Published:Updated:

"சீரியல்ல நான் போடுற எல்லா டிரஸ்ஸும் மாமியார் செலக்ட் பண்றதுதான்'' -'அரண்மனைகிளி' மோனிஷா!

"சீரியல்ல நான் போடுற எல்லா டிரஸ்ஸும் மாமியார் செலக்ட் பண்றதுதான்'' -'அரண்மனைகிளி' மோனிஷா!
"சீரியல்ல நான் போடுற எல்லா டிரஸ்ஸும் மாமியார் செலக்ட் பண்றதுதான்'' -'அரண்மனைகிளி' மோனிஷா!

"தமிழ் சீரியலுக்கு புதுசு என்பதால் தமிழ் மீடியாவில் ஃப்ரெண்ட்ஸாம் ரொம்ப கம்மி" என சொல்லும் 'அரண்மனைகிளி' மோனிஷாவுடன் ஒரு பர்சனல் சாட் !

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `அரண்மனை கிளி' சீரியலில் தன்னுடைய கண் அசைவுகள் மூலமே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் மோனிஷா. அப்பாவிப் பெண்ணாக தன்னுடைய ரோலில் கைத்தட்டல்கள் அள்ளும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த மோனிஷாவுடன் ஒரு பர்சனல் சாட் !

பர்சனல் இன்ட்ரோ:

எனக்குச் சொந்த ஊர் கேரளா.எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிச்சிருக்கேன். படிப்பு முடிந்ததும் நடிப்பை கரியராக செலக்ட் பண்ணிட்டேன். சீரியலில் நீங்கள் பார்க்கும் ஜானு கேரக்டர்தான் என்னுடைய ரியல் கேரக்டரும். ரொம்ப அமைதியான பொண்ணு. ஆனால் எங்கேயும், எதுக்காவும் என் உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன். புக் படிக்கிறது என்னோட ஹாபி. தமிழ் சீரியலுக்கு புதுசு என்பதால் தமிழ் மீடியாவில் ஃப்ரெண்ட்ஸாம் ரொம்ப கம்மி. ஷூட்டிங் இல்லாத நாளில் பக்கா குடும்பப் பெண்ணாக மாறி, வீட்டு வேலைகளில் பிஸி ஆயிருவேன்.

மீடியா என்ட்ரி பற்றிச் சொல்லுங்கள்?

மலையாளத்தில் `மண் உருகும் காலம்'னு ஒரு சீரியலுக்கு ஆள் தேடிட்டு இருந்தப்போ என் போட்டோவை டைரக்டர்கிட்ட காண்பிச்சுருக்கா என் ஃப்ரெண்ட். டைரக்டர் டீமும் உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. ஆனா வீட்ல விஷயத்தைச் சொன்னதும் அப்பா டென்ஷன் ஆகிட்டாங்க. அப்புறம் அப்பாவைச் சமாதானப்படுத்தி அந்த சீரியலில் நடிச்சேன். சீரியலில் என் கேரக்டர் பயங்கர ஹிட் ஆயிருச்சு. இப்படிதான் என்னோட மீடியா என்ட்ரி ஆரம்பிச்சுது. கேரளாவில் நான் வேலை செய்த சீரியல் டீம்ல இருந்த என் ஃப்ரெண்ட் மூலமாக `அரண்மனை கிளி' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. ஹீரோயின் ஸ்கூல் படிக்கிற பெண்ணாகவும், அதன் பின் திருமணம் ஆன பெண்ணாகவும் நடிக்கணும் என்பதால் ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்ணைத் தேடிட்டு இருந்தாங்களாம். ஆடிஷனில் நான் யூனிஃபார்ம் போட்டுட்டு வந்து நின்னதைப் பார்த்த டைரக்டர் `நீதான் நான் எதிர்பார்த்த பொண்ணுனு' என்னை செலக்ட் பண்ணிட்டார். அதே மாதிரி என் கேரக்டரை மக்கள் கொண்டாடுறாங்க. வெளிய போறப்ப என்னை ஜானுனு அவளோ அன்பா கூப்பிடுறாங்க. போட்டோ எடுத்துக்கிறாங்க. கேரளாவில் என்னதான் உருகி உருகி நடிச்சாலும் அவங்களைப் பொறுத்தவரை நாங்க ஒரு ஆர்டிஸ்ட். ஆனால் தமிழ் ரசிகர்கள் அவங்க வீட்டு பொண்ணா எங்களைப் பார்க்கிறது சந்தோஷமா இருக்கு.

சீரியலுக்காக புடவை, பிளவுஸ், ஷாப்பிங் எல்லாம் மாமியார் கூடதான்.
சீரியலுக்காக புடவை, பிளவுஸ், ஷாப்பிங் எல்லாம் மாமியார் கூடதான்.

சீரியல்ல ஸ்கூல் பொண்ணு... உண்மையான வயசு என்னவோ..?

(சத்தமாகச் சிரிக்கிறார்) வயசைச் சொல்லமாட்டேன். ஆனால் திருமணம் முடிஞ்சிருச்சு. கணவர் கேரளாவில் பிசினஸ் பண்ணிட்டிருக்கார். என் பெஸ்ட் ஃப்ரெண்ட் அவர்தான். சீரியலில் நடிக்க முழுச் சுதந்திரம் கொடுத்து என்னை என்கரேஜ் பண்றார். மாமியார் என்னோட இன்னொரு பலம். அவங்க என் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகை. தமிழ் அவளோ தெரியலைனாலும் எல்லா எபிசோடுகளையும் பார்த்துட்டு கமென்ட் கொடுப்பாங்க. சீரியலுக்காக புடவை, பிளவுஸ், ஷாப்பிங் எல்லாம் மாமியார் கூடதான். காஸ்ட்யூம்ஸ் செலக்‌ஷனில் சூப்பராக ஐடியா கொடுப்பாங்க. என்னோட புரொபஷனை புரிஞ்சுகிட்டு அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்குறாங்க. அதனால் எந்த டெஷனும் இல்லாமல் நான் நடிப்பில் கவனம் செலுத்த முடியுது.

சீரியலில் என்கூட நடிக்கிறவங்ககிட்ட இருந்து தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். மொழி தெரிஞ்சு நடிக்கும் போது ஸ்கிரீனில் பர்ஃபாமென்ஸ் சூப்பரா இருக்கு.
மோனிஷா

கேரளானு சொல்றீங்க நல்லா தமிழ் பேசுறீங்களே?

சீரியல் ஆரம்பிச்ச புதிதில் சுத்தமா தமிழ் தெரியாது. கதையைக் கேட்டுட்டு அதுக்கு தகுந்தமாதிரி முகபாவனைகள் கொடுத்து நடிச்சேன். அடுத்தடுத்த எபிசோடுகளில் என் ரோலுக்கு நிறைய முக்கியத்துவம் வர ஆரம்பிச்சதும் தமிழ் கத்துக்கிறது அவசியம்னு பட்டுச்சு. சீரியலில் என்கூட நடிக்கிறவங்ககிட்ட இருந்து தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். மொழி தெரிஞ்சு நடிக்கும் போது ஸ்கிரீனில் பர்ஃபாமென்ஸ் சூப்பரா இருக்கு. அதுமட்டுமல்ல நடுவகிடு எடுத்து தலை நிறைய பூ, காட்டன் புடவை சரளமான தமிழ்னு முழுத் தமிழ் பெண்ணாகவே மாறிட்டேன்.

தமிழ் ரசிகர்கள் அவங்க வீட்டு பொண்ணா என்னைப் பார்க்கிறது சந்தோஷமா இருக்கு!
தமிழ் ரசிகர்கள் அவங்க வீட்டு பொண்ணா என்னைப் பார்க்கிறது சந்தோஷமா இருக்கு!

நிறைய போட்டோஷூட் பண்றீங்களே மாடலிங் பண்ற ஆசை இருக்கா?

எனக்குச் சின்ன வயசிலிருந்தே மாடலிங் பண்றது ரொம்பப் பிடிக்கும். ஆனால் என்னோட முக அமைப்பு ரொம்ப ஹோம்லியா இருக்கும். என் ஸ்கின் டோன் டஸ்கின்றதுனால மாடலிங் வாய்ப்பு பெரிசா வந்ததில்ல. இப்போ சீரியலில் என்னைப் பார்த்துட்டு புடவைகள், நகைகளுக்கு மாடலிங் பண்ண கூப்பிடுறாங்க. மாடலிங்கும் பண்ண ஆரம்பிச்சுட்டேன். என்னுடைய ஹோம்லி அண்டு டஸ்கி டோனே மாடலிங்கில் இப்போ எனக்கு ப்ளஸ்ஸாக மாறியிருக்கு.

கண் அசைவுகள் மூலமே எல்லா ரியாக்‌ஷனையும் கொடுக்குறீங்களே எப்படி?

அடிப்படையில் நான் ஒரு டான்ஸர். சின்ன வயசிலிருந்து பரதம் கத்துக்கிட்டு இருக்கேன். அதனால் என்னை அறியாமலேயே என்னுடைய கண்கள் அதிகம் பேசும். இப்போ சீரியலில் பிஸியாக இருப்பதால் நடனத்தில் கவனம் செலுத்த முடியலை. கூடிய விரைவில் அரங்கேற்றம் பண்ற பிளான் இருக்கு.

 என் கேரக்டருக்கு செட் ஆகுற மாதிரியான ரோல் வந்தா நிச்சயம் வெள்ளித்திரையிலும் பார்ப்பீங்க.
என் கேரக்டருக்கு செட் ஆகுற மாதிரியான ரோல் வந்தா நிச்சயம் வெள்ளித்திரையிலும் பார்ப்பீங்க.

எதிர்காலத்திட்டம்?

`அரண்மனை கிளி' இப்போதான் ஆரம்பிச்சுருக்கு என்பதால் ஷூட்டிங் பரபரப்பாகப் போயிட்டு இருக்கு. சினிமா வாய்ப்புகளும் வந்திட்டு இருக்கு. என் கேரக்டருக்கு செட் ஆகுற மாதிரியான ரோல் வந்தா நிச்சயம் வெள்ளித்திரையிலும் பார்ப்பீங்க.

அடுத்த கட்டுரைக்கு