Published:Updated:

"இரண்டாவது திருமணம் என்பதால் எதிர்க்குறாங்க‌!" - 'நாம் இருவர் நமக்கு இருவர்' நடிகை தீபா

தீபா - சாய் கணேஷ்

சாய் கணேஷ் தயாரிப்பு மேலாளராக இருந்த பல சீரியல்களில் நடிக்க தீபாவுக்கு வாய்ப்பு கிடைக்க இருவருக்கிடையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

"இரண்டாவது திருமணம் என்பதால் எதிர்க்குறாங்க‌!" - 'நாம் இருவர் நமக்கு இருவர்' நடிகை தீபா

சாய் கணேஷ் தயாரிப்பு மேலாளராக இருந்த பல சீரியல்களில் நடிக்க தீபாவுக்கு வாய்ப்பு கிடைக்க இருவருக்கிடையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

Published:Updated:
தீபா - சாய் கணேஷ்

'அன்பே சிவம்'. 'நாம் இருவர் நமக்கு இருவர்' உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்தவர் சீரியல் நடிகை தீபா. ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்து படிப்படியாக சீரியல் உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். அதேபோல் அனைத்து முன்னணிச் சேனல்களிலும் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளன. இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் பிறந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தற்சமயம் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்தச் சூழலில், சீரியல்கள் பலவற்றிற்குத் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றி தற்போது தயாரிப்பாளராக உயர்ந்திருக்கும் சாய் கணேஷ் பாபு என்பவருடன் தீபாவுக்கு அறிமுகம் கிடைக்கத்திருக்கிறது.

தீபா பாபுவுடன்
தீபா பாபுவுடன்

சாய் கணேஷ் தயாரிப்பு மேலாளராக இருந்த பல சீரியல்களில் நடிக்க தீபாவுக்கு வாய்ப்பு கிடைக்க இருவருக்கிடையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென ஒரு நாள் சாய் கணேஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட தீபா, 'மை லவ்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தீபாவும், சாய் கணேஷ் பாபுவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகின.

இருவரையும் நன்கு தெரிந்த சில சீரியல் ஆர்ட்டிஸ்டுகளிடம் இதுகுறித்து நாம் பேசியபோது,

'முறைப்படி விவாகரத்தாகி வாழ்ந்திட்டிருந்த தீபாவிடம் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லியே பழகினார் பாபு. தீபாவின் மகன் மீதும் அதிகப்படியான அக்கறை காட்டி வந்தார். அதனால தீபாவும் 'இந்தக் கல்யாணம் நடக்கும்'னு நம்பினாங்க.

ஆனா இடையில் என்ன நடந்ததோ, 'ரெண்டு பேருக்கிடையில் பிரச்னை'ங்கிற மாதிரியான பேச்சும் கேட்டுச்சு. இப்ப என்ன நிலைமைன்னு எங்களுக்குத் தெரியலை' என்றார்கள் அவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தீபா பகிர்ந்த போட்டோவைச் சுட்டிக்காட்டிப் பேசிய சிலர், 'தீபா, பாபு ரெண்டு பேருக்கும் இடையில் பிரச்னை கிடையாது. ஆனா இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு ரெண்டு பேர் வீட்டுலையும் முழு ஆதரவில்லை.

தீபா
தீபா

தீபா நேரடியா பாபு வீட்டுக்கே போய் 'கல்யாணம் செய்து கொள்கிறேன்னு சொல்லித்தான் பழகினார்'னு சொன்னதாகவும் ஆனாலும் பாபு வீட்டுல பிடி கொடுக்காமப் பேசி அனுப்பிவிட்டதாகவும் கேள்விப் பட்டோம். அந்த விரக்தியிலதான் பாபுவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவைப் பொது வெளியில் தீபா வெளியிட்டதாகத் தெரிய வந்தது'' என்கிறார்கள்.

'திருமணம் நடக்காதோ' என்ற விரக்தியில் தீபா தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு அதற்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனதெல்லாம் கூட நடந்தது என்றனர் சிலர்.

தீபாவையே தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டோம்.

''அந்தப் போட்டோவை நான்தான் என்னுடைய சோஷியல் மீடியா பக்கத்துல பகிர்ந்தேன். ஆனா கல்யாணம் தொடர்பா இப்போதைக்கு என்னால உறுதியான ஒரு பதிலைச் சொல்ல முடியலை. 'ஆமா நாங்க கல்யாணம் செய்துக்கப் போறோம்'னு சொல்ல கொஞ்ச நாள் ஆகலாம். ஆனா 'இல்லை'னு சொல்ல மாட்டேன்.

தவிர இது கொஞ்சம் சென்சிடிவா அணுக வேண்டிய விஷயமா இருக்கு. தவறாக ஏதாவது தகவல்கள் வெளியானா நான் மட்டுமே பாதிக்கப்படுவேன். அதுவும் போக இரண்டாவது திருமணம்கிறதால பெரியவங்க, சொந்தக்காரங்கன்னு எதிர்ப்பவர்கள் கொஞ்சம் பேராவது இருப்பாங்க இல்லையா? எல்லாத்தையும் சரி செஞ்சுட்டு எந்தவொரு தகவல் என்றாலும் முறைப்படி அறிவிக்கலாம்னு இருக்கோம்" என்றார் அவர்.