Published:Updated:

``ஷாப்பிங்ல அடையாளம் கண்டுபிடிச்சு திட்டுறாங்க!'' - `யாரடி நீ மோகினி' சயித்ரா

 'யாரடி நீ மோகினி' சயித்ரா
'யாரடி நீ மோகினி' சயித்ரா

'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலுக்குப் பிறகு தற்போது ஜி தமிழில் ஒளிபரப்பாகிவரும் 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடித்து வருகிறார், சயித்ரா. சுட்டித்தனம் உண்மையான கேரக்டர் என்றாலும், வில்லியாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் அசத்துகிறார். கொஞ்சிப் பேசும் குறும்புக்காரியுடன் பேசினேன்.

நிஜத்தில் ஜாலி டைப், சீரியலில் வில்லி.. எப்படியிருக்கு இந்த அனுபவம்?

சயித்ரா
சயித்ரா
'யாரடி நீ மோகினி'

''சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் அவ்வளவு ஜாலியா இருக்கும். சீன் டேக் எடுத்து முடித்த பிறகு, டைரக்டர் சாரும் எங்க கேங்கில் ஐக்கியமாகிடுவார். ஒரு விஷயம் தெரியுமா, நான் இதுவரை டைரக்டர்கிட்ட திட்டு வாங்குனதே இல்லை. சில நேரங்களில் 10,15 டேக் தாண்டிப்போனாதான், அவர் கடுப்பாவார். இதுவரை இரண்டும் அல்லது மூன்று டேக்குக்குமேல நான் போனதே இல்லை. ஆரம்பத்தில் தமிழ் தெரியாம தடுமாறினேன். இதுக்காகவே வீட்டுல, வெளியில தமிழில்தான் பேசிக்கிட்டு இருப்பேன். இப்போ தமிழில் பாஸ் மார்க் வாங்கியிருக்கேன். அதனால, வசனத்தை அப்படியே பேசி முடிச்சிடுவேன்."

சினிமா வாய்ப்பு வந்திருப்பதாகச் சொல்கிறார்களே?

''எனக்கு சினிமாவில் நடிக்கணும்ங்கிற ஆசையோ, கனவோ கிடையாது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'வட்டம்' படத்தில் சிபிராஜ் சார்கூட நடிச்சிருக்கேன். அடுத்த மாதம் டப்பிங் பேசப்போறேன். ஆண்ட்ரியா ஹீரோயின், நான் இரண்டாவது ஹீரோயினா நடிச்சிருக்கேன். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரும்போது, கதை பிடிச்சிருந்தா நடிப்பேன். அதேநேரம், நானா வாய்ப்பு தேடியும் போறதில்லை. எனக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, இங்கிலீஷ் என நான்கு மொழிகள் தெரியும். அதனால, எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்டு வரணும்னு ஆசை இருக்கு.''

கடுப்பான சுஜிதா; மெளனம் காக்கும் தயாரிப்பு நிறுவனம்! - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' பஞ்சாயத்து

ஸ்வேதா கேரக்டருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து?

சயித்ரா
சயித்ரா

''முத்து மாமாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் ஆசைப்படுவேன். முத்து மாமாவை யார் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க என்பதுதான் கதையே. கதைப்படி நெகட்டிவ் ரோலான ஸ்வேதா கேரக்டரில் நடிக்கிறேன். வெண்ணிலாவை அடிக்கிற சீன்லாம் இருக்கு. அப்படி எந்தளவுக்கு வில்லியாக நடிக்கிறேனோ, அந்த அளவுக்கு வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடிக்கும் நட்சத்திராவுடன் ரொம்ப நெருக்கமா இருப்பேன். அவளும், நானும் ஷூட்டிங் ஸ்பாட்டையே கலகலக்க வெச்சிடுவோம். இவ்வளவு சின்ன வயதில் நெகட்டிவ் ரோலில் நடிப்பது நானாகத்தான் இருக்கும். ஷாப்பிங் போகும்போது பலபேர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு, திட்டவும் செய்றாங்க. அதுதான் நம்ம நடிப்புக்குக் கிடைக்கிற அங்கீகாரம்னு நினைக்கிறேன்.''

சின்ன வயதில் நெகட்டிவ் ரோலில் நடிப்பது எப்படியிருக்கு?

''கொஞ்சம் கஷ்டம்தான். இயக்குநர் சொல்லிக்கொடுக்கிறதை எக்ஸ்பிரஷனோடு நடிக்கிறோம்; அவ்வளவுதான். தமிழில் சில வார்த்தைகள் புரியலைன்னாலும், சமாளிச்சு நடிச்சிடுவேன். நீங்க கேட்ட கேள்வியைப் பலபேர் என்கிட்ட கேட்டிருக்காங்க. ஆனா, சின்ன வயசுலேயே நெகட்டிவ் ரோல் கிடைக்கும்போது, நிறைய விஷயங்களைக் கத்துக்கிற மாதிரி இருக்கும். சில நேரங்களில் சீரியஸா பேசிட்டு, நானும், நட்சத்திராவும் சிரிப்பை அடக்கமுடியாம சிரிச்சிருக்கோம்."

சயித்ரா
சயித்ரா

அடுத்தடுத்து நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாரா இருக்கீங்களா?

''என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துற கதாபாத்திரமா இருந்ததால இதை ஒப்புக்கொண்டேன். மத்தபடி, என் ஒரிஜினல் கேரக்டருக்கு ஏத்தமாதிரி ஜாலியான கதாபாத்திரத்தில் நடிக்கவே ஆசை.''

குழந்தை வாய்ஸ்ல எல்லாம் பேசுவீங்களாமே?

''ஆமா. டைம் கிடைக்கும்போது 'டிக் டாக்' பண்ணுவேன். எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும், குழந்தை வாய்ஸ்ல பேசுறது ரொம்பப் பிடிக்கும்.''

``என் செண்பகம் நினைவு நாளில் ஒரு புத்தகம், ஒரு நாடகம்!'' - `தறி' மு.ராமசாமி

உங்களுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின்கள் பற்றி?

''எனக்கு நயன்தாராவை ரொம்பப் பிடிக்கும். அவ்வளவு அழகு அவங்க. அவங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்பப் பிடிக்கும். அவங்க நடிப்பு, வசனத்தை டெலிவரி பண்ற விதம்... எல்லாமே எனக்குப் பிடிக்கும். அவங்க நடிப்பைக் கவனிச்சு நான் நடிச்சுப் பார்ப்பேன்."

வாழ்க்கையில் உங்களை அதிகம் பாதித்த நிகழ்வு?

சயித்ரா
சயித்ரா

''என் தோழி ஒருத்தியின் இறப்புதான். ஒருநாள் ஷூட்டிங்கிற்காக காலையில் திருவான்மியூரிலிருந்து கிளம்பி வர்றேன். ஒரு போன் வந்துச்சு. என்னோட தோழி ஒரு விபத்துல இறந்துட்டதா சொன்னாங்க. அவளும், நானும் அவ்வளவு நெருக்கமா இருப்போம். கன்னடம், தெலுங்கு சீரியலில் ரெண்டுபேரும் சேர்ந்து நடிச்சிருக்கோம். ரொம்பச் சின்னப் பொண்ணு. அவள் இறந்த செய்தியைக் கேட்டதிலிருந்து இரண்டு நாள்கள் நான் நிம்மதியா தூங்கல, சாப்பிடல. இன்னும் மேக்கப் போடும்போது அவள் ஞாபகம் வரும். நான் என் வாழ்க்கையில் ரொம்ப அழுதது அப்போதான்." என உடைகிறார், சயித்ரா.

பின் செல்ல