Published:Updated:

``ராஜூ பிக்பாஸூக்கு கொடுத்த வாக்கை காப்பாத்திருக்கார்; எப்படின்னா..?!" - NINI சீரியல் வைஷ்ணவி

``ராஜு பிக்பாஸ் போறதுக்கு 15 நாள் முன்னாடிவரை ஷூட் இருந்துச்சு. அப்புறம் பிரேக். ஷூட் நடந்தப்போகூட பிக்பாஸுக்கு யாரெல்லாம் போவாங்கன்னு சும்மா கெஸ் பண்ணி விளையாடிட்டு இருந்தோம். அப்பகூட அவர் அதைப்பத்தி பேசவே இல்ல. ராஜு டைட்டில் வின் பண்ணா, எங்க டீம் ரொம்ப சந்தோஷப்படுவோம்."

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து, எல்லாருடைய மனதையும் கவர்ந்திருப்பவர் வைஷ்ணவி. தன் அம்மாவின் பெயரை தன் பெயருடன் சேர்த்து வைஷ்ணவி அருள்மொழி என்று அறியப்படுபவர். போட்டோ ஷூட், யூடியூப் வீடியோக்கள், சீரியல் என பிஸியாக இருக்கும் வைஷ்ணவியுடன் ஓர் உரையாடல்.

வைஷ்ணவி
வைஷ்ணவி

சீரியல் என்ட்ரி பத்தி சொல்லுங்க ?

``எனக்குப் பூர்வீகம் தமிழ்நாடு. ஆனா, நான் பிறந்தபோது அம்மா ஜம்மு காஷ்மீர்ல இருந்தாங்க. அப்புறம் தமிழ்நாட்டுல செட்டில் ஆயிட்டோம். மதுரை, கோயம்புத்தூர்லதான் படிச்சேன். வானத்துல பறக்கணுங்கிறது என்னோட ஆசை. அதனால் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிச்சேன். படிப்பு முடிச்சதும், `சில்லாக்கி டும்மா'ங்கிற யூடியூப் சேனன்ல நடிக்குற வாய்ப்பு கிடைச்சது.

கஸின் மூலமாக வந்த வாய்ப்பு. மேலும், அண்ணன்- தங்கச்சி கான்செப்ட் என்பதால அம்மாவும் பெருசா எதிர்க்கல. இப்படிதான் என்னோட நடிப்பு பயணம் தொடங்குச்சு. யூடியூப் வீடியோக்கள் பார்த்துட்டு, அடுத்தபடியா நிறைய சீரியல் வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சது.

வைஷ்ணவி
வைஷ்ணவி
சர்வைவர்: ``அங்க எனக்கு நல்லதும் நடந்திருக்கு; படுமோசமான விஷயங்களும் நடந்திருக்கு!" - காயத்ரி ரெட்டி

கலர்ஸ் தமிழ்ல ஒளிபரப்பான மலர் சீரியலுக்காக ஆடிஷன் போனேன். வாய்ப்பும் கிடைச்சது. ஆனா, நான் சீரியல்ல நடிக்குறதுல அம்மாவுக்கு உடன்பாடே இல்லை. சின்னச் சின்னதா நிறைய சண்டைகள் வரும். சீரியல்ல எல்லாரும் என்னை அவங்க வீட்டுப் பொண்ணா பார்க்க ஆரம்பிச்ச பிறகுதான் அம்மா ஹேப்பி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மலர் சீரியலுக்குப் பிறகு, மத்த சீரியல் வாய்ப்புகள் தானா வந்ததுதான். `அழகு', `பொண்ணுக்கு தங்க மனசு' சீரியல்கள்லயும் நடிச்சிருக்கேன். இப்போ `நாம் இருவர் நமக்கு இருவர்'ல நடிச்சிக்கிட்டு இருக்கேன்."

வைஷ்ணவி
வைஷ்ணவி

சீரியல்ல ரொம்ப அமைதியான தங்கச்சியா இருக்கீங்களே நிஜத்துல வைஷ்ணவி எப்படி?

``ரொம்ப சுட்டியான பொண்ணு. சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச புதுசுல அமைதியான பொண்ணா நடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். இப்போ பழகிருச்சு. ஸ்டார்ட், கேமரா ஆக்‌ஷன் சொல்லிட்டா, போதும் முகத்தை பாவமா வெச்சுட்டு நடிக்க ஆரம்பிச்சிருவேன்."

உங்க கூட சீரியல்ல நடித்த ராஜு, பிக்பாஸ் வீட்டுக்குப் போறது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?

``ராஜு எனக்கு அண்ணன் மாதிரிதான். ரொம்ப குளோஸ். அவர் பிக்பாஸ் போறதுக்கு 15 நாள் முன்னாடிவரை ஷூட் இருந்துச்சு. அப்புறம் பிரேக். ஷூட் நடந்தப்போகூட பிக்பாஸுக்கு யாரெல்லாம் போவாங்கன்னு சும்மா கெஸ் பண்ணி விளையாடிட்டு இருந்தோம். அப்பகூட அவர் அதைப்பத்தி பேசவே இல்ல... பிக்பாஸுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த நினைச்சிருக்கார்போல."

வைஷ்ணவி
வைஷ்ணவி
"பை... பை... மஹா!" - `நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரிலிருந்து விலகுகிறாரா ரச்சிதா?

ராஜுவை பிக்பாஸ்ல பார்த்ததும் உங்களுக்கு எப்படி இருந்துச்சு ?

``ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ராஜு டைட்டில் வின் பண்ணா, எங்க ஒட்டுமொத்த டீமும் ரொம்ப சந்தோஷப்படுவோம். ராஜு வெளியில் எப்படி இருந்தாரோ அப்படித்தான் பிக்பாஸ் வீட்டுலயும் இருக்கார். தன்னைச் சுத்தி இருக்கும் இடம் ஹேப்பியா இருக்கணும்னு எப்பவும் நினைப்பார். அதே கேரக்டரைதான் பிக்பாஸ்ல நீங்க பார்க்கறீங்க. ராஜுவை எங்க செட்ல எல்லாருமே ரொம்ப மிஸ் பண்றோம்."

பொதுவா பொண்ணுங்க அப்பாவுக்கு குளோஸா இருப்பாங்கனு சொல்லுவாங்க. ஆனா, நீங்க உங்க அம்மாகூட குளோஸ்னு கேள்விப்பட்டோமே ?

``வீட்டுல நானும் அம்மாவும்தான். எனக்கு எல்லாமே அம்மாதான். எனக்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்காங்க. அதான் அவங்க பெயரை என் பெயரோட இணைச்சு வெச்சிருக்கேன். நான் மம்மீஸ் லிட்டில் பிரின்சஸ்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு