Published:Updated:

``அஜித் - விஜய் சண்டையில ரொம்ப நாள்கூட பேசாம இருந்திருக்கோம்!" - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' வெங்கட்

வெங்கட்
வெங்கட்

`ஒரே ஒரு விஷயத்துல எனக்கு அப்படியே நேரெதிர். நான் தளபதி ஃபேன், அவங்க தல ஃபேன். இதை வெச்சுதான் எங்க ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வரும்.’

`பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில், நான்கு சகோதரர்களில் ஒருவராக வருபவர் ஜீவா. அந்தக் கேரக்டரில் நடித்திருக்கும் வெங்கட்டை விரட்டி விரட்டிக் காதலிப்பார் ஹேமா. சீரியலில் காதலிக்கத் தயங்குபவராக நடித்த வெங்கட், நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிப்ரவரி 14 நெருங்குகிற வேளையில், வெங்கட்டிடம் பேசினோம்.

வெங்கட்
வெங்கட்

``நானும் என்னோட மனைவி அஜந்தாவும் கோயம்புத்தூர் காலேஜ்மேட்ஸ். அவங்க செகண்டு இயர் வந்தப்போ நான் டைரக்ட் செகண்டு இயர் ஸ்டூடன்ட்டா அங்க போனேன். அதனால அவங்க என்னோட காலேஜ் சீனியர்னுகூட சொல்லலாம். ஆரம்பத்துல நல்ல நண்பர்களாதான் இருந்தோம். ஆனா, ஒரே ஒரு விஷயத்துல எனக்கு அப்படியே நேரெதிர். நான் தளபதி ஃபேன், அவங்க தல ஃபேன். இதை வெச்சுதான் எங்க ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வரும். சில நாள்கள் பேசாமகூட இருந்திருக்கோம். `எவ்வளவு படம் பார்த்திருக்கோம். முதல்ல மோதினா அடுத்ததும் காதல்தானே' இதுதானே உங்களோட மைண்ட் வாய்ஸ். அது எனக்கும் கேட்குது ப்ரோ.

பொய் சொல்ல விரும்பலை. அதுதான் நிஜம். நண்பர்களா இருந்தாலும், அவங்களோட பேசாம, பார்க்காம நிறைய நாள்கள் தவிச்சிருக்கேன். ஒரு கட்டத்துல ரொம்ப தனிமையை உணர்ந்ததாலதான், `நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா'னு அவங்கக்கிட்டே கேட்டேன். ரெண்டு நாள்ல அவங்களும் சரினு சொல்லிட்டாங்க" என வெங்கட் நிறுத்த, அஜந்தா தொடர்ந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம்

``அடுத்த ரெண்டு வருஷம் காதலர்களா என்ஜாய் பண்ணோம். காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் இவரோட சொந்த ஊரான பழநிக்குப் போயிட்டார். ஒவ்வொரு வீக்கெண்டும் என்னைப் பார்க்க கோயம்புத்தூர் வந்துடுவார். அந்த ரெண்டு வருஷம் கோயம்புத்தூர்ல நாங்க சேர்ந்து சுத்தாத இடமே இல்லை. மாத்தி மாத்தி நிறைய கிஃப்ட் கொடுத்துப்போம். இப்போ அதைப் பார்த்தாகூட ஸ்வீட் மெமரீஸா இருக்கு. முதன்முதலா நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்த சினிமா டிக்கெட்டை இன்னும் பத்திரமா வெச்சிருந்தார். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அந்த டிக்கெட்டை அவர்கிட்ட இருந்து சுட்டுட்டேன்" எனக் கண்ணடித்துச் சிரிக்கிறார் அஜந்தா.

மீண்டும் தொடர்ந்தார் வெங்கட்.

``க்ளாஸ்ல நாங்க ரெண்டு பேரும் ஒரே பெஞ்ச்தான். நான் அவங்க என்ன பண்றாங்கனு நான் கவனிக்க, அவங்க என்ன பண்றாங்கனு நான் கவனிக்க... இப்படியே போயிட்டிருந்தா என்ங்கிட்டிருந்து பாடத்தைக் கவனிக்க. இப்படியே நாள்கள் ரொம்ப ஜாலியா போனது. பழைய ஞாபகங்களை மிஸ் பண்ணக் கூடாதுனு சினிமா டிக்கெட்களை எல்லாம் சேர்த்து வெச்சிருந்தேன். திடீர்னு பார்த்தா ஒரு நாள் அந்த டிக்கெட்டைக் காணாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

`என்ன தேடுறீங்க'னு இவங்க கேட்டாங்க. எங்க சொன்னா, `கல்யாணம் ஆகிடுச்சுல்ல... இப்போ லவ் எல்லாம் குறைஞ்சிருக்கும்'னு சொல்வாங்கனு தயங்கி அதைச் சொல்லவே இல்லை. அப்புறம் `டிக்கெட்தானே'னு அவங்களே கேட்டாங்க. `பத்திரமாதான் வெச்சிருந்தேன். எப்படி மிஸ் ஆச்சுனு தெரியலை'னு கெஞ்சிட்டிருந்தேன். அப்புறம்தான் `அது எங்கேயும் போகலை. பர்ஸ்ல இருக்கிறதை நான்தான் பார்த்தேன். இவ்ளோ நாள் உங்ககிட்ட இருந்ததுல்ல... இனி நான் வெச்சிருக்கேன். ரெண்டு பேரும் சேர்ந்துதானே படம் பார்த்தோம்'னு சொல்லி சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களோட காதல் இதே மாதிரிதான். எப்பவும் இப்படியே இருக்கும்" என்று முடித்தனர் வெங்கட் - அஜந்தா ஜோடி.

பாண்டிராஜ், அருண்ராஜா, சுதா கொங்கரா...`விஜய் 65' படத்தின் இயக்குநர் யார்?
அடுத்த கட்டுரைக்கு