Published:Updated:

`ரெண்டு வருஷத்துலதான் எங்க லவ் ஸ்ட்ராங்காச்சு!' - திருமண பந்தத்தில் நுழைந்த`ராஜா ராணி' ஷப்னம்

'சீரியல் நடிகை ஷப்னம் -ஆர்யன் திருமணம், சென்னையில் இன்று நடந்தது.

நிச்சயதார்த்தத்தில் ஷப்னம்
நிச்சயதார்த்தத்தில் ஷப்னம்

'தெய்வமகள்', 'ராஜா ராணி' 'கல்யாணமாம் கல்யாணம்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஷப்னம் - ஆர்யன் திருமணம், இன்று (7.9.19) சென்னை எழும்பூரிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ஆர்யன், ஷப்னத்தின் உறவினர் என்றபோதும், இவர்களுடையது லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ்.

ஆர்யனுடன் ஷப்னம்
ஆர்யனுடன் ஷப்னம்

முன்னதாக, 2017 செப்டம்பரில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. மறு வருடம் 2018 காதலர் தினத்தில் திருமணம் இருக்கும் என முதலில் சொன்னார். ஆனால் அது தள்ளிப்போக, அந்த வருடமே ஜூனில் இருக்கும் என்றார். அதுவும் தள்ளிப்போனது. ஷப்னம் 'ராஜா ராணி' சீரியலில் பிஸியாக இருந்ததால், இந்த இரண்டு ஆண்டு கால இடைவெளியாம். 'ராஜா ராணி' முடிவடைந்ததுமே அடுத்த சீரியல் வாய்ப்பும் வர, திருமணத்தை முடித்துவிட்டு வந்துவிடுவதாகச் சொல்லி மணமேடை ஏறியிருக்கிறார்.

வாழ்த்துச் சொல்லி ஷப்னத்திடம் பேசியபோது, ``இந்த நிமிஷத்துக்காகக் காத்திருந்த இந்த ரெண்டு வருஷத்துலதான் எங்க லவ் ஸ்ட்ராங்காச்சு. அதனால மேரேஜ் தள்ளிப்போனதுகூட ஒருவகையில நல்லதுக்குதான்'' என்றார்.

ஷப்னம்
ஷப்னம்

எழும்பூரில் இன்று நடந்த திருமணத்தில், மணமக்கள் இருவீட்டார் தரப்பின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே 500 பேர் வரை கலந்துகொண்டனர். டி.வி, சினிமா நட்சத்திரங்கள், வரவேற்பில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. வரவேற்பு, நாளை சென்னையில் நடக்கிறது.