Published:Updated:

ஷிவானி, ரச்சிதா, சரண்யாவின் 'பெட்' அலப்பறைகள்... பர்த் டே பார்ட்டி, பெங்களூரு ட்ரிப், உண்ணாவிரதம்!

செல்லப் பிராணி டைமண்டின் பிறந்த நாளில் ஷிவானி
செல்லப் பிராணி டைமண்டின் பிறந்த நாளில் ஷிவானி

ரச்சிதா வீட்டு நாய்க்குட்டியின் பெயர் ஹேப்பி. காதலித்த நாளில் கணவர் தினேஷ் ஆசையாய் வாங்கித் தந்தது. பெங்களூருவில் ரச்சிதாவின் அம்மா வீட்டில் இப்போது வளர்ந்து வருகிறது ஹேப்பி.

தன் செல்ல நாய்க்குட்டி டைமண்டின் முதல் பிறந்த நாளை பாலா உள்ளிட்ட சக நண்பர்களையெல்லாம் அழைத்து, கேக் வெட்டி (நாய்க்குட்டி கத்தி பிடிச்சு வெட்டுச்சானுலாம் கேட்கக் கூடாது) கொண்டாடியிருக்கிறார் 'பிக் பாஸ்' ஷிவானி.

''இதெல்லாம் கொஞ்சமில்லை.. ரொம்பவே ஓவராத் தெரியல'' என சமுக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள் ரசிகர்கள்.

நாய்க்குட்டிக்கு ஷிவானி கேக் வெட்டியதெல்லாம் பெரிய விஷயமில்லை. அதைவிட ஆச்சரியம் பிக்பாஸ் செல்வதற்காக க்வாரன்டைனில் இருந்தபோது அந்த நாய்க்குட்டியையும் தான் தங்கிய நட்சத்திர ஓட்டலிலேயே உடன் தங்கவைத்துக் கொண்டார் ஷிவானி. சேனல் இதற்காக இவருக்கு சிறப்பு அனுமதி வழங்கியது.

ஷிவானி போலவே தங்களுடைய செல்லப் பிராணிகள் மீது அளவுக்கதிகமாகப் பாசம் காட்டும் இன்னும் சில டிவி பிரபலங்களும் இருக்கிறார்கள்.

யார் யார் எனப் பார்க்கலாமா?

saranya
saranya

நடிகை சரண்யா. இவர் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்குட்டியின் பெயர் 'பனானா'(Banana). சில ஆண்டுகளுக்கு முன் திடீரென வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது பனானா. அதனைத் தேடி முகநூலில் போஸ்ட்டரே போட்டு விட்டார்.

மூன்று நாட்கள் கழித்து எப்படியோ பனானா வீட்டுக்குத் திரும்பி விட்டது. அந்த மூன்று நாளும் சரண்யா சரியாகச் சாப்பிடாமல் உண்ணாவிரதமாம். ச்சோ Sad!

rachitha
rachitha

சரவணன் மீனாட்சி' ரச்சிதா வீட்டு நாய்க்குட்டியின் பெயர் 'ஹேப்பி'.

காதலித்த நாளில் கணவர் தினேஷ் ஆசையாய் வாங்கித் தந்ததாம். பெங்களூருவில் ரச்சிதாவின் அம்மா வீட்டில் இப்போது வளர்ந்து வருகிறது ஹேப்பி. தொடர்ந்து அம்மாவுக்கு போன் போடும்போதெல்லாம் வீடியோ காலில் ஹேப்பியை சந்திப்பது ரச்சிதாவின் வழக்கமாம். அப்படி வீடியோ காலில் பேசினாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பெங்களூருவுக்கு ஹேப்பியைப் பார்க்க பறந்து விடுவாராம்.

iswarya
iswarya

சன் டிவியில் தொகுப்பாளராக இருந்த ஐஸ்வர்யாவை நினைவிருக்கிறதா? சென்னையிலிருந்த போது வீட்டில் ஒரு பூனைக்குட்டி வளர்த்து வந்தார். கோடைகாலம் வந்தால் வெயிலைத் தாங்காது என வீட்டில் அந்தப் பூனைக்குத் தனி ஏஸி அறை ஒதுக்கி விடுவார். இப்போது திருமணமாகி அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு போனப்பிறகும் கூட பூனைப் பாசம் விடவில்லை. இப்போது அங்கும் ஒரு பூனைக்குட்டி வளர்த்து வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு