Published:Updated:

"ஈஸ்வர் - மகாலட்சுமி திருமணத்துக்கான ஆதாரங்கள் இருக்கு!"- மீண்டும் கிளம்பும் ஜெயஸ்ரீ குடும்ப சர்ச்சை

’’ஜெயஸ்ரீக்குப் பல்வேறு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கேள்விப்படுகிறேன். ஒருவேளை அவருக்கு ஏதாவது நேரிட்டால் நான் காரணமில்லை.’’ - ஈஸ்வர்

சின்னத்திரைப் பிரபலங்களான நடிகர் ஈஸ்வருக்கும் அவரது மனைவி ஜெயஸ்ரீக்கும் இடையிலான குடும்பப் பிரச்னை சில ஆண்டுகளுக்கு முன் மீடியாவில் தினசரிச் செய்திகளாக வெளியானது நினைவிருக்கலாம். இன்னொரு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியுடன் நட்பிலிருந்துகொண்டு தன்னை ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக ஜெயஸ்ரீ புகார் சொல்ல, பதிலுக்கு ஈஸ்வரும் ஜெயஸ்ரீ மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார். ஈஸ்வர், ஜெயஸ்ரீ, மகாலட்சுமி, அவரின் கணவர் அனில் என ஆளாளுக்குத் தனித்தனியே பிரஸ் மீட் நடத்தி அவரவர் தரப்பு நியாயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒருவழியாக இந்தப் பிரச்னை நீதிமன்றத்துக்குச் செல்ல, இப்போது ஜெயஸ்ரீ - ஈஸ்வர் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தச் சூழலில், ’’ஜெயஸ்ரீக்குப் பல்வேறு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கேள்விப்படுகிறேன். ஒருவேளை அவருக்கு ஏதாவது நேரிட்டால் நான் காரணமில்லை’’ எனச் சில தினங்களுக்கு முன் கூறி மறுபடியும் இந்த விவகாரத்தை எழுப்பியிருக்கிறார் ஈஸ்வர்.
மகாலட்சுமி - ஜெயஸ்ரீ, ஈஸ்வர்
மகாலட்சுமி - ஜெயஸ்ரீ, ஈஸ்வர்

"இந்தக் கொலை மிரட்டல் உண்மையா? ஈஸ்வர் ஏன் இப்போது இந்த விஷயத்தைப் பேசுகிறார்?" என ஜெயஸ்ரீயிடமே கேட்டேன்.

‘’சாதாரண ஆளுக்குக்கூடத் தெரியும்ங்க. ஒருத்தருக்குக் கொலை மிரட்டல் வந்தா அவங்கதானே அதுபத்திக் கவலைப்படணும். எனக்குக் கொலை மிரட்டல் வருதுன்னா இவர் எதுக்குங்க கவலைப்படணும்?

எங்க விவாகரத்து வழக்கு நிலுவையில இருக்கிறப்ப, இந்த மாதிரி தேவையில்லாததையெல்லாம் பேசறது பிரச்னையைத் திசை திருப்பற வேலைதான். இதை நீதிமன்ற அவமதிப்பாக்கூடக் கருதலாம். ஈஸ்வர் ஏன் இப்ப இப்படிப் பேசறார்னு எனக்குத் தெரியலை.

"பை... பை... மஹா!" - `நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரிலிருந்து விலகுகிறாரா ரச்சிதா?

என்னுடைய விவாகரத்து வழக்கைப் பொறுத்தவரைக்கும் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பைச் சொல்லட்டும்னு காத்திருக்கேன். எனக்கு அஞ்சு பைசாகூட கொடுக்காம வழக்கை முடிக்கலாம்னு அவர் நினைக்கிறார். அது நடக்காது. நான் எனக்கு உரிய நீதி கிடைக்கற வரைக்கும் என் சட்டப் போராட்டத்தை விடமாட்டேன். ஏன்னா இவரால நான் நிறைய துன்பங்களை அனுபவிச்சுட்டேன். என்னுடைய அந்தத் துயரங்களுக்கு, நான் அனுபவிச்ச வேதனைகளுக்கு இவர் பதில் சொல்லியே ஆகணும். எங்காச்சும் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடற ஐடியாலகூட அவர் இருக்கார்னு கேள்விப்பட்டேன். நான் சட்டப்படி எல்லாப் பக்கமும் லாக் பண்ணி வச்சிருக்கேன். அதனால் அவர் இந்த வழக்குல இருந்து என்னை ஏமாத்திட்டுத் தப்பிச்சிடவே முடியாது.

சட்டப்படி தனக்குச் சாதகமா தீர்ப்பு கிடைக்காதுன்னு நினைச்சுதான் விஷயத்தைத் திசை திருப்ப என்னத்தையாவது மீடியாவுல பேசறார்னு நினைக்கிறேன். எப்பவுமே ஒரு பெண்மீது சுலபமா வீசற ஒரு குற்றச்சாட்டு, அவளுக்குப் பல பேருடன் பழக்கம் இருக்குன்னு சொல்றது. அதையேதான் இவரும் பேசறார். என்ன வேணும்னாலும் பேசிட்டுப் போகட்டும். கடவுள் பார்த்துப்பார்.

 ஜெயஶ்ரீ - ஈஸ்வர்
ஜெயஶ்ரீ - ஈஸ்வர்

எனக்கு உதவி செய்ய வந்தவங்களைத் தப்பாப் பேசறார். இவர் யாரை அவதூறாப் பேசினாரோ, அவங்க தரப்புல இருந்தே இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்காங்க. அப்படியும் ’திரும்பத் திரும்ப நான் ஏதாவது பேசிட்டே இருப்பேன்’னு இவர் பேசினா, இவர் பத்திப் பேசவும் எங்கிட்ட நிறைய விஷயங்கள் இருக்கு. கோர்ட்ல எனக்கும் அவருக்கும் கல்யாணமே நடக்கலைன்னு அவருடைய வக்கீல் வாதாடினார்.

ஆனா ஈஸ்வருக்கும் மகாலட்சுமிக்கும் இடையில் ஒரு வருஷம் முன்னாடியே கல்யாணம் நடந்திருக்கு. அதுக்கான ஆதாரங்கள் எங்கிட்ட இருக்கு. அதையெல்லாம் வெளியிட வேண்டியதுதான்!’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு