Published:Updated:

‘‘ ‘நடந்ததுக்கெல்லாம் ஸாரி; எப்படா வருவ..?’ - காதலனுக்காகக் காத்திருக்கும் `ரோஜா' பிரியங்கா

'ரோஜா' பிரியங்கா
'ரோஜா' பிரியங்கா

'ரோஜா' சீரியல் ஹீரோயின் பிரியங்காவின் பேட்டி...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'நடந்த எல்லாத்துக்கும் 'ஸாரி' கேட்டுக்கறேன். உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன். நீ இல்லாம என்னால வாழ முடியாது. அதனால ப்ளீஸ், எங்கிட்ட வந்துடுப்பா . பழசையெல்லாம் மறந்துடலாம்... யூ ஆர் மை ஸ்வீட்ஹார்ட்.'

- சன் டி.வி-யின் வரவேற்பு பெற்ற பிரைம் டைம் சீரியலான 'ரோஜா' தொடரின் ஹீரோயின் பிரியங்காவிடமிருந்துதான் இப்படியொரு உருக்கமான வேண்டுகோள்.

'roja' priyanka
'roja' priyanka

நீங்கள் வெறித்தனமான சீரியல் பிரியர்களாக இருந்தால், 'என்னது இது, அடுத்தடுத்த எபிசோடுக்கான டயலாக்கா என்ன? கதைய மாத்திட்டாங்களா... அர்ஜுன் கூடத்தானே இருக்காங்க?' எனக் கேட்பீர்கள்.

பிரியங்காவின் வேண்டுகோள், சீரியலுக்கான டயலாக் அல்ல. நிஜம்.

பதறிப்போய், 'ரோஜா' சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டுகே சென்று காரணத்தைக் கேட்டால், 'கடைசியில சொல்றேன்' எனக் கண்சிமிட்டியபடி இயல்பாகப் பேசத் தொடங்குது பொண்ணு.

'’குழந்தை நட்சத்திரமா தெலுங்கு சினிமாவுல அறிமுகமானேன். ஆனா, விவரம் தெரியத் தொடங்கின நாள்ல இருந்தே தமிழ் சினிமா மேலதான் எனக்கு கண். யார் யாரையோ பார்த்து, எப்படியோ ஒருவழியா தமிழ்ல 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்துல கமிட் ஆனப்ப, 'ஹன்சிகா ஃப்ரெண்டா பண்றேன்'னு ஹேப்பியா எல்லார்கிட்டயும் சொன்னேன். ஹன்சிகா ஃப்ரெண்டு கேரக்டர்னா, அடுத்து ஹன்சிகாவுடைய இடமே கிடைச்சுடும்கிற மாதிரி ஒரு எதிர்பார்ப்பு. ஆனா, நாம நினைச்ச மாதிரியே இருந்துட்டா அதுக்குப் பேரு சினிமாவா? அதனால பிறகு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆனாலும் ஏனோ தெரியல, சினிமா வாய்ப்புகள் அமையலை.

'roja' priyanka
'roja' priyanka

அந்தச் சமயத்துலதான், 'ரோஜா' சீரியலுக்கான ஆடிஷன். 'ரோஜா' கேரக்டருக்குத் தேர்வானேன். முதல்ல பகல் நேரத்துல ஒளிபரப்பாகிட்டிருந்தது. நிறைய பேர் பகல்ல பார்க்க முடியலைன்னு கேட்டுக்கிட்டதால, இப்ப பிரைம் டைம்ல போயிட்டிருக்கு. எடுத்த எடுப்புலயே 80 கி.மீ வேகத்துல போற மாதிரி விறுவிறுனு சீரியல் பேசப்படத் தொடங்கினதுல ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். சினிமாவுல அன்னைக்கு தமிழ்நாடு கொண்டாடிய ரோஜாவும் எங்க ஊர்ல இருந்து வந்தவங்கதான். இன்னைக்கு எல்லா வீடுகள்லயும் 'ரோஜா, ரோஜா'ன்னு என்னைக் கொண்டாடுறாங்க. வாய்ப்பு கிடைச்சு சினிமாவுல நடிச்சிருந்தாக்கூட இவ்ளோ புகழ் கிடைச்சிருக்குமான்னு தெரியலை" என்றவரிடம், "சரி, சரி... அந்த உருக்கமான வேண்டுகோள் யாருக்கு... என்ன பிரச்னை? உங்களுக்கு கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் பிறகு அது பிரேக் அப் ஆகிட்டதாகவும் தகவல்கள் றெக்கை கட்டுச்சே! இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க விரும்பலையா?" எனக் கேட்டோம்.

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'’ராகுல்ங்கிற கிட்டுவுக்கும் எனக்கும் போன வருஷம் மே மாசம் 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. நான் செல்லமா அவரை 'கிட்டுலூ'னுதான் கூப்பிடுவேன். தெலுங்கு சினிமாவுலயும் சரி டி.வி-யிலயும் சரி, அவர் முகம் பரிச்சயம்தான். பரஸ்பரம் லவ் பண்ணினோம். ரெண்டு பேரும் ஒரே ஃபீல்டுல இருந்தா சௌகரியமா இருக்கும்னு சிலர் சொல்வாங்க இல்லையா, ஆனா எங்களுக்கு அதுதான் வினை. போகப்போக ஒருத்தரையொருத்தர் பார்க்க, பேசக்கூட முடியாதபடி அவரோட கால்ஷீட்டும் என்னோட கால்ஷீட்டும் குழப்ப, நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்கிறதுல லேசா மனஸ்தாபம்.

'roja' priyanga
'roja' priyanga

அதனால, 'எனக்கு இந்த ஃபீல்டே வேண்டாம்'னு கோபிச்சுட்டு மலேசியா போய், அங்க ஒரு நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்துட்டார். ஆனா, பலரும் சொல்ற மாதிரி எங்களுக்குள்ள பிரேக் -அப் லாம் இல்லை. தொடர்ந்து நாங்க பேசிட்டுதான் இருக்கோம். இப்ப உங்க மூலமாகவும் கோரிக்கை வச்சிட்டேன். எப்படியும் இந்த வருஷக் கடைசியில எங்க கல்யாணம் இருக்கும்’’ என்றார், பிரியங்கா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு