Published:Updated:

``10 வருஷமா தினமும் காலையில அந்தப் பாட்டை கேட்டுட்டு வர்றேன்'' - `செம்பருத்தி' ஜனனி

முதல்வன் வெளியாகி இன்றுடன் இருபதாண்டுகள் நிறைவு.

muthalvan
muthalvan

அர்ஜுன், மனீஷா கொய்ராலா நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் `முதல்வன்' வெளியாகி இன்றோடு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. படத்தில் `உளுந்து விதைக்கயில...' பாடல் காட்சியில்தான் அர்ஜுன், மனிஷா கொய்ராலாவிடம் தன் காதலை வெளிப்படுத்துவார். வைரமுத்துவின் வரிகளை ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சுவர்ணலதா பாடியிருப்பார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பாடலை தினசரி காலையில் ஒரு முறையாவது கேட்டுவிடுகிறார், `செம்பருத்தி' சீரியலில் நடிக்கிற ஜனனி.

"ஷங்கர்கிட்ட சாரி சொல்லப் போனேன்...`முதல்வன்' படத்துல நடிக்கவெச்சிட்டார்!"- `கூத்துப்பட்டறை’ கலைராணி
sembaruthi janani
sembaruthi janani

`அந்தப் பாட்டுடன் அப்படியென்ன கனெக்‌ஷன்?'- ஜனனியிடம் கேட்டேன்.

``வயல்ல வேலை செய்திட்டிருக்கிற அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போற ஹீரோயின் மனீஷா கொய்ராலா, வழியில வரிசையா நல்ல சகுனங்களைச் சந்திச்சதா பாட்டுடைய வரிகள் இருக்கும். சகுனம் பார்ப்பது நல்லதா நல்லதில்லையாங்கிற ஆராய்ச்சிக்குள் நான் போக விரும்பறதில்லை. ஆனா இந்தப் பாட்டு எனக்குள் பாசிடிவான எனர்ஜியை தந்திட்டுருக்குங்கிறதை நான் அனுபவ பூர்வமா உணர்ந்து சொல்றேன். அதனால எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு. காலையில ஷூட்டிங் கிளம்பறப்ப பாட்டைக் கேட்டுட்டுக் கிளம்பினா, அந்த நாள் அவ்வளவு ஒரு உற்சாகமான நாளா இருக்கும்'' என்கிறார்.