Published:Updated:

"அவங்க அப்படி பண்ணினது பிடிக்கல; அதான் மேடையிலேயே கேள்வி கேட்டேன்; ஆனால்..." - வேதனை பகிரும் மெளனிகா

மெளனிகா

இதெல்லாம் நான் கேட்கக்கூடாதுன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, ஏன் கேட்கக்கூடாது? என் உழைப்பை நானும் அந்தத் தொடருக்காக இத்தனை வருஷமா கொடுத்திருக்கேன். சபை மரியாதை எனக்கு ஏன் கிடைக்கல?

"அவங்க அப்படி பண்ணினது பிடிக்கல; அதான் மேடையிலேயே கேள்வி கேட்டேன்; ஆனால்..." - வேதனை பகிரும் மெளனிகா

இதெல்லாம் நான் கேட்கக்கூடாதுன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, ஏன் கேட்கக்கூடாது? என் உழைப்பை நானும் அந்தத் தொடருக்காக இத்தனை வருஷமா கொடுத்திருக்கேன். சபை மரியாதை எனக்கு ஏன் கிடைக்கல?

Published:Updated:
மெளனிகா
ஜீ தமிழில் ஒளிபரப்பான நெடுந்தொடர் `செம்பருத்தி'. இந்தத் தொடர் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கும் மேல் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பானது. இந்தத் தொடரில் வில்லியாக நடித்துக் கலக்கிக் கொண்டிருந்தவர் நடிகை மெளனிகா. `நந்தினி' என்கிற கதாபாத்திரத்தில் நடித்த மெளனிகாவை சந்தித்துப் பேசினோம்.

சின்ன வயசுல இருந்தே அதிகமா டிவி பார்ப்பேன். நாமளும் விஜே ஆகணும் என்கிற ஆசை அதிகமாகவே இருந்துச்சு. அப்பதான் ராஜ் மியூஸிக் சேனலில் விஜே வாய்ப்பு கேட்டுப் போயிருந்தேன். என்னுடைய தாய்மொழி தெலுங்கு என்பதால் எனக்கு சரளமா தமிழ் பேசுறதில் சில சிக்கல்கள் இருக்கு. ஆனாலும், எனக்கு ஆர்வம் இருக்குங்கிறதால டிரை பண்ணிப் பார்க்கலாம்னு நினைச்சேன்.

மெளனிகா
மெளனிகா

அவங்க என்கிட்ட புரொபைல் கேட்டாங்க. அப்ப நான் ஃபோட்டோஷூட் எல்லாம் பண்ணல. அவங்க கேட்டதால புரொபைல் எடுத்து அவங்ககிட்ட கொடுத்தேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு எனக்கு தொகுத்து வழங்க வாய்ப்பு கொடுத்தாங்க. கிட்டத்தட்ட ஆறு மாசம் அங்க ஆங்கராக வேலை பார்த்தேன். பல லைவ் ஷோக்களை தொகுத்தும் வழங்கியிருக்கேன். அப்படித்தான் என் கெரியர் ஆரம்பமாச்சு.

அந்த ஷோ பண்ணிட்டு இருக்கும்போது அங்கிருந்த அண்ணன் மூலமா சன் டி.வியில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. `தேவதை' தான் என் முதல் சீரியல். டயலாக் ப்ராம்ட் பண்றதுல ரொம்ப சிரமப்படுவேன். தமிழ் எப்படி சரியா உச்சரிக்கணும்னு தெரியாததால ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டேன். சரியா டயலாக் சொல்லலைன்னு பல முறை எல்லார் முன்னாடியும் டைரக்டர்கிட்ட திட்டு வாங்கியிருக்கேன். அப்படி படிப்படியா கத்துக்கிட்டு இப்ப ஒரே டேக்கில் நடிக்கிற அளவுக்கு என்னை வளர்த்துக்கிட்டேன் என்றவர் `செம்பருத்தி' சீரியல் வெற்றி விழாவில் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து பகிர்ந்தார்

மெளனிகா
மெளனிகா

அது என்ன ஆச்சுன்னு எனக்கே தெரியலைங்க. அந்த சீரியலுக்காக நிறையவே இழந்திருக்கேன். ஒரு கட்டதுக்குப் பிறகு என் குடும்பத்தை நானே பார்த்துக்கணும் என்கிற சூழல் எனக்கு ஏற்பட்டுச்சு. அந்த சமயம் செம்பருத்தி சீரியலில் எனக்கு நிறைய நாட்கள் தேதிகள் இல்லை. அதனால சும்மாவே வீட்டில் இருந்தேன். அப்ப தான் வேற சேனலில் இருந்து டபுள் பேமேன்ட் கொடுத்து என்னை நடிக்கக் கூப்டாங்க. அந்த சீரியல்ல கமிட் ஆகிட்டேன். ஷூட்டிங்கிற்காக ரெடியாகும் சமயத்தில் சேனலில் இருந்து ஃபோன் வந்தது. நீங்க இந்த புராஜெக்ட் முடிக்காம ஏன் வேற சீரியலில் நடிக்க சம்மதிச்சீங்க? யாரைக் கேட்டு முடிவு பண்ணீங்கன்னு கேட்டாங்க. எனக்கு அங்க டேட்ஸ் இல்ல என் குடும்ப சூழலை சமாளிக்க நான் வேற என்ன பண்ண முடியும்? பலமுறை பேசியும் எனக்கு டேட்ஸ் கொடுக்க மாட்டேன்றீங்கன்னு கேட்டேன். நீங்க வாங்க நம்ம சேனலிலேயே இன்னொரு புராஜெக்ட் பண்ணலாம்னு சொன்னாங்க. சீரியல், சேனல் வேணும்னா நீங்க இங்கேயே இருங்க... இல்ல பணம் வேணும்னா வெளியில் வேற சீரியல் பண்ணப் போங்கன்னு சொன்னாங்க. அந்த சமயம் நான் கார் வேற லோனில் வாங்கியிருந்தேன். அதனால, பண ரீதியா கொஞ்சம் பிரச்னையாகத்தான் இருந்துச்சு. இருந்தாலும், செம்பருத்தி சீரியல் தான் முக்கியம்னு வேற எந்தத் தொடரிலும் நடிக்கலை. மூணு மாசம் வீட்டிலேயே சும்மா இருந்தேன்.

அதுக்கப்புறமாகத்தான் எனக்குத் தொடர்ந்து சேனலிலேயே `ரெட்டை ரோஜா' போன்ற தொடர்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க. ஒரே சேனலில் 2.3 தொடர்களில் வில்லியாக நடிக்கவும் மக்களே இந்த சேனலில் வேற வில்லியே இல்லையான்னு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. கிட்டத்தட்ட 4,5 வருஷமா இதையெல்லாம் எதிர்கொண்டு செம்பருத்தி தொடரில் நடிச்சிட்டு இருந்தேன். அந்த சீரியலுடைய வெற்றி விழாவில் என்னுடன் ஒர்க் பண்ணின கோ- ஆர்ட்டிஸ்ட் எல்லாருக்கும் தனித்தனியா வீடியோ, ஆடியோ எல்லாம் போட்டு நினைவுப்பரிசும் கொடுத்தாங்க. எனக்கு அந்த மாதிரி எதுவுமே பண்ணல. மேடைக்கு கூப்பிட்டு எனக்கான அங்கீகாரத்தை எனக்கு கொடுக்கவும் இல்ல. நான் எந்த விதத்தில் குறைஞ்சு போயிட்டேன்னு எனக்கே தெரியல. நானும் மத்தவங்கள மாதிரி கொட்டும் மழையிலும் சரி, கொரோனா காலத்திலும் சரி ஷூட்டிங்கிற்கு போயிட்டு வந்திருக்கேன். அந்த மேடையிலேயே அவங்ககிட்ட கேள்வி கேட்டுட்டேன். ஆனா, அவங்க யாரும் அதுக்கு எந்த பதிலும் சொல்லல. எனக்கு ரொம்ப அழுகை வந்துட்டு. அங்க எனக்காக யாரும் எதுவும் கேட்கல. எல்லாருமே அமைதியாகத்தான் இருந்தாங்க.

மௌனிகா
மௌனிகா

ஐந்து வருஷமா இந்த இடத்துல இருந்து தோத்துட்ட மாதிரி ஃபீல் ஆச்சு. இதெல்லாம் நான் கேட்கக்கூடாதுன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, ஏன் கேட்கக்கூடாது? என் உழைப்பை நானும் அந்தத் தொடருக்காக இத்தனை வருஷமா கொடுத்திருக்கேன். சபை மரியாதை எனக்கு ஏன் கிடைக்கல? நான் அவங்ககிட்ட மேடையில் கேட்ட கேள்வி பற்றின எதுவுமே டெலிகாஸ்ட் ஆகல.. இதுவரை ஃபோன் பண்ணி யாரும் இதுகுறித்து என்கிட்ட எந்த விளக்கமும் சொல்லல.

அந்த நிகழ்ச்சியை மிர்ச்சி செந்தில் அண்ணன் தான் தொகுத்து வழங்கினார். அவர் நானும் ஒரு ஆர்ட்டிஸ்ட் தான். உன் ஃபீலிங்ஸ் எனக்கு புரியுது. இந்த இடத்துல நீ தோத்துட்டதாக நினைக்கிற. இதே இடத்துல கண்டிப்பா நீ ஜெயிப்பன்னு சொன்னார். அவர் அப்படி சொன்ன வார்த்தைக்காக அவர் கையால அந்த சீரியலில் நடிச்ச எல்லாருக்கும் பொதுவா கொடுத்த அவார்டை வாங்கினேன். இல்லைன்னா அது கூட வாங்கியிருக்க மாட்டேன். இது எதுவுமே அவங்க டெலிகாஸ்ட் பண்ணல.

மௌனிகா
மௌனிகா

கிளைமாக்ஸ் சீன் நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்ப அவங்ககிட்ட நான் பண்ணிக் கொடுக்க மாட்டேன் சார். எனக்கு பண்ணனும்னு தோணல. நான் முக்கியமான கேரக்டர் இல்லைன்னு நினைக்கிறேன். இதுவரை நான் தான் செம்பருத்தியில் நாம முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறோம்னு தப்பா நினைச்சிட்டேன்னு சொன்னேன். பிறகு 'ரெட்டை ரோஜா' சீரியல் புரொடியூசர் ஃபோன் பண்ணி இத்தனை வருஷம் பண்ணிட்ட. கிளைமாக்ஸூம் பண்ணிக் கொடுத்துடு. உன் பெயரை கெடுத்துக்காதன்னு சொன்னார். அதனால தான் ஓகே சொல்லி நடிச்சுக் கொடுத்துட்டு வந்தேன். எனக்கு ஏன் ஆடியோ, வீடியோ போடலைன்னுலாம் நான் கேட்கலைங்க; என் கோ ஆர்ட்டிஸ்ட்டிற்கு கிடைச்சது எனக்கு ஏன் கிடைக்கலைங்கிற கேள்வி தான் எனக்குள்ள ஓடிட்டே இருக்கு.. டெலிகாஸ்ட் எல்லாம் பார்க்கும்போது ரொம்ப வலிச்சது.. நான் எவ்வளவு கன்ட்ரோல் பண்ண நினைச்சாலும் என்னால பண்ண முடியல. அதனால தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டேன்!' என்றார்.

மேலும், இது தொடர்பாக பல விஷயங்களை மெளனிகா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!