Published:Updated:

``அவங்க பிரிவு தாங்க முடியாம ஏர்போர்ட்ல நின்னு அழுதேன்!’’ - கார்த்திக் வாசு பகிர்ந்த லவ் ஸ்டோரி

கார்த்திக் வாசு, நந்தினி

``நான் ஷூட்டிங் ஸ்பாட்ல இல்லாத பட்டாம்பூச்சியை விழுந்து புறண்டு பிடிச்சேன்.’’

``அவங்க பிரிவு தாங்க முடியாம ஏர்போர்ட்ல நின்னு அழுதேன்!’’ - கார்த்திக் வாசு பகிர்ந்த லவ் ஸ்டோரி

``நான் ஷூட்டிங் ஸ்பாட்ல இல்லாத பட்டாம்பூச்சியை விழுந்து புறண்டு பிடிச்சேன்.’’

Published:Updated:
கார்த்திக் வாசு, நந்தினி

காதலைக் கொண்டாட மாதமோ, நாளோ தேவையில்லைதான். ஆனால், பிப்ரவரி மாதம் வந்துவிட்டாலே, இளம் காதலர்களுக்கு காதலர் தினத்தைப் பற்றிய உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. எனவே, காதலைக் கொண்டாடும் விதமாக, நம் மனம் கவர்ந்த சின்னத்திரை பிரபலங்களிடம் அவர்களின் காதல் கதையைக் கேட்கவிருக்கிறோம்.

`பூவே பூச்சூடவா' சீரியலின் நாயகன் கார்த்திக் வாசு, ஆன் ஸ்கிரீனில் காதல் செய்தது குறித்தும் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

ரேஷ்மா, கார்த்திக் வாசு
ரேஷ்மா, கார்த்திக் வாசு

``பூவே பூச்சூடவா சீரியலில் என்னோட முதல் நாள் ஷூட்டிங் பீச்சில் நடந்தது. அதுவும் காதல் காட்சி. சிவாவா, சக்திகூட ரொமான்ஸ் பண்ணணும். இதற்கு முன்னாடி நான் நடிச்ச `பிரியமானவள்' சீரியலில் துருதுருன்னு இருக்க, ரொம்ப கோவப்படுற பையனா நடிச்சிருப்பேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பூவே பூச்சூடவா சீரியலின் முதல் நாள் ஷுட்டிங்கிலும் அந்தத் துருதுரு பையனோட தாக்கம் இருந்துச்சு. ரொமான்ஸ் காட்சியில் இவ்வளவு வேகமா நடக்கக் கூடாது, பேசக் கூடாதுன்னு இயக்குநர் சொல்லிக்கொடுத்தார். அப்புறம் என் வேகத்தைக் குறைச்சிக்கிட்டு மெதுவா பார்க்கிறது, சிரிக்கிறதுன்னு ரொமாண்டிக்கா மாறினேன். கதைப்படி நாயகி என்கிட்ட பட்டாம்பூச்சி கேட்பாங்க. ஆன் ஸ்கிரீன்ல பட்டாம்பூச்சிய கிராஃபிக்ஸ்ல வரவெச்சிருவாங்க.

ரேஷ்மா, கார்த்திக் வாசு
ரேஷ்மா, கார்த்திக் வாசு
பூவே பூச்சூடவா சீரியல்

ஷூட்டிங் ஸ்பாட்ல நான் இல்லாத பட்டாம்பூச்சிய விழுந்து புறண்டு பிடிச்சேன். பீச் என்பதால் பாட்டில்களெல்லாம் இருந்துச்சு. அது மேல விழுந்து எழுந்தேன். ஒரு காதல் காட்சிக்காக இவ்வளவு பண்ணணுமான்னு அப்போதான் எனக்குத் தோணுச்சு. ஆனா, அந்தக் காட்சி நல்லா வந்திருக்கிறதா எல்லாரும் பாராட்டினாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆன் ஸ்கிரீன் மாதிரி ஆஃப் ஸ்கீரினிலும் நான் செம லவ் பெர்ஃபாமன்ஸ் பண்ணியிருக்கேன். என் மனைவி நந்தினி இன்ஸ்டாவில் என் ரசிகையாத்தான் முதன்முதலில் அறிமுகமானாங்க. அப்புறம் நட்பா பேச ஆரம்பிச்சு காதலாகிடுச்சு. ஆனா, நாங்க ஐ லவ் யூன்னு புரொபோஸ் பண்ணிக்கவே இல்லை.

கார்த்திக் வாசு, நந்தினி
கார்த்திக் வாசு, நந்தினி

சினிமாவில்தான் கையில் பூவோட புரொபோஸ் பண்ணுவாங்க. ரியல் லைஃப்ல பெரும்பாலும் அப்படி இருக்காது. எங்க முதல் சந்திப்பு அவங்க வீட்லதான் நடந்துச்சு. அவங்க குடும்பம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இதனிடையே அவங்களுக்கு வேலைக்காக வெளிநாடு போக விசா வந்துருச்சு. நான் கோபத்துல,`உன் லைஃப் எப்படியோ போ'ன்னு சொல்லிட்டேன்.

கோபத்தோடயே ஏர்போர்ட்ல அவங்கள டிராப் பண்ணப் போனேன். ஏர்போர்ட்டுக்குள்ளே போனவங்க திரும்ப வந்துட்டாங்க. அவங்க அப்பா, அம்மா முன்னாடியே தனியா கூட்டிட்டுப்போய், `ஏன் எதுமே சரியா சொல்ல மாட்றீங்'கன்னு கேட்டாங்க. எனக்கும் அவங்கள ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ஆனா, ஏதோ ஒரு தயக்கதுல சொல்லாமலேயே இருந்தேன்.

கார்த்திக் வாசு, நந்தினி
கார்த்திக் வாசு, நந்தினி

`அவங்கள பிரியப் போறோம்'ன்னு நினைக்கும்போது அழுகை முட்டுச்சு. உண்மையச் சொல்லணும்னா அழுதுட்டேன். அவங்கதான் என் வாழ்க்கைன்னு அந்த நொடி முடிவு பண்ணினேன். `உன்னை மாதிரி ஒரு பொண்ணத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு அவங்ககிட்ட சொல்லிட்டேன். அதற்கு அப்புறம் வெளிநாடு போனவங்க ஒரு மாசத்துல திரும்ப வந்துட்டாங்க. அப்புறம் என்ன கல்யாணம் தான்!’’ என்று உற்சாகம் பொங்க, தன் காதல் கதையைச் சொல்லி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism