Published:Updated:

``அப்போ `ஐ லவ் யூ’னு ப்ரபோஸ் பண்ண பசங்க, இப்போ....!'' - `வம்சம்’ சந்தியா

'வம்சம்' சந்தியா ரம்யா கிருஷ்ணனுடன்
'வம்சம்' சந்தியா ரம்யா கிருஷ்ணனுடன்

"யார் என்ன வேணாலும் பேசட்டும், எனக்கு அதுபத்திக் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை அழற சீன்னா நிஜமாவே அழுதுடுவேன். யாரையாச்சும் அறையற சீன்னா, அறைஞ்சிடுவேன்.’’

ரம்யா கிருஷ்ணன் நடித்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் மலைகிராமத்துப் பெண்ணாக வந்து ‘மச்சான்’ டயலாக் மூலம் பிரபலமானவர் சந்தியா.

‘செல்லமடி நீ எனக்கு’, ‘அத்திப்பூக்கள்’ என ஏற்கெனவே சில சீரியல்களில் நடித்திருந்தாலும், ‘வம்ச’த்துக்குப் பிறகே இவருக்கு சினிமா வாய்ப்புகளெல்லாம் வரத் தொடங்கின.

’மச்சான்’ டயலாக்குடன், உருவத்திலும் ஓரளவுக்கு நடிகை நமிதாவின் சாயல் தெரிந்ததால், ’சின்னத்திரை நமிதா’ என்றே அழைத்தார்கள் சீரியல் ரசிகர்களும்.

சந்தியா
சந்தியா

கொரோனாவுக்கு முன் கடைசியாக ‘சந்திரலேகா’ தொடரில் நடித்துக்கொண்டிருந்தார். ‘லாக்டௌனில் எங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்’ என நான் யோசித்த வேளையில், 'எப்படி இருந்த நான் இப்படி' என்றபடி சந்தியாவின் இன்ஸ்டா பக்கத்தில் வந்து விழுந்தன சில ஸ்லிம் ஃபோட்டோக்கள்.

போன் அடித்தோம்.

கமல்ஹாசனை இந்தியாவின் ஸ்டாராக்கிய ஸ்பெஷல் சினிமா... இதன் சீக்வெலும் செம ஹிட் தெரியுமா?! #40YearsofEkDuujeKeLiye

‘’சொந்த ஊரான ஐதராபாத்துக்குப் போயிருப்பீங்கன்னு நினைச்சோம். சென்னையிலேயேதான் இருக்கீங்களா?"

‘’என்னுடைய பூர்வீகம் ஆந்திராதான். ஆனா தமிழ்நாட்டுலதான் செட்டிலாகணும்கிற முடிவை எப்பவோ எடுத்துட்டேன். அதென்னவோ தமிழ்நாடு எனக்கு ரொம்பவே பிடிச்சிடுச்சு. பெண்களுக்கு இங்க நிறைய மரியாதை தர்றாங்க. கோயில்கள் அதிகமா இருக்கிறது அதுக்கொரு காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். பக்தி இருக்குற இடத்துல ஒரு பயம், ஒரு கட்டுப்பாடு இருக்கும். கொரோனா, சுனாமின்னு என்னவந்தாலும் சென்னையை விட்டுக் கிளம்ப மாட்டேன்’’

சந்தியா
சந்தியா

ஸ்லிம் போட்டோஸ்க்குப் பின்னாடி உள்ள சீக்ரெட் சொல்லுங்க?

‘’கம்ப்ளீட் வெஜிடேரியனா மாறிட்டேன். அடிப்படையில நானொரு அனிமல் லவ்வர். என்னுடைய வீட்டுல பறவைகள், நாய், பூனைன்னு எல்லாமே இருக்கு. இதுங்களை நேசிக்கிற ஒருத்தரால எப்படி நான்–வெஜ் சாப்பிட முடியும்னு கொஞ்ச நாளாவே யோசிக்கத் தொடங்குச்சு மனசு. மாமிசம் சாப்பிடறவங்க நிஜமான அனிமல் லவ்வரா இருக்க முடியாதுன்னு தீர்மானமா நம்பத் தொடங்கின பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தி, இன்னைக்கு முட்டையைக் கூடத் தொடறதில்லைங்கிற நிலைமைக்கு வந்துட்டேன்.

அதேநேரம், வெஜிடேரியனா இருந்தா மட்டுமே ஸ்லிம்மா ஃபிட்டா இருக்க முடியும்னு சொல்ல மாட்டேன். பொதுவா வீட்டுலயே இருந்தா அடிக்கடி நொறுக்குத் தீனி ப்ளஸ் நினைச்சபடி சாப்பிட்டுட்டு இருப்பாங்க. அப்படி இல்லாம வாயைக் கொஞ்சம் கட்டிப்போடணும்னு லாக்டௌன் தொடங்கினப்பவே தீர்மானமா முடிவெடுத்ததன் விளைவுதான் அந்த ஸ்லிம் போட்டோஸ்.’’

‘’சீரியல்கள்ல அழற காட்சிகள்ல கிளிசரின் போட மறுத்துடுவீங்களாமே..?

‘’முதல் சீரியல்ல போட்டேன். அடுத்த சீரியல்ல கொஞ்சம் கம்மியா பயன்படுத்தினேன். ‘சந்திரலேகா’வுல ’தேவையில்லை’னு சொல்லிட்டேன். சீனை நல்லா நமக்குள் உள்வாங்கிட்டா போதும், கண்ணீர் தானா வந்திடும்னு நான் நம்பினேன். அதை நிரூபிக்கவும் செஞ்சேன். சிலர் இதை நம்ப மறுக்கலாம். கலாய்க்கலாம். ’ஓவர் ஆக்டிங்’னு கூடச் சொல்லலாம். யார் என்ன வேணாலும் பேசