Published:Updated:

வில்லன் நடிகர் டூ ’டூர் கைடு’ அவதாரம்..! - ‘யாரடி நீ மோகினி’ பவித்ரன்

சுற்றுலா வழிகாட்டியாக பவித்ரன்
சுற்றுலா வழிகாட்டியாக பவித்ரன்

’யாரடி நீ மோகினி’ தொடரின் பவித்ரன் பேட்டி

சன் டிவி-யில் ஒளிபரப்பான ’குலதெய்வம்’ தொடர்மூலம் சீரியலுக்குள் வந்தவர், பவித்ரன். முதல் சீரியலிலேயே மௌலி, வடிவுக்கரசி முதலான சீனியர் ஆர்ட்டிஸ்டுகளுடன் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பைப் பெற்றார். இருந்தும், ‘குலதெய்வம்’ நிறைவடைந்த பின் அவ்வளவாகத் தொடர் வாய்ப்புகள் அமையவில்லை. மீண்டும் திருமுருகன் இயக்கத்திலேயே ‘கல்யாண வீடு’ தொடரில் கமிட் ஆனார்.

பவித்ரன்
பவித்ரன்

அந்த சீரியலில்கூட, சமீபமாக ஆளைப் பார்க்க முடியாத நிலையில், திடீரென ஜீ தமிழ் சேனலின் பிரைம் டைம் ஹிட் சீரியலான ‘யாரடி நீ மோகினி’ -யில் வரத் தொடங்கினார். தற்போது, சன் டிவி-யின் பகல் ஒளிபரப்பான ‘சந்திரலேகா’ தொடரிலும் கமிட் ஆகியுள்ளார். இன்னொருபுறம் சுற்றுலா செல்ல உதவும் வகையில், ’எக்ஸ்ப்ளோர் வித் பவின்’ என்கிற பெயரில் யூ டியூப் சேனலும் தொடங்கியிருக்கிறார். ‘யாரடி நீ மோகினி’ ஷூட்டிங்கில் இருந்தவரிடம் பேசினோம்

‘இந்த சீரியல்ல விஸ்காம் முடிச்சுட்டு, சினிமா எடுக்க முயற்சி செய்திட்டிருக்கிற கேரக்டர். நிஜ லைஃப்லயும் இதேதான். சினிமாதான் கனவா இருந்தது. விஸ்காம் முடிச்சுட்டு பாபி சிம்ஹா நடிச்ச படத்துல உதவி இயக்குநரா சேர்ந்தேன். பிறகு, கொஞ்ச நாள் மாடலிங். அந்தச் சமயத்துலதான் முதன்முதலா ‘குலதெய்வம்’ வாய்ப்பு கிடைச்சது. நெகட்டிவ் கேரக்டர்ங்கிறதால, எதிர்பார்த்ததற்கு மேலாகவே ரீச் கிடைச்சது.

பவித்ரன்
பவித்ரன்

ஆனாலும், அந்த சீரியலுக்குப் பிறகு வாய்ப்புகள் அமையலை. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருந்தபோது, சர்ப்ரைஸா திடீர்னு ரெண்டு சீரியல் வாய்ப்புகள் வந்துச்சு. ஃபீல்டுக்கு வந்த கொஞ்ச நாள்லயே நான் புரிஞ்சுக்கிட்டது இதுதான், சீரியல் ஏரியாவுல திடீர்னு அடைமழை அடிக்கும், நடிக்கிற சீரியல் ரேட்டிங் வாங்கினா, நம்ம முகம் பிரபலமாகி, கடை திறப்புவிழாவுக்கு கூப்பிடுவாங்க. வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் குவியும். காத்தடிக்கிறபோதே தூத்திக்கணும்பாங்களே அதேபோல, அந்த மழை நிற்கறதுக்குள்ளேயே கையில நாலு காசு சேர்த்துடணும். சீரியல் சரியா போகலைன்னாலோ அல்லது சுமாரா போனாலோ மாசத்துக்கு 10 நாளைக்கு வேலை இருக்கும். மத்த நாட்கள்ல என்ன செய்றதுன்னே தெரியாது. இன்னைக்கு சீரியல்கள்ல நடிச்சிட்டிருக்கிற முக்கால்வாசி ஆர்ட்டிஸ்ட்டுகளோட நிலை இப்படித்தான் இருக்கு’’ என்றவரிடம், ‘யாரடி நீ மோகினி’ அனுபவம் குறித்து கேட்டேன்.

`எனக்கு ஓ.கே தான்; ஒரே விஷயம்தான் தடையா இருந்தது!'- பிக் பாஸ்3 குறித்து ‘ஜோடி’ ஆனந்தி

’‘முத்தரசனுக்கு யாரோட கல்யாணம் நடக்கும்கிற எதிர்பார்ப்பு அதிகரிச்ச சூழல்ல சீரியலுக்குள் வந்தேன். அந்தக் கல்யாணத்துக்கு உதவுகிற கேரக்டர்ங்கிறதால, இப்ப நான் போற இடமெல்லாம், முத்தரசனுக்கு யாரோட கல்யாணம் நடக்கும்? வெண்ணிலாவா ஸ்வேதாவான்னு எங்கிட்ட கேக்கறாங்க. அதிகபட்சம் இன்னும் ஒரு மாசத்துல அந்தக் கல்யாணம் நடந்திடும்னு நினைக்கிறேன்’ என்கிறார்.

பவித்ரன்
பவித்ரன்

’சீரியல்ல பிக் - அப் ஆகி சினிமாவுக்கு வர முயற்சிக்காம, யூ டியூப் சேனல்னு இறங்கிட்டீங்களே...''

‘’ஏற்கெனவே சொன்னேனே, அதுதான் காரணம். இப்ப ரெண்டு சீரியல் ஒளிபரப்பாகிட்டிருக்கு. இந்த சீரியல்கள் ஹிட்டாகி, தொடர்ந்து டிவி-யில இருந்தாலும் இருக்கலாம். அது நடக்காமலும் போகலாம். அதேபோல, டிவி-யில இருந்து சினிமாவுக்கான முயற்சியையும் செய்துகிட்டிருக்கேன். அதுவும் கைகொடுக்குமானு தெரியலை. ஏன்னா, சினிமாவுக்காகவே சீரியல் வாய்ப்புகளையெல்லாம் விட்டுட்டு இப்பவரைக்கும் சினிமாவுல நுழையவே முடியாத சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை தினமும் பார்க்கிறேன். ஆங்கரா இருந்து சினிமாவுல உச்சத்துக்கு வந்த சிவகார்த்திகேயன் மாதிரி எல்லாராலும் ஆக முடியாது.

அதனாலதான் தெளிவா முடிவெடுத்தேன். சீரியல், சினிமா நோக்கிதான் என் பயணம். அது பயங்கரமா க்ளிக் ஆகி, ஃபீல்டுல படுபிசியா இருந்தேன்னா ஓகேதான். அதுவரைக்கும் வேலை இல்லாம ஒரு நாள்கூட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்காகவே இந்த சேனல். பொதுவாகவே பயணம் செய்றது எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கா இருந்தது. அதுல இருந்தே சேனலுக்கான விதை விழுந்தது. தெரியாத இடங்களைத் தேடிப்பிடிச்சு வழி காட்டினா, டூர் கிளம்ப இங்க நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்கு உதவுகிற அதேநேரம், எனக்கு சீரியல் இல்லாத நாட்கள்ல பிடிச்சு செய்கிற ஒரு வேலையாகவும் இருக்குமில்லையா’ என்கிறார் பவித்ரன்.

அடுத்த கட்டுரைக்கு