Published:Updated:

``அடுத்து தண்ணீர்ப் பிரச்னை பத்தி பேசற ஒரு கேங்ஸ்டர் கதை!'' - `பிரியமானவள்’ ஹரிப்பிரியா

`பிரியமானவள்' சீரியலில் நடித்துக்கொண்டிருந்த ஹரிப்பிரியாவை திடீர்னு ஆளைக் காணோம். என்ன ஆச்சுனு அவரிடமே கேட்டோம்.

haripriya
haripriya

'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவங்க ஹரிப்பிரியா. அவங்க கடைசியா நடிச்ச சீரியல் பிரியமானவளே. அதில் இசை என்கிற கேரக்டரில் நடிச்சிருப்பாங்க. ரொம்ப போல்டான கேரக்டரா மக்களோட மனசை கொள்ளையடிச்சாங்க. திடீர்னு ஆளையே காணோம். அவரைக் கண்டுபிடித்து ஒரு சிறிய பேட்டி கண்டோம்.

haripriya
haripriya

``என்னங்க ரொம்ப நாளா எந்த சீரியலிலும் ஆள காணோம்?”

``நான் இப்போ ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். படத்தோட பேரு `வருணன்’. டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஹீரோயினியாக நானும் கேப்ரியலும் நடிச்சுட்டு இருக்கிறோம். இது ஒரு கேங்ஸ்டர் கதை. இதுல மெயினா சொல்றது தண்ணீர்ப் பிரச்னைதான். வாட்டர் கேனை வெச்சுத்தான் படத்தோட கதைக்களம் நகருது. டைரக்டர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் இந்தப் படம் பண்ணிக்கிட்டு இருக்கோம். படத்தோட ரிலீஸுக்காக வெயிட்டிங்.”

``என்னங்க உங்க வாட்ஸ் அப் டிபி’ல பரதநாட்டியம் போஸ் கொடுத்து இருக்கீங்களே?”

``என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க? ஐந்து வயசுல இருந்தே நான் பரதம் கத்துகிட்டு, அரங்கேற்றமெல்லாம் பண்ணியிருக்கேன். இப்போ கூட பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளுக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கேன். எனக்கு பரதநாட்டியம் ஆடுவது ரொம்பப் பிடிக்கும்.”

இது ஒரு கேங்ஸ்டர் கதை. இதுல மெயினா சொல்றது தண்ணீர்ப் பிரச்னைதான். வாட்டர் கேனை வச்சுத்தான் படத்தோட கதைக்களம் நகருது.
ஹரிப்பிரியா

``சின்னத்திரைக்கும் பெரிய திரையில் நடிக்குறதுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்றீங்க?”

``சின்னத்திரையில ஒரு குடும்பமாய் நடிப்போம். அது ரொம்ப நாள் போய்கிட்டு இருக்கும். பெரிய திரையில பெரிசா ஒண்ணும் வித்தியாசம் தெரியல. கேமரா முன்னாடி போய் நிப்பேன். டைரக்டர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே நடிச்சுக் கொடுத்துட்டு வந்திடுவேன்.”

haripriya
haripriya

``தொடர்ந்து சீரியல் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா, இல்ல இனி சினிமா மட்டும் தானா?”

``சீரியல் வேற சினிமா வேற. நல்ல கேரக்டர் எதுல வந்தாலும், அதுல கண்டிப்பா நடிப்பேன். இதுதான்னு வித்தியாசப்படுத்தி நடிக்க விரும்பல."

இமாலய மலைகளை ரசிச்சுகிட்டு, லடாக், லே’னு டிராவல் பண்ண ரொம்ப ஆசை. சீக்கிரமே, இமாலயாவோட ஒரு ‘செல்ஃபி’ எடுத்துப் போடுறேன் பாருங்க.
ஹரிப்பிரியா

``நீங்க நடிக்க வருவதற்கு யார் காரணம்?”

``கமல் சார், விஜய் சார், ஜோதிகா மேடம் இவங்க எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்களைப் பார்த்துதான் நடிக்கணும்ங்கற ஆசையே வந்துச்சு. இது மட்டும் இல்லங்க எனக்கு ரொம்ப லாங் டிராவல் பண்ண பிடிக்கும். இமாலய மலைகளை ரசிச்சுகிட்டு, லடாக், லே’னு டிராவல் பண்ண ரொம்ப ஆசை. சீக்கிரமே, இமாலயாவோட ஒரு `செல்ஃபி’ எடுத்துப் போடுறேன் பாருங்க.”

குதூகலச் சிரிப்பை உதிர்க்கிறார் ஹரிப்பிரியா!