Published:Updated:

`ஷூட்தாண்டி முழுநேர வேலையே ஒண்ணா சுத்துறதுதான்!' - நட்பதிகாரம் பகிரும் அனன்யா

சுஜு வாசன், நிவிஷா, அனன்யா
சுஜு வாசன், நிவிஷா, அனன்யா

ஷூட் நேரத்தைத் தவிர்த்து எங்க முழு நேர வேலையே ஒண்ணா சுத்துறது தான்...

ப்ரண்ட்ஸ், நண்பன், சிநேகிதியே படங்களில் வருவதை போன்றதொரு நட்பு நிஜவாழ்க்கையில் எல்லாருக்கும்  அமைந்துவிடுவதில்லை. `ஃபிரண்ட்ஷிப் என்று வந்துவிட்டால் ஆயிரம் சண்டைகள் வந்தாலும் அடுத்த நொடியே ஆண்கள் சமாதானமாகிவிடுவார்கள். பெண்கள் நட்புக்குள் ஈகோ வந்துவிட்டால் பிரிந்துவிடுவார்கள்' என்பது இச்சமூகத்தின் பொதுக்கருத்து. இந்தப் பேச்சை பொய்யாக்கி தமிழ் சீரியல் வட்டாரமே ஆச்சர்யப்படும் அளவுக்கு நட்பு பாராட்டி வருகின்றனர்  `V3 கேர்ள்ஸ்'.  நிவிஷா, அனன்யா, சுஜு வாசன் ஆகியோர் தங்கள் நட்புக் கூட்டணிக்கு வைத்துக்கொண்ட பெயர் `V3 கேர்ள்ஸ்'.

சுஜு வாசன், நிவிஷா, அனன்யா
சுஜு வாசன், நிவிஷா, அனன்யா

சமீபத்தில் வெளியான இவர்களின் போட்டோஷூட் செம வைரல். ஒரே துறையில் இருந்துகொண்டு எந்தவித போட்டியோ ஈகோவோ இல்லாமல் எப்படி எப்போதுமே ஒன்றாக இருக்க முடிகிறது என்று 'வந்தாள் ஸ்ரீதேவி' புகழ் அனன்யாவிடம் கேட்டோம்.

``நானும் நிவியும் ஒண்ணா வொர்க் பண்ணபோது நெருங்கிய நண்பர்கள் ஆனோம். சுஜ்ஜுவை முதல் முறை சந்திச்சப்போ எங்களுக்குள்ள நிறைய விஷயங்கள் ஒத்துப்போச்சு. கொஞ்சம் கொஞ்சமா மூணு பேரும் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் ஆகிட்டோம். ஷூட்டிங்கைத் தாண்டி எங்க முழு நேர வேலையே ஒண்ணா சுத்துறதுதான். புதுப்புது இடங்களுக்குப் போக பிடிக்கும். நிறையா ட்ரிப் போயிருக்கோம். நாங்க ஒண்ணா இருக்கும்போது ஒவ்வொரு நொடியும் அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும். வெளிய பார்க்கும்போது நாங்க ஒற்றுமையா இருக்க மாதிரி தெரிஞ்சாலும் எங்களுக்குள்ளயும் சண்டைகள், கருத்து வேறுபாடுகள் வரும். ஆனா, கொஞ்ச நேரத்துல சரியாகிடுவோம். மாத்தி மாத்தி மன்னிப்பு கேட்டுப்போம்.

சுஜு வாசன், நிவிஷா, அனன்யா
சுஜு வாசன், நிவிஷா, அனன்யா

ஒரே ஃபீல்டில் இருக்கிறதால வாய்ப்புகள் வரும்போது போட்டி இருக்காதான்னு நிறைய பேர் கேட்பாங்க. இதுவரை வந்தது கிடையாது. எனக்கு ஏதும் போட்டோ ஷூட் அல்லது ஈவண்ட் வாய்ப்புகள் வரும்போது நான் பிஸியா இருந்தா, நிவி அல்லது சுஜுவ பண்ணச் சொல்லுவேன். அதே மாதிரி அவங்க பிஸினாலும் மத்த ரெண்டு பேரை ரெஃபர் பண்ணுவாங்க. சீரியல் வாய்ப்பு, பேர், புகழ் இவற்றையெல்லாம் எங்க நட்புக்குள்ள கொண்டு வர மாட்டோம்.

எங்களுக்குள்ள அன்பு மட்டும்தான். எங்க குடும்பங்களும் ஒருவருக்கொருவர் பரிச்சயமாகிக்கிட்டாங்க. இப்போவெல்லாம் எங்க போனாலும் ஒண்ணாதான் போறோம். ஒருவருக்கு மட்டும் அழைப்பு கொடுத்துட்டு நீங்க மட்டும் வாங்கன்னு சொன்னா அப்படியொரு நிகழ்ச்சிக்குப் போகவே மாட்டோம். குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் ஒண்ணாதான் போவோம். இப்படியொரு நட்பு அமையுறதெல்லாம் கடவுள் கொடுத்த கிஃப்ட். நாங்க மூணு பேருமே அவ்வளவு பொசசிவ். எங்க நட்புக்குள்ள யாரையுமே வரவிட மாட்டோம்.

சுஜு வாசன், நிவிஷா, அனன்யா
சுஜு வாசன், நிவிஷா, அனன்யா

எங்க போனாலும் போட்டோகிராபர் கூடவே கூட்டிகிட்டு போவீங்களான்னு நிறைய பேர் இன்ஸ்டாவில் கமெண்ட் பண்ணுவாங்க. நாங்க பெரும்பாலும் ஐந்து ஆறு பேர் சேர்ந்துதான் ஊர்சுற்றுவோம். அதில், நாங்க மூணு பேர் நிறையா போட்டோ எடுத்துப்போம். ஒவ்வொரு தருணமும் பொக்கிஷம். எல்லாத்தையும் போட்டோ பிடிச்சு பத்திரமா வெச்சிப்போம்’’ என்றார் உற்சாகம் பொங்க.

அடுத்த கட்டுரைக்கு