Published:Updated:

``20 வருஷமா நடிக்கிறேன்; ஒரே ஒரு விஷயம் உறுத்தலா இருக்கு!’’ - `நிலா’ கவிதா ஷேரிங்க்ஸ்

கவிதா
கவிதா ( நிலா சீரியல் )

``என்னதான் சினிமாவில் நடித்திருந்தாலும், எனக்கு கைகொடுத்தது சீரியல்தான். ''

வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிக் கடந்த 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் சிறந்த குணசித்திர நடிகையாக வலம் வருகிறார் கவிதா. அமைதியான முகம், அசத்தலான நடிப்பு இதுதான். இவரின் வெற்றிக்கு முக்கிய காரணம். தற்போது நிலா, வள்ளி உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சீரியல் அனுபவம், குடும்பம் உள்ளிட்டவை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.  

உங்க சீரியல் என்ட்ரி பற்றிச் சொல்லுங்க?

கவிதா
கவிதா

``திரைப்படங்களில் சைல்ட் ஆர்டிஸ்டாதான் என் பயணத்தைத் தொடங்கினேன். நிறைய படங்கள் பண்ணி இருக்கேன். ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான `நிம்மதி உங்கள் சாய்ஸ்’ சீரியலில் நடிச்சேன். அதன்பிறகு ஏ.வி.எம் தயாரிப்பில் வெளியான பெண்ணின் கதை, சக்தி, பயணம், அம்பிகை என்று அப்படியே பயணம் தொடருது. தெலுங்கு சீரியல்களும் கொஞ்சம் பண்ணியிருக்கேன்.

1999 முதல் சீரியல்கள்ல நடிச்சிட்டு இருக்கேன். கிட்டத்தட்ட 20 வருஷமா இந்த இண்டஸ்ட்ரில இருக்கேன். எப்பயும் ஹோம்லியான கேரக்டர்கள்தான் என்னைத் தேடி வருது. நானே நெகட்டிவ் ரோல் நடிக்கணும்னு ஆசைப்பட்டாலும், உங்க முகத்துக்கு அதெல்லாம் செட் ஆகாதுன்னு சொல்லிட்றாங்க. ஒன்றிரண்டு சீரியல்களில் நெகட்டிவ் ரோல் பண்ணியிருக்கேன். விஜய் டிவியில் `அவளும் நானும்’ , கலர்ஸ் தமிழில் வேலுநாச்சி இந்த இரண்டு சீரியல்களிலும் நெகட்டிவ் ரோல் பண்ணியிருக்கேன்.

கவிதா
கவிதா

நிறைய பேர் அந்த சீரியல் பார்த்துட்டு ஷாக் ஆகி கேட்டாங்க. ``என்னங்க நெகட்டிவ் ரோல் பண்ணியிருக்கீங்க’’ அப்படின்னு கேட்டாங்க. வில்லியா நடிக்கும்போது தினமும் ஷூட்க்கு ரொம்ப உற்சாகமா கிளம்பிப் போவேன். சாதுவான, ஹோம்லியான கேரக்டரில் நடிக்கும்போது மேக் அப், ஆடை எல்லாமே சிம்பிளா தான் பண்ணனும். ஆனால், வில்லி ரோலில் நடிக்கும்போது கிராண்டா ட்ரெஸ் பண்ணலாம். விதவிதமா நகைகள் போடலாம். சேலை கட்டலாம். அதனால் வில்லியா நடிக்கும்போது உற்சாகமா இருக்கும். இதான் வாய்ப்புன்னு ஆசைப்பட்டு வாங்கிய நகை புடவையெல்லாம் போட்டுப்பேன்.

