கொடுமை அளவில்லாமப் போயிட்டிருந்ததாலதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன். விசாரிக்கப் போன போலீஸ்காரங்களையும் தகாத வார்த்தைகள்ல பேசியிருக்கார். கடைசியில அவரையும் அவரோட அம்மாவையும் இப்ப கைது பண்ணியிருக்காங்க’’ என்றார் ஜெயஸ்ரீ.

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ
`` `முன்னாடிக்கு இப்ப ரொம்ப அழகா இருக்க'னு டயலாக் வைக்கிறாங்க!'' - `ஆயுத எழுத்து' சீரியல் பிரச்னை

மகாலக்ஷ்மியையும் போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறதாம். ஆனால், அவரோ தலைமறைவாகி விட்டார் என்கிறார்கள்.

மகாலக்ஷ்மியின் மொபைலுக்குத் தொடர்பு கொண்டபோது நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு