Election bannerElection banner
Published:Updated:

``எனக்கு ஏதாவது நடந்ததுன்னா என் புருஷனும் ஜெயஸ்ரீயும்தான் அதுக்குக் காரணம்!'' - மகாலட்சுமி

மகாலட்சுமி
மகாலட்சுமி

`ஈஸ்வர் - ஜெயஶ்ரீ குடும்பப் பிரச்னைக்குக் காரணம் என்ன?' விரிவாகச் சொல்கிறார் நடிகை மகாலட்சுமி

`தேவதையைக் கண்டேன்' சீரியலில் ஹீரோவாக நடிக்கும் என் கணவர் ஈஸ்வருக்கு, அந்த சீரியலின் வில்லியான மகாலக்ஷ்மியுடன் பழக்கம்; அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதால், விவாகரத்து கேட்டு ஈஸ்வர் என்னைத் துன்புறுத்துகிறார்' - சீரியல் நடிகை ஜெயஶ்ரீயின் இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஈஸ்வர் காவல்துறையால் கைதுசெய்யபட்டு, தற்போது ஜாமினில் வந்துள்ளார்.

`ஈஸ்வர் - ஜெயஶ்ரீ குடும்பப் பிரச்னைக்குக் காரணம் என்ன?'

விரிவாகச் சொல்கிறார் நடிகை மகாலட்சுமி. அவர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டிகள் குறித்து அவரிடமே பேசினோம்.

ஈஸ்வர்
ஈஸ்வர்
``நானும், என் மகளும் இருக்க எங்க முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு வெறுப்பேத்துவார்!'' -சீரியல் ஜெயஶ்ரீ

``ஈஸ்வரும் நானும் ஒரே சீரியலில் நடிக்கிறோம். அதனால், நல்ல நண்பர்களானோம். அவ்ளோதான். இந்த நட்பு, ஜெயஶ்ரீ கண்ணுக்கு தப்பா தெரிஞ்சிருக்குன்னு கடந்த ரெண்டு மூணு நாளாத்தான் எனக்கே தெரியுது. அதுவும் போக ஜெயஶ்ரீ ஏன் மாத்தி மாத்தி பேசறாங்கன்னும் புரியலை.

ஒருநாள், திடீர்னு எனக்கு ஃபோன் பண்ணினாங்க. உடனடியா பார்க்கணும்னாங்க. வரச்சொன்னேன். ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு மணி நேரம் என்னுடைய கார்ல உட்கார்ந்து பேசினோம். `உன்னையும் ஈஸ்வரையும் சேர்த்து தப்பா பேசறாங்கன்னு நினைக்கிறேன். என் காதுக்கே வந்தது. இப்படி வதந்தி கிளம்பாம பார்த்துக்கோங்க'ன்னாங்க. `வதந்தினு நீங்களே நம்பறீங்கல்ல, எனக்கு அது போதும்'னு சொன்னேன். அப்ப, ஈஸ்வர் குடிக்கிறதாவும் சூதாடுவதாவும் கூடச் சொன்னாங்க. `இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லணும்'னு நினைச்சேன். பேசிட்டு நல்லபடியாதான் கிளம்பிப் போனாங்க.

அதுக்குப் பிறகு, அவங்க குடும்பத்துல ஈஸ்வருக்கும் அவங்களுக்கும் என்ன சண்டை நடந்ததுன்னு தெரியலை. அதைத் தெரிஞ்சுக்கவேண்டிய அவசியமும் எனக்கில்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல ஈஸ்வர் சோர்வா இருந்தா என்னன்னு கேட்பேன். `ஃபேமிலியில பிரச்னை'னு சொல்வார். மேற்கொண்டு அதைப் பத்தி நானும் கேட்டதில்லை, அவரும் சொன்னதில்லை.

இதுக்கிடையில சின்னத்திரை நடிகர் சங்கம் மலேசியாவுல கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில நானும் ஈஸ்வரும் டான்ஸ் ஆடுறதா கமிட் ஆகியிருந்தோம். ஒரே சீரியல்ல நடிக்கிற ரெண்டு ஆர்ட்டிஸ்ட் சேர்ந்து டான்ஸ் ஆடறதுல என்னங்க பிரச்னை வந்துடப்போகுது?

ஜெயஸ்ரீ
ஜெயஸ்ரீ
``என்னைக் கைது பண்ணாங்க ஓகே; ஆனா ஸ்டேஷன்ல என்ன நடந்துச்சு தெரியுமா?!" - ஜெயஶ்ரீ கணவர் ஈஸ்வர்

ஆனா, ஈஸ்வர் மலேசியா வரக்கூடாதுனு அவரோட பாஸ்போர்ட்டை எடுத்து ஜெயஶ்ரீ ஒளிச்சுவச்சதா பின்னாடி கேள்விப்பட்டேன். பிறகு, ஒருவழியா அவர் மலேசியாவுக்கு வந்தார். அப்பக்கூட டி.வி நடிகர் சங்கத்துக்கு ஜெயஶ்ரீ ஃபோன் போட்டு, `அவங்களுக்கு ஒரே ஹோட்டல்ல ரூம் போடாதீங்க', `அவங்களைத் தனியா எங்கயும் விடாதீங்க'ன்னெல்லாம் கீழ்த்தரமா பேசியிருக்காங்க. அதாவது, எங்கிட்ட வந்து `வதந்தி'னு சொன்ன அதே வாயாலதான் இப்படியும் பேசியிருக்காங்க. ஜெயஶ்ரீக்கு அவங்க புருஷன்மீது சந்தேகம். அதுக்கு என் பெயரை ஏன் இழுக்கணும்'' என்றவரிடம் மேலும் சில கேள்விகளை வைத்தோம்.

``இந்த விவகாரத்தில் உங்களது கணவர் அனில் பெயரும் அடிபடுகிறது?''

``அனிலுக்கும் எனக்கும் விவாகரத்து வழக்கு போயிட்டிருக்கு. அவரும் ஜெயஶ்ரீயும் நீண்ட நாள் ஃப்ரெண்ட்ஸ்னு ஜெயஶ்ரீ சொல்லித்தான் இப்ப எனக்குத் தெரியுது. ஆனா, எங்களோட திருமணத்துக்கோ அல்லது எங்க வீட்டுல நடந்த வேறெந்த விசேஷங்களுக்கோ ஜெயஶ்ரீ வந்ததே இல்லை. ரொம்ப நாள் ஃப்ரெண்ட்ஸ்னா வந்து போய்த்தானே இருக்கணும்? அதுதான் எனக்கு மர்மமா இருக்கு. அனிலும் நானும் என்ன காரணத்துக்கு பிரிய நினைக்கிறோம்னு இந்த இடத்துல பேச விரும்பலை. ஆனா, எங்க விவாகரத்து தொடர்பா நான் சில கேள்விகளை அனிலுக்கு வச்சேன். அதை டைவர்ட் செய்ய அனில் ஜெயஶ்ரீயைத் தூண்டி, அதோட விளைவுதான் இப்ப நடக்கறதெல்லாம்னு எனக்குத் தோணுது. இப்ப நடக்கிற பிரச்னை, என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு. ஒருவேளை எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, அதுக்குக் காரணம் அனிலும் ஜெயஶ்ரீயும்தான். அதேநேரம், `தன்னோட புருஷனுக்கு இன்னொருத்தியோட தொடர்பு இருக்கு'னு ஜெயஶ்ரீ சொல்லிட்டுத் திரியிற மாதிரி என்னால இறங்கியெல்லாம் பேசத் தெரியாது. அனில்கூட சில காலம் வாழ்ந்திருக்கேன். அதனால அவரைக் கொச்சைப்படுத்த விரும்பல.''

தேவதையைக் கண்டேன் தொடரில் மகாலட்சுமி
தேவதையைக் கண்டேன் தொடரில் மகாலட்சுமி

`உங்களுக்கும் விவாகரத்து கிடைச்சு, ஈஸ்வர் - ஜெயஶ்ரீ இடையேயும் விவாகரத்து ஆகிடுச்சுனா, ஈஸ்வரும் நீங்களும் சேர்ந்து வாழும் எண்ணம் உள்ளதா'?

``எனக்கு நாலு வயசுல பையன் இருக்கான். அவனுக்காக மட்டுமே இனி என் வாழ்க்கை.''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு