Election bannerElection banner
Published:Updated:

``சமீரா, கல்யாணமானதுமே சண்டையை ஆரம்பிச்சிட்டாங்க!'' - ஆதங்கப்படும் அன்வர்

அன்வர் சமீரா
அன்வர் சமீரா

தேனிலவு முடித்துத் திரும்பியிருந்த இந்த `பகல் நிலவு’ ஜோடியின் செல்லச் சண்டையை முடித்துவைத்து, சீரியஸாக சில கேள்விகளை வைத்தோம்.

``என்னைச் சந்திக்கிறதுக்கு முன்னாடியே என் அம்மாவுக்கு அறிமுகமானவங்க சமீரா. நாங்க காதலிக்கிறதைச் சொன்ன பிறகு ஏத்துகிட்ட என் அம்மா, மேரேஜுக்கு முன்னாடி எங்களை ஊர் சுத்தக்கூட அனுமதிச்சாங்க. அப்படிப்பட்ட என் அம்மாகூட சமீராவுக்கு லடாய். ஏன்னா, இப்ப ரெண்டு பேரும் மாமியார் மருமகள் ஆகிட்டாங்க இல்லையா?''

- காதல் மனைவி சமீரா மீது அன்வர் இப்படியொரு குற்றச்சாட்டை வைக்க, சமீரா பக்கம் திரும்பினேன்.

அன்வர் சமீரா
அன்வர் சமீரா

``இவர் மட்டும் என்ன? லவ் தொடங்கினப்ப என்னுடைய ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அடுத்த செகண்ட் அக்செப்ட் பண்ணினவர். `இப்ப உங்க லவ் டேஸ்’னு கேட்டீங்கன்னாலே, `அது போர் மேட்டர்’னு சொல்றாரே’ என்கிறார்.

தேனிலவு முடித்துத் திரும்பியிருந்த இந்த `பகல் நிலவு’ ஜோடியின் செல்லச் சண்டையை முடித்துவைத்து, சீரியஸாக சில கேள்விகளை வைத்தோம்.

``மூணு மாசம் லவ், நாலாவது மாசம் பிரேக் அப். அடுத்த மாசம் அடுத்த லவ்னு போயிட்டிருக்கிற இண்டஸ்டிரிக்குள்ள எப்படி எட்டு வருஷமா காதலைப் பாதுகாத்தீங்க?''

``ரொம்ப சிம்பிள். நமக்கானவங்கன்னு ஒருத்தர்தான் இருப்பாங்க. அவங்களைக் கண்டுபிடிச்சிட்டா, முழுசா நம்பிடணும். அந்த நம்பிக்கை இல்லாதப்பதான் பிரச்னை. நாங்க ரெண்டு பேரும் நம்பினோம்.’’

``ஒரு சீரியல்ல சேர்ந்து நடிச்சிட்டா, அந்த ஜோடியுடனேயே ரியல் லைஃப்ல சேர நினைக்கிறது இன்னைக்கு சகஜமாகிடுச்சே" என்றால்...

``ஒரு விளம்பரப் படமோ அல்லது சினிமாவோ... இதன் ஷூட்டிங் நாள்கள் குறைவுதான். ஆனால், சீரியலில் வருஷக் கணக்குல அதுவும் தினம்தினம் சந்திக்கிறாங்க. அந்தச் சூழல்ல ஆர்ட்டிஸ்ட்டுகளிடையே ஒருவித ஈர்ப்பு வர சான்ஸ் இருக்கு.’’

அன்வர் - சமீரா
அன்வர் - சமீரா

- அன்வர் இப்படிச் சொன்னதும், ``என்னது சான்ஸ் இருக்கா, எங்கே என் முகத்தைப் பார்த்து சொல்லுங்க'’ என அன்வரை முறைத்த சமீரா, ``இந்தக் கேள்விக்கு நீங்க பதில் சொன்னது போதும்'' என்றபடி பேசத் தொடங்கினார்.

``என்ன கல்ச்சர்னே தெரியலங்க இது. இப்படிப் பண்றவங்க, ஒரேயொரு சீரியலோட கேரியர் போதும்னு நினைக்கிறாங்களா அல்லது அடுத்தடுத்த சீரியல் கிடைச்சா ஆளை மாத்திட்டே இருப்பாங்களா? நடக்கறதையெல்லாம் பார்த்தா கஷ்டமா இருக்கு. ஒருசிலர், இந்த மாதிரி நடந்துக்கிறதால இண்டஸ்ட்ரிக்கே கெட்ட பேர். தொழில் வேற வாழ்க்கை வேறங்கிறதை ஆர்ட்டிஸ்ட்டுகள் புரிஞ்சுக்கிட்டாதான் இந்த மாதிரி நடக்காது.’’

``இனி சமீரா நடிப்பாரா?'' – மறுபடியும் அன்வரைக் கேட்டேன்.

``ரெண்டு பேருமே, நடிக்கிறதும் நடிக்காததும் அவங்கவங்க விருப்பம்னு முடிவு செஞ்சிருக்கோம்.''

``சரி, மாமியார் மருமகள் பிரச்னை உடனே ஏன், எப்படி?''

``எங்களோடது கூட்டுக் குடும்பம். எல்லாருக்கும் சமையல் அம்மாதான் செய்வாங்க. `இதுவரைக்கும் சரி. இனி நீங்களும் போய் பண்ணவேண்டியதுதானே’னு கேட்டேன். அதுக்கு இவங்க பதில், ```அத்தை என்னைக் கூப்பிடறதில்லை'’னு சொல்றாங்க.

``நம்ம வீட்டுல யாரும் வந்து கூப்பிடணும்னு வெயிட் பண்றது நல்லா இல்லை’னு சொல்லிட்டேன். அதுக்கு எங்கூட ரெண்டு நாள், என் அம்மாவுடன் மூணு நாள் கோபம்’’ என்கிறார், அன்வர்.

அன்வர் சமீரா
அன்வர் சமீரா
``ரொம்ப சிம்ப்பிள்... வீட்டுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!'' - `பகல் நிலவு' அன்வர் - சமீரா #Anweera

``கோபம் எப்போது எப்படிச் சரியானது?'' – சமீராவைக் கேட்டேன்.

``அதுவொரு அழகான தருணம். `நம்ம வீட்டுல யாரும் சொல்வாங்கன்னு வெயிட் பண்றது பிடிக்கலை’னு நான் தனியா இருக்கிறப்பதான் அன்வர் சொன்னார். உடனே நான், `உம்’முனு இருந்ததைப் பார்த்துட்டு வீட்டுல காரணம் கேட்டதும், எல்லார் முன்னாடியும் அதைச் சொல்லி ஸாரியும் கேட்டுட்டார்.

ஆனா, ஹைலைட்டே அதுக்குப் பிறகுதான். ரூமுக்கு கூட்டிட்டுப் போய் தனியாவும் என்கிட்ட ஒரு ஸாரி கேட்டார், ஹக் பண்ணிக்கிட்டே.

அவர் லவ்வை வெளிப்படுத்துற இந்த விதம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.’’

சமீரா முகத்தில் அவ்வளவு வெட்கம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு