Published:Updated:

"சாமி கும்பிட கண்ணை மூடின கேப்ல தாலி கட்டிட்டார்!"- கதறும் சீரியல் நடிகை... நடந்தது என்ன?

சீரியல் நடிகை பரமேஸ்வரி (எ) பைரவி

"ராஜா தேசிங்கு சுப்ரமணிங்கிறது அவருடைய பெயர். சினிமா டைரக்டர்னு சொல்லி தனியா இருக்கிற பெண்களை நோட்டமிட்டு ஏமாத்தறதுதான் அவருடைய வேலை. நிறையப் பேரை ஏமாத்தியிருக்கார்னு சொல்றாங்க." - பைரவி

"சாமி கும்பிட கண்ணை மூடின கேப்ல தாலி கட்டிட்டார்!"- கதறும் சீரியல் நடிகை... நடந்தது என்ன?

"ராஜா தேசிங்கு சுப்ரமணிங்கிறது அவருடைய பெயர். சினிமா டைரக்டர்னு சொல்லி தனியா இருக்கிற பெண்களை நோட்டமிட்டு ஏமாத்தறதுதான் அவருடைய வேலை. நிறையப் பேரை ஏமாத்தியிருக்கார்னு சொல்றாங்க." - பைரவி

Published:Updated:
சீரியல் நடிகை பரமேஸ்வரி (எ) பைரவி
`சினிமா எடுப்பதாகக் கூறி ஆசை காட்டி பண மோசடி செய்ததுடன் வலுக்கட்டாயமாகத் தன் கழுத்தில் தாலியும் கட்டி விட்ட நபரைக் கைது செய்ய வேண்டும்' எனச் சின்னத்திரை நடிகை பைரவி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் தந்திருப்பது டிவி வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து சீரியல் வட்டாரத்தில் விசாரித்தோம்.

"பரமேஸ்வரிங்கிற பைரவி சில சீரியல்கள்ல துணை நடிகையா நடிச்சிட்டிருந்தவங்க. திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கிற நிலையில் கருத்து வேறுபாடு காரணமா கணவரைப் பிரிஞ்சு குழந்தைகளுடன் தனியா வாழ்ந்திட்டிருந்தாங்க. இந்த நிலையில் இவருக்கு அறிமுகமான ஒருத்தர், தான் சினிமா ஃபீல்டுல இருக்கறதாகச் சொல்லி, பைரவிக்கும் நடிக்க சான்ஸ் தருவதாகச் சொல்லியிருக்கார்.

பரமேஸ்வரி (எ) பைரவி
பரமேஸ்வரி (எ) பைரவி

அவங்க பேச்சை அப்படியே நம்பியிருக்காங்க பைரவி. அந்த நபர்தான் இப்ப பண மோசடி செய்துட்டுத் தப்பிச்சிட்டதா தெரியுது" என்கிறார்கள்.

இந்தப் பிரச்னை தொடர்பாக சின்னத்திரை சங்கத்தில் உள்ள சிலரிடம் குமுறியிருக்கிறார் பைரவி.

"முதல்ல என்னை நடிக்க வைக்கிறேன்னு சொன்னவர், ஒரு கட்டத்துல படத் தயாரிப்புல சின்னச் சிக்கல். கொஞ்சம் பணம் தேவைப்படுது, நீங்க அரேஞ்ச் பண்ணுங்கன்னு சொன்னார். படத்தின் இணைத் தயாரிப்பாளர் நீங்கதான்னும் சொன்னார். நானும் அவர் பேச்சை நம்பி எங்கிட்ட இருந்த நகைகளையெல்லாம் வித்து 5 லட்ச ரூபாய் கொடுத்தேன்.

படத்துக்கு ஆபீஸ் போட்டிருக்கேன்னு ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போனார். டிஸ்கஸ் பண்ணணும்னு சொல்லி ஜாக்குவார் சார் ஆபீஸுக்கெல்லாம் போனோம்.

இதுக்கிடையில் அவருடைய நடத்தையும் வித்தியாசமா இருந்தது. ரொம்ப பக்திமான் போல தன்னைக் காட்டி என்னை நம்ப வச்சார். ஆரம்பத்துல நண்பரா பழகினவர், பிறகு உரிமை எடுத்துப் பேசத் தொடங்கினார். அவரை நம்பி நான் ஏமாந்துட்டேன்" என்கிற ரீதியில் குமுறினாராம்.

நடிகை பைரவியிடமே நாம் பேசினோம்.

பரமேஸ்வரி (எ) பைரவி
பரமேஸ்வரி (எ) பைரவி

"ராஜா தேசிங்கு சுப்ரமணிங்கிறது அவருடைய பெயர். சினிமா டைரக்டர்னு சொல்லி தனியா இருக்கிற பெண்களை நோட்டமிட்டு ஏமாத்தறதுதான் அவருடைய வேலை. நிறையப் பேரை ஏமாத்தியிருக்கார்னு சொல்றாங்க. பெண் குழந்தைகிட்ட அத்து மீறி நடந்துகிட்டு ஜெயிலுக்குப் போய் வந்தவர்.

எங்கிட்ட ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி சில கோயில்களுக்குப் போய் வரலாம்னு சொல்லித்தான் திருமணஞ்சேரிக்குக் கூட்டிட்டுப் போனார். அந்த நேரத்துலயே இவருடைய நடவடிக்கைகள் மேல எனக்கு சந்தேகம் வந்துடுச்சு. அதனால் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்தேன். ஆனாலும் நான் கண்ணை மூடி சாமி கும்பிட்டுக்கிட்டிருந்த சமயம் பார்த்து என் கழுத்துல தாலியைக் கட்டிட்டார். அதனால என்னால எதுவும் செய்ய முடியல. இப்ப அவர் தொந்தரவு அதிகமாகிடுச்சு. பாலியல் தொழில்ல என்னைத் தள்ள முயற்சி செய்திட்டிருக்கார். அதனாலதான் அவர் மீது போலீஸ் புகார் கொடுத்திருக்கேன்" என்றார்.