கவிதா
கவிதா

என்னதான் சினிமாவில் நடித்திருந்தாலும், எனக்கு கைகொடுத்தது சீரியல்தான். கடந்த 20 வருஷமா சின்ன பிரேக் கூட எடுத்துக்க நேரமில்லாம தொடர்ந்து நடிச்சிட்டு இருக்கேன். கடவுள் ஆசியால் வாய்ப்புகள் இன்னைக்கு வரைக்கும் குறையவே இல்லை. என் ஃபேமிலி ரொம்ப சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க. அவங்களுடைய ஆதரவு இல்லாம என்னால இத்தனை வருஷமா எந்த பிரச்னையும் இல்லாம நடிச்சிட்டு இருக்க முடியாது. நான் கர்ப்பமா இருந்தபோதுகூட பிரேக் எடுத்துக்காம நடிச்சேன். அந்த சமயத்தில் சத்யஜோதி, விகடன் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் நான் வர பகுதியை மட்டும் சீக்கிரம் ஷூட் பன்ணிட்டு என்னை வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.

நீங்க நடிச்ச சீரியல்களில் உங்களுக்கு பிடிச்ச சீரியல்?

விஜய், கவிதா
விஜய், கவிதா

எனக்கு `அம்பிகை’ சீரியலில் வண்ணமதி என்னும் கேரக்டர் ரொம்ப பிடிக்கும். ரொம்ப தைரியமான பெண்ணா நடிச்சிருப்பேன். சக்தி சீரியலில் மேகா கேரக்டர் பிடிக்கும், அவளும் நானும், வேலுநாச்சி சீரியல்களில் நெகட்டிவ் ரோல் நடிச்சே . அது இரண்டுமே எனக்குப் பிடிக்கும். வேலுநாச்சி சீரியலில் எனக்கு நெகட்டிவ் ரோல். ரொம்பவே சவாலான கதாபாத்திரம். அந்த சீரியலுக்காகச் சிலம்பம் கத்துக்கிட்டேன். ஆனால், அந்த சீரியல் அந்தளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆகலை. இப்போ வள்ளி, நிலா சீரியல்களில் நடிச்சிட்டு இருக்கேன். இந்த சீரியல்களும் எனக்குப் பிடிக்கும்.

மீண்டும் வெள்ளித்திரைக்கு வருவீர்களா?

`குழந்தை நட்சத்திரம்' கவிதா
`குழந்தை நட்சத்திரம்' கவிதா

சினிமா வாய்ப்புகள் வருது. ஆனால் எனக்கு சீரியல் லைஃப் நல்லா செட் ஆகிடுச்சி. இந்த ஃபீல்டில் நல்ல பேர் இருக்கு. ஆனால் படங்களில் நடிக்கும்போது நாம வர்ற சீன்ஸ் குறைவா இருக்கும். துணை நடிகை அப்படங்குற பேர்தான் கிடைக்கும். அதுவும் தொடர்ந்து வாய்ப்புகள் வராது. அதனால் எனக்கு பிடிக்கல. நல்ல முக்கியத்துவம் உள்ள கேரக்டர் வந்தா நடிப்பேன்.

சின்னத்திரையில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதா ஒரு பேச்சு இருக்கே?

"சின்னத்திரை வரலாற்றில் 2000 எபிசோடுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சீரியல் எது தெரியுமா?!" #TvPotti

என்னோட  இத்தனை வருஷ சீரியல் அனுபவத்தில் ஒரே ஒரு விஷயம்தான் எனக்கு நெருடலா இருக்கும். சில வருடங்கள் முன்னாடி வரைக்கும் சீரியல்களில் லீட் ரோலுக்கு மட்டும்தான்  வேறு மொழி பேசும் ஆண், பெண்களை நடிக்க வெச்சிட்டு இருந்தாங்க. ஆனால் இப்போ, சீரியலில் வர பெரும்பாலான கதாபபாத்திரங்களில் வேறு மொழி பேசும் நடிகர் நடிகைகளை நடிக்க வைக்குறாங்க. சீரியல் ஹீரோ, ஹீரோயின் ரோலுக்கு தான் வேறு ஊர் ஆர்டிஸ்ட போட்றாங்கன்னு பார்த்தா, மாமியார், அக்கா, தங்கை போன்ற ரோலில் நடிக்கவும் பிற மொழி பேசும் நடிகைகளைத்தான் தேர்வு செய்றாங்க.

தமிழ் இண்டஸ்டிரில நிறையா கலைஞர்கள் வேலை இல்லாம, வாய்ப்புகள் இல்லாம இருக்காங்க. ஆனால் அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்காம, பிற மாநிலங்களிலிருந்து நடிகர் நடிகர்களைத் தேர்வு செய்வது ரொம்பவே எங்களை கஷ்டப்படுத்துற மாதிரி இருக்கு. இவையெல்லாமே சேனல்களின் முடிவுதான். அதே சமயம் ரொம்ப வருஷமா நடிக்காம இருந்து மெளனிகா மேடம் போன்றவர்கள் சீரியலில் கம் பேக் கொடுத்திருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. நம்மளோட முகங்கள் திரும்ப வருதுன்னு உற்சாசமா இருக்கு.

பியூட்டி சீக்ரெட்?

வேலுநாச்சி சீரியலில் எனக்கு நெகட்டிவ் ரோல். ரொம்பவே சவாலான கதாபாத்திரம். அந்த சீரியலுக்காகச் சிலம்பம் கத்துக்கிட்டேன்.

கடவுளின் கிஃப்ட் தான். நான் எண்ணெய் பொருள், ஸ்னாக்ஸ் இதெல்லாம் எடுத்துக்கமாட்டேன், நேரத்துக்கு சாப்பிடுவேன். ஷூட் முடிஞ்சி வீட்டுக்கு வந்ததும் வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும்  சுறுசுறுப்பா செய்வேன். வீட்டு வேலைகள் செய்யவே நேரம் சரியா இருக்கும். யோகா, உடற்பயிற்சிக்கெல்லாம் நேரம் இல்லை. வீட்டு  கொஞ்கம் பக்கத்துல இருக்க கோயிலுக்கு நடந்தே போவேன். என்னோட வேலையை ரொம்ப நேசிச்சு செய்றேன். ஸ்டெரெஸ் ஆகாம பார்த்துக்குவேன். எந்த பிரச்னை வந்தாலும் டேக் இட் ஈசி பாலிசி தான் ஃபாலோவ் பண்ணுவேன். இப்போ என் மகளுக்கு 11 வயது. சீரியலில் நடிக்கும் நேரம் போக அவளுடன்தான் அதிக நேரம் செலவிடுவேன். மனசை லைட்டா வெச்சிப்பேன்.

வெள்ளித்திரையில் மறக்க முடியாத அனுபவம்

விஜய்யின் தங்கையாக கவிதா..
விஜய்யின் தங்கையாக கவிதா..

7 வயசிலிருந்தே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். அஞ்சலி, தம்பிக்கு ஒரு பாட்டு, மனைவி வந்த நேரம், மாண்புமிகு மாணவன் போன்ற படங்கள்ல சின்ன பொண்ணா நடிச்சிருப்பேன். அந்தப் படங்கள் பார்க்கும்போது இப்பவும் மகிழ்ச்சியா இருக்கும். மாண்புமிகு மாணவன் படத்துல நடிக்கும்போது எனக்கு 12 வயசு, விஜய்க்கு தங்கச்சியா நடிச்சிருப்பேன். ரொம்ப அமைதி அவரு. அஜித்கூட வான்மதி, என் சுவாசக் காற்றே, முகவரி போன்ற படங்கள் பண்ணியிருக்கேன். அவர் ரொம்ப அடக்கமானவர். டவுன் டூ எர்த். நான் விஷ் பண்றதுக்கு முன்னாடியே அவர் விஷ் பண்ணிடுவாரு.

அடுத்த கட்டுரைக்கு