Published:Updated:

"புது பரிமாணத்தில் சந்திக்கிறேன்!" - `ராஜா ராணி 2' தொடரிலிருந்து விலகிய அர்ச்சனா

அர்ச்சனா லேட்டஸ்ட் போட்டோஷூட்

'ராஜா ராணி சீசன் 2' தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமானவர் அர்ச்சனா. ஆதித்யா தொலைக்காட்சியில் விஜேவாக தன் கரியரை ஆரம்பித்த அர்ச்சனா இப்போது 'ராஜா ராணி 2' தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.

'ராஜா ராணி சீசன் 2' தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமானவர் அர்ச்சனா. ஆதித்யா தொலைக்காட்சியில் விஜேவாக தன் கரியரை ஆரம்பித்தவர், இந்தத் தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக புது அவதாரம் எடுத்தார். இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அர்ச்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அர்ச்சனா
அர்ச்சனா

அதில், "நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் நமக்கு புது ஆச்சரியத்தை தினசரி நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கும். என்னுடைய அடுத்தக்கட்டத்திற்கான திட்டமிடலை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஒட்டுமொத்த டீமிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு வரைக்கும் எனக்கு அன்பையும், ஆதரவையும் அளித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றியைச் சொல்ல கடமைப்பட்டிருக்கேன். அனைவரையும் என் புது பரிமாணத்தில் சந்திக்கிறேன். லவ் யூ ஆல்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

அர்ச்சனா பதிவு
அர்ச்சனா பதிவு

இந்தத் தொடரில் 'அர்ச்சனா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு சீரியலில் தற்போது வளைகாப்பு நடப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் வேளையில் அந்தத் தொடரிலிருந்து அவர் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.