Published:Updated:

'ஆமாம்.. இனி எங்களுக்குள் எதுவுமில்லை!- 'ரோஜா' சீரியல் ப்ரியங்காவின் பிரேக்-அப் மெசேஜ்

'காதலிச்சது உண்மை. போன வருஷம் மே 10-ம் தேதி எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததும் உண்மை. ஆனா, சில காரணங்களால் கல்யாணம் தள்ளிப்போனது.

ரோஜா ப்ரியங்கா
ரோஜா ப்ரியங்கா

தமிழ் சீரியல்களில் வரவேற்புப் பெற்ற ஒரு சீரியல், 'ரோஜா'. இதில் ஹீரோயினாக நடிக்கும் பிரியங்காவுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், தெலுங்கு சினிமாவில் நாகார்ஜுனா, பத்மப்ரியா என முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுக்குத் தங்கையாக நடித்திருக்கிறார். அங்கு, டி.வி -யில் 15 சீரியல்களுக்கு மேல் நடித்திருப்பவருக்கு, தமிழில் முதல் சீரியலே பெயர் வாங்கித் தந்துள்ளது.

ரோஜா ப்ரியங்கா
ரோஜா ப்ரியங்கா

இந்த நிலையில், திடீரென ப்ரியங்கா குறித்து சோஷியல் மீடியாவில் நிறைய பரபரப்புச் செய்திகள்.

காதலில் இருக்கிறார்... இல்லையில்லை லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். இல்லவே இல்லை, காதலருடன் பிரேக்-அப் ஆகிவிட்டது... என ஆளாளுக்கு அள்ளி விட்டபடி இருக்க, சில தினங்களுக்கு முன் விகடன்.காம்-க்குப் பேசியபோது கேட்டதற்கு, 'காதலிச்சது உண்மை. போன வருஷம் மே10-ம் தேதி எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததும் உண்மை. ஆனா, சில காரணங்களால் கல்யாணம் தள்ளிப்போனது. ரெண்டு பேர்ல யார் மீது தப்பு இருந்தாலும் அதை மறந்துடுவோம். சீக்கிரமே எங்க கல்யாணம் நடக்கும்' என்றவர், நடந்ததையெல்லாம் மறக்கச் சொல்லி ராகுலுக்கு உருக்கமான வேண்டுகோளையும் வைத்திருந்தார்.

ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லையாம். கருத்து வேறுபாடு தீர்க்க முடியாத அளவுக்குப் பெரிதாகிவிட, ஹைதராபாத்தை விட்டுக் கிளம்பி, மலேசியா சென்றுவிட்ட ராகுல், அதன்பிறகு ப்ரியங்காவின் தொடர்பு எல்லையிலிருந்தே முழுக்க விலகிவிட்டாராம்.

ப்ரியங்கா
ப்ரியங்கா

இதுகுறித்துப் பேசிய ப்ரியங்கா, 'கடைசி முயற்சியா சிரமப்பட்டு லைன்ல பிடிச்சுப் பேசினேன். ஆனா, எந்த முன்னேற்றமும் இல்லை. அதுக்கு மேல என்னால என்ன செய்ய முடியும்? அதனால, ''இனிமேல் எங்களுக்குள் எதுவுமில்லை. நடந்த நிச்சயதார்த்தத்துடன் எல்லாமே முடிஞ்சுபோச்சு. ஸோ, அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்துட்டுப் போக வேண்டியதுதான்'' என்றவர், ராகுலுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லவும் மறக்கவில்லை.