சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் TV: என் பூர்வீகம் தெரியுமா?

கௌசல்யா
பிரீமியம் ஸ்டோரி
News
கௌசல்யா

நான் யார்கிட்டயும் தம்பட்டம் அடிக்கற ஆளு இல்லை. ஆனா உண்மைகள் அப்படியேதானே இருக்கும்.

ன், விஜய், ஜீ தமிழ் என மூன்று முன்னணி சேனல்களிலும் சேர்த்து ஒரே நேரத்தில் நான்கு சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தவர் கௌசல்யா செந்தாமரை. மறைந்த வில்லன் நடிகர் செந்தாமரையின் மனைவி. அதிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பூவே பூச்சூடவா’ ஆகிய சீரியல்களில் பாட்டிக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. தற்போது நான்கு சீரியல்களில் ஒரு சீரியலை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற மூன்று சீரியல்களிலிருந்து விலகிக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்.

‘`என்னாச்சு பாட்டி’’ என்றேன்.

‘`உடம்பு சரியில்லை. பத்து நாள் ஆஸ்பத்திரியில இருந்துட்டு வந்தேன். இன்னும் கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுக்கறது நல்லதுன்னு டாக்டர்கள் சொன்னாங்க. அதுவும் போக கொரோனாவுக்குப் பிறகு இப்ப ஷூட்டிங்லாம் ரொம்ப தூரத்துல நடக்குது. என்னால போயிட்டு வர முடியலை. அதனால நானே ‘எனக்குப் பதிலா வேற ஆர்ட்டிஸ்டுகளைப் போட்டுக்கங்கப்பா’ன்னு சொல்லிட்டேன்’’ என்றவர்,

“நான் ஆஸ்பத்திரியில இருந்தப்ப என்னைப் பத்தி என்னென்னவோ செய்தி பரவியிருக்கு. அதனால நீங்க தெளிவாச் சொல்லிடுங்க. நானேதான் ஓய்வு வேணும்னு எடுத்திருக்கேன். ‘பாட்டியை சீரியல்ல இருந்து தூக்கிட்டாங்க’ன்னெல்லாம் யாரும் நாக்கூசாமப் பேசிடாதபடி பார்த்துக்கங்க’’ என்றார்.

``அப்படி என்ன பாட்டி செய்தி பரவியது’’ என்றேன்.

‘` `ஆஸ்பத்திரியில மருத்துவத்துக்குக் காசு இல்லாமக் கிடக்காங்க. யாராவது உதவுங்க’ன்னு சொல்லியிருக்காங்க. நான் யார்கிட்டயாச்சும் சாப்பாட்டுக்கு இல்லைன்னு கேட்டேனா? இப்படியெல்லாம் இல்லாததையும் பொல்லாததையும் கிளப்பி விடறவங்களுக்கு என் பூர்வீகம் தெரியுமா?

கௌசல்யா
கௌசல்யா

நான் யார்கிட்டயும் தம்பட்டம் அடிக்கற ஆளு இல்லை. ஆனா உண்மைகள் அப்படியேதானே இருக்கும். சென்னையில தியாகராய நகர்னு சொல்றீங்களே... அந்தத் தியாகராயச் செட்டியார் என்னுடைய சித்தப்பா. ஒரு பாரம்பர்யமுள்ள குடும்பப் பின்னணியில இருந்துதான் வந்திருக்கேன். அந்தக் காலத்துலயே படமெல்லாம் எடுத்திருக்கு எங்க குடும்பம். எம்.ஜி.ஆர் நாடகக் கம்பெனியில இருந்திருக்கேன். நடிகர் செந்தாமரைக்கும் எனக்கும் 1969-ல் கல்யாணம் நடந்தது. இன்னைக்கு என்னுடைய நிலைமை வேற மாதிரி இருக்கலாம். அதுக்கு யார் என்ன செய்ய முடியும். எல்லார்கிட்டயும் என் பூர்வீகக் கதையை உட்கார்ந்து சொல்லிட்டிருக்க முடியாது. பழைய பெருமையைப் பேசித்தான் இப்ப என்ன ஆகப் போகுது.

என்னுடைய ஆதங்கம் என்னன்னா, ஒரு ஆர்ட்டிஸ்டைப் பத்தி ஒரு தகவல் கிடைக்குதுன்னா, அவசரப்படாம விசாரிச்சு உண்மையை மட்டும் சொல்லுங்கங்கிறதுதான்’’ என்கிறார்.