Published:Updated:

`` `சரியா நடிக்கலைனா உன்னை மாத்திடுவேன்'னு தயாரிப்பாளர் மிரட்டினார்..!'' - `ராஜா ராணி' ஶ்ரீதேவி

`ராஜா ராணி' ஶ்ரீதேவி

"'ஏன் மேடம் சீரியலில்தான் உம்முனு இருக்கீங்க. நேர்லயாவது கொஞ்சம் சிரிக்கக்கூடாதா'னு கேட்பாங்க. எந்த நேரமும் சிரிச்சிட்டேவா இருக்க முடியும்னு மனசுக்குள்ள நினைச்சுக்குவேன்'' என்கிறார் `ராஜா ராணி' ஶ்ரீதேவி.

`` `சரியா நடிக்கலைனா உன்னை மாத்திடுவேன்'னு தயாரிப்பாளர் மிரட்டினார்..!'' - `ராஜா ராணி' ஶ்ரீதேவி

"'ஏன் மேடம் சீரியலில்தான் உம்முனு இருக்கீங்க. நேர்லயாவது கொஞ்சம் சிரிக்கக்கூடாதா'னு கேட்பாங்க. எந்த நேரமும் சிரிச்சிட்டேவா இருக்க முடியும்னு மனசுக்குள்ள நினைச்சுக்குவேன்'' என்கிறார் `ராஜா ராணி' ஶ்ரீதேவி.

Published:Updated:
`ராஜா ராணி' ஶ்ரீதேவி

'ராஜா ராணி' சீரியலில் வில்லியாக மிரட்டியவர், ஶ்ரீதேவி. ’ராஜா ராணி’ சீரியல் முடிவடைந்ததும், எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் ரெஸ்டில் இருக்கிறார். அவரையும், அவரது கணவரையும் அவரது வீட்டில் சந்தித்தோம்.

ஶ்ரீதேவி - அசோக்
ஶ்ரீதேவி - அசோக்

"'ராஜா ராணி’ டீமை ரொம்ப மிஸ் பண்றேன்'' என ஆரம்பிக்கிறார் ஶ்ரீதேவி. "சீரியல் முடிந்தபிறகுதான், எனக்கான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். நான் எதிர்பாராதவிதமாகத்தான் நடிக்க வந்தேன். ஆரம்பத்தில் எனக்கு நடிப்பைப் பற்றி எதுவுமே தெரியாது. என்னை ஆரம்பத்தில் நிறைய பேர் விமர்சனம் பண்ணியிருக்காங்க. ஒரு தயாரிப்பாளரே `இந்த சீரியலில் சரியா நடிக்கலைனா உன்னை மாத்திடுவேன்'னு சொல்லியிருக்கார். அதனால் ஒருகட்டத்தில் ஆக்டிங்கை ஒரு சவாலா எடுத்துப் பண்ண ஆரம்பிச்சேன். கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக்கிட்டேன்னு சொல்லலாம். முன்பெல்லாம் ஆடிசன் நடக்கும். இப்போ அப்படி இல்ல. இந்தத் துறை நிறையவே மாறியிருக்கு.'' என்றவர் தன் கணவர் அசோக்கைச் சந்தித்த தருணத்தைப் பகிர்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"2017ம் ஆண்டுதான் இவரைச் சந்தித்தேன். டாக் ரெஸ்கியூல நான் இருந்தேன். ஒரு நாய்க் குட்டியைத் தத்தெடுக்க யாருமே வரல. அதை ஃபேஸ்புக்ல போட்டேன். அப்போ பெங்களூரில் இருந்தேன். இவர்தான் நாய்குட்டியைத் தத்தெடுக்க உதவி பண்ணினார். அப்படித்தான் இவரும், நானும் ஃப்ரெண்டானோம். சில மாதங்களில் அவங்க அப்பா, அம்மாவுடன் வந்து பொண்ணு கேட்டுட்டார். அடுத்தடுத்த மாதங்களில் நிச்சயதார்த்தம், கல்யாணம் என கடகடனு முடிஞ்சிடுச்சு. பெங்களூரில் கல்யாணம் என்பதால், பெரும்பாலான நடிகர்கள் யாரும் வர முடியல. அதனால், சென்னையில் ரிசப்ஷன் வச்சோம். அதுக்குள்ள, ஶ்ரீதேவி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனு வதந்தி பரவ ஆரம்பிச்சிடுச்சு. முதல் பேட்டியே விரிவா விகடனுக்குத்தான் கொடுத்தோம்''என்றவரைத் தொடர்ந்து பேசுகிறார் அவரது கணவர் அசோக்.

Sri Devi
Sri Devi

"இவங்க வாழ்க்கை மாதிரி என்னுடையது இல்ல. நான் ஐ.டி கம்பெனியில் வேலை பார்ப்பதால், சரியான நேரத்துக்கு வேலைக்குப் போய், சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுவேன். ஆனா, இவங்க வேலை அப்படி இல்லை. சில நேரங்களில் தொடர்ந்து ஷூட் இருக்கும். வெளியூர் ஷூட்டிங் போக வேண்டியிருக்கும். அவங்களை முழுமையாகப் புரிந்து கொண்டதால் இப்போது வரை எதுவும் பிரச்னைகள் வராம இருக்கு’’ என்றவரிடம், 'அவங்க ஓவர் ஆக்டிங் பண்றாங்கனு என்றைக்காவது நினைச்சிருக்கீங்களா?' எனக் கேட்டதற்கு, "அப்படியெல்லாம் இல்லை. 'நிலா' சீரியலில் பாசிட்டிவ் ரோல் பண்ணிட்டு இருந்தாங்க. 'ராஜா ராணி' சீரியலில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு ரோலுமே பண்ணிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு எந்த கேரக்டரைக் கொடுத்தாலும், அதை சரியாப் பண்ணுவாங்க. அதனால இவங்க என்ன பண்ணாலும் பிடிக்கும்'' என்றவர் ஒரு சுவாரஸ்ய சர்பிரைஸ் தகவலையும் பகிர்ந்தார்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"நான் பெங்களூரில் ஆபீஸ் வேலையாக இருந்தேன். அப்போ எனக்கு போன் வந்துட்டே இருந்தது. என்னனு கேட்டபோது, கிஃப்ட் வந்திருப்பதாகச் சொன்னாங்க. ஒரு ரோஸ் பொக்கே கிஃப்டா அனுப்பியிருந்தாங்க. அதேமாதிரி ஒரு நாள் திடீர்னு வீட்டுக் கதவை யாரோ தட்டிட்டே இருந்தாங்க. யார்னு போய் பார்த்தா சர்பிரைஸ் விசிட்டா ஶ்ரீதேவி. இப்படி எங்களுக்குள் நிறைய சர்பிரைஸ் ஷேரிங்ஸ் இருக்கு’’ என்றார் அசோக்.

நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த கேரக்டர் எது என ஶ்ரீதேவியிடம் கேட்டதற்கு, "'தங்கம்' சீரியல் ரமா என்கிற கேரக்டர்தான் எனக்குப் பிடித்தது. என்னை யார் என மக்களுக்கு அறிமுகப்படுத்தியதும் அதுதான். அந்த சீரியலில் ஐந்து வருஷம் டிராவல் பண்ணேன். ராதிகா மேடம், சீமா அம்மா என அவங்களைச் சுற்றிட்டே இருப்பேன். அதற்குப் பிறகு `கல்யாணப் பரிசு' சீரியல் என் மனதுக்கு நெருக்கமான சீரியல். திருமணம் முடிந்த பிறகு நல்ல பாசிட்டிவான ரோலையும் பண்ணியிருப்பேன். இப்படியும் நீ நடிப்பியானு என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு கேட்டார் என் கணவர்.’’

உங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த பாராட்டு, விமர்சனம்..?

'' ‘ஏன் மேடம்... சீரியலில்தான் உம்முனு இருக்கீங்க. நேர்லயாவது கொஞ்சம் சிரிக்கக்கூடாதா'னு கேட்பாங்க. எந்த நேரமும் சிரிச்சிட்டேவா இருக்க முடியும்னு மனசுக்குள்ள நினைச்சுக்குவேன். ரமா, சுபு மாதிரியான கேர்கடர்களை மக்கள் நிறைய பேர் விமர்சிக்கிறதை பார்த்திருக்கேன். அதையெல்லாம் என்னுடைய நடிப்பிற்கான அங்கீகாரமா நினைக்கிறேன். எனக்கு 'அருந்ததி' அனுஷ்கா மாதிரியான கேரக்டர், 'அறம் 'நயன்தாரா, 'ராட்சசி' ஜோதிகா மாதிரியான கேரக்டரில் நடிக்க ஆசை'' என்றவரைத் தொடர்ந்து, அசோக்கிடம் ஸ்ரீதேவி ரசிகர்களின் அன்புத்தொல்லைப் பற்றிக் கேட்டதற்கு,

''ஐ லவ் யூ அர்ச்சனா அண்ணினு ஒரு நாளைக்கு பல மெசேஜ் வரும். அதை அவங்க ரோலுக்குக் கொடுக்கிற மரியாதையாத்தான் பார்ப்பேன். ஏன் நீங்க இரண்டு பேரும் டிக்டாக் பண்ணலைனு கேட்பாங்க. அதற்கான பதிலையும் கொடுத்துட்டேதான் இருப்போம். எப்போதும் ஶ்ரீயுடைய ரசிகர்களுடன் ஆக்டிவாகத்தான் இருக்கிறோம்'' என்று அசோக் சொல்ல,’’எனக்கு வர லவ் மெசேஜ் எல்லாத்தையும் என் கணவர்தான் டெலிட் பண்ணுவார்’’ என ஸ்ரீதேவி ஜாலியாகப் பேசி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism