Published:Updated:

"`விடாது கருப்பு' தொடரில் நடிச்சது நான்தான்னு பலருக்கும் தெரியாது!"- சீக்ரெட் பகிரும் கவி டிங்கு

கவி டிங்கு

"நாகா சார் எனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுத்தார். ஒண்ணு, தேவதர்ஷினி அவங்க பண்ணின கேரக்டர், இன்னொன்னு நான் பண்ணின கேரக்டர்!" - கவி டிங்கு

"`விடாது கருப்பு' தொடரில் நடிச்சது நான்தான்னு பலருக்கும் தெரியாது!"- சீக்ரெட் பகிரும் கவி டிங்கு

"நாகா சார் எனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுத்தார். ஒண்ணு, தேவதர்ஷினி அவங்க பண்ணின கேரக்டர், இன்னொன்னு நான் பண்ணின கேரக்டர்!" - கவி டிங்கு

Published:Updated:
கவி டிங்கு
சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர் கவி. இவர் நடிகர் டிங்குவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு பிரேக் எடுத்துவிட்டு அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். 'விடாது கருப்பு' தொடர் முதல் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள அவரிடம் பேசினோம்.

"இப்ப எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. நானும், என் கணவரும் சேர்ந்து இங்க ஒரு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கோம். லைஃப்ல மட்டும் இல்லைங்க ஒர்க்லேயும் அவர் என் பார்ட்னர். நாங்க மார்பிள் சம்பந்தமான பிசினஸ் பண்றோம். அவர் வெளி வேலைகள் எல்லாம் பார்த்துப்பார். நான் கிளையன்ஸ்ட்கிட்ட பேசுறது, ஆபிஸ் ஒர்க் பார்த்துக்கிறதுன்னு அட்மின் வேலைகளை கவனிச்சிக்கிறேன். வீட்டிலும் அதிகமா பிசினஸ் பற்றிதான் பேசிட்டு இருப்போம்.

கவி டிங்கு
கவி டிங்கு

இப்ப வரை பாஸ் சீட்ல அவர் உட்கார்ந்தது இல்ல. யார் எங்களைச் சந்திக்க வந்தாலும் என்னை அந்த சீட்டில் உட்கார வச்சு அழகு பார்ப்பார். ரெண்டும் சின்ன பசங்க என்பதால் அவங்களைக் கவனிச்சிக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கும். நம்ம ஊர் மாதிரி இங்க வேலை ஆட்கள் எல்லாம் கிடையாது. நம்ம வீட்டு வேலைகளை நாமளேதான் பார்த்தாகணும். வீட்டு வேலைகளை முடிச்சிட்டு, ஆபிஸ்லேயும் வேலை பார்க்கணும். ரெண்டு பேரும் சேர்ந்து பிசினஸ் பண்றோம்னா நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வரும்னு நினைச்சேன். ஆனா, அப்படி எதுவும் இப்பவரைக்கும் நடக்கலை. உடலளவிலும், மனதளவிலும் எனக்கு பயங்கர சப்போர்ட் என் கணவர்தான்! அவரும் வீட்டு வேலைகளை என்னுடன் ஷேர் பண்ணிப்பார். உண்மையை சொல்லணும்னா இதெல்லாம் நான் அவர்கிட்ட சொன்னதுகூட கிடையாது" என்றவரிடம் மீடியா என்ட்ரி குறித்துக் கேட்டதும் சிரிக்கிறார்.

"சின்ன வயசில இருந்தே டான்ஸ் மேல அதீத ஆர்வம். என் அப்பா தான் ஒய்.ஜி. மகேந்திரன் சாருடைய இன்ஸ்டிடியூட்ல சேர்த்துவிட்டார். என் ஃபேமிலி எனக்கு ஃபுல் சப்போர்ட். நான் என்ன கேட்டாலும் என் அப்பா இல்லைன்னு சொல்லாம வாங்கிக் கொடுத்துடுவாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல கூட உனக்கு எதுவும் கம்ஃபர்டபுளா இல்லைன்னா வந்துடுன்னு சொல்லிதான் அப்பா அனுப்பி வைப்பார். அப்படியே தொடர்ந்து சீரியல், படங்கள்னு பிடிச்சதைத் தேர்ந்தெடுத்து நடிச்சிட்டு இருந்தேன்.

கவி டிங்கு
கவி டிங்கு

இப்ப 'திருமதி செல்வம்' ரீ டெலிகாஸ்ட் பண்றதை பார்த்துட்டு பலரும் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணி விஷ் பண்ணுவாங்க. அந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பார்ட் செம ஜாலியா இருக்கும். அழற சீன் வந்தா எல்லாரும் அழுதுடுவாங்க. எல்லாரும் அவ்வளவு கேரிங் ஆக இருப்பாங்க. என் கணவரும் அந்த சீரியல்ல நடிச்சாரு. நாங்க ரெண்டு பேரும் திருமணம் பண்ணிக்கப் போறோம்னு சொன்னதும் செட்ல எல்லாருக்கும் பயங்கர ஷாக். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அந்த சீரியலில் என்னால நடிக்க முடியல. ஏன்னா, ரெண்டு பேரும் ஒரே சீரியலில் நடிச்சிட்டு இருந்ததால அவருக்கு ஷூட் இருக்கும்போது நான் ஃப்ரீயா இருப்பேன், எனக்கு ஷூட் இருக்கும்போது அவர் ஃப்ரீயா இருப்பார். அதனால சரி யாராவது ஒருத்தர் விலகிடலாம்னு முடிவெடுத்து நான் சீரியலில் இருந்து விலகிட்டேன்" என்றவரிடம் சீரியலில் நடந்த மறக்க முடியாத சம்பவம் குறித்துக் கேட்டோம்.

"சீரியலில் எனக்கு மேரேஜ் ஆகுற ஷூட் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து நாள்கள் எடுத்தாங்க. அந்த ஷூட்டுக்கு நிறைய ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் வந்திருந்தாங்க. அங்க என் ஐபோனை யாரோ திருடிட்டாங்க. போன் தொலைஞ்சிருச்சுன்னு டைரக்டர்கிட்ட சொல்லவும் அவரும் மைக்லேயே ஐந்தாறு தடவை சொன்னாரு. ஆனாலும், தொலைஞ்ச ஃபோன் திரும்ப கிடைக்கவேயில்ல. எனக்கு ஐபோன் ரொம்ப பிடிக்கும். புது மொபைல் வர, வர அப்டேட் பண்ணிட்டே இருப்பேன். அந்த போன் தொலைஞ்சது ரொம்ப கஷ்டமாகிடுச்சு. அப்புறம் அதே மாதிரி வேற ஒரு ஃபோன் எங்க அப்பா வாங்கிக் கொடுத்தாரு... அதை எப்பவும் மறக்க மாட்டேன்.

கவி டிங்கு
கவி டிங்கு

நான் ஒர்க் பண்ணின பல இயக்குநர்கள் ஈஸி டு கோ என்பதாகத்தான் இருந்திருக்காங்க. பாலா சார், பி.வாசு சார், குமரன் சார், நாகா சார்னு நான் ஒர்க் பண்ணின எல்லா இயக்குநர்களுமே ரொம்ப நல்ல டைப்" என்றவரிடம் 'விடாது கருப்பு' (மர்மதேசம்) தொடர் அனுபவம் குறித்துக் கேட்டோம்.

"நாகா சார் எனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுத்தார். ஒண்ணு, தேவதர்ஷினி அவங்க பண்ணின கேரக்டர், இன்னொன்னு நான் பண்ணின கேரக்டர். எனக்கு நான் ஓகே சொன்ன கேரக்டர் வித்தியாசமா இருக்குன்னு தோணுச்சு. பல்லு செட் வச்சிகிட்டு, டார்க் மேக்கப் போட்டுகிட்டு நடிச்சேன். அந்த சீரியலுக்காக நெயில்பாலிஷ் கூட போடாம இருந்தேன். ஷூட்டுக்கு இடையில் மூணு மாசம் ஒய்.ஜி.சாருடன் புரோகிராமிற்காக அமெரிக்கா போக வேண்டியிருந்தது. போயிட்டுத் திரும்பி வந்ததும், 'அப்படியே வந்துருக்கம்மா நான் கூட ஃபாரீன் போயிட்டு வர்றப்ப ஹேர்கலர் ஏதாவது பண்ணிட்டு வந்துடுவியோ'ன்னு பயந்தேன்னு சொன்னார். அந்த அளவுக்கு இயல்பா அந்தக் கேரக்டரில் நடிச்சேன்.

செட்ல எல்லாரும் ஜாலியா கலகலன்னு பேசிட்டு இருப்போம். வெகேஷன் போகுற மாதிரி பொள்ளாச்சிக்குப் போயிட்டு போயிட்டு வந்துட்டு இருப்போம். அப்ப சீரியல் டெலிகாஸ்ட் ஆகும் போது இருந்த ரீச்சை விட, இப்ப ரீ டெலிகாஸ்ட் பண்ணினதும் பயங்கர ரீச் ஆகிடுச்சு. பலருக்கும் பல்லு வச்சி நடிச்சது நான் தான்னு தெரியாது. பாலா சார்கிட்ட அது நான்தான்னு சொல்லவும் அவரும் ஆச்சரியப்பட்டார். 'அந்தக் கிராமத்தில் யாரோ ஒரு பொண்ணு நடிச்சிருக்காங்கன்னு நினைச்சோம். நீங்கதான் நடிச்சீங்களா'ன்னு கேட்டார்" என்றவரிடம், "சமீபத்தில் நீங்க மறுபடி சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போறீங்கன்னு பலரும் சொன்னாங்களே?" எனக் கேட்டோம்.

கவி டிங்கு
கவி டிங்கு

"அந்த போஸ்ட்டை நானும் உங்களை மாதிரி பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன். நான் அமெரிக்காவில் பிஸினஸில் பிஸியா இருக்கேன். நாங்க சென்னையை ரொம்பவே மிஸ் பண்றோம். ஊருக்கு வந்தே பல வருஷம் ஆயிடுச்சு. அதனால நடிக்கிறதுக்கு எல்லாம் இப்போதைக்கு பிளான் இல்லைங்க. ஆனா, என் கணவருக்கு கதை இயக்கணும்னு ஆசை இருக்கு. அதனால, சீக்கிரமே தயாரிப்பாளரா வேணும்னா எங்களை பார்க்கலாம்" எனப் புன்னகைக்கிறார்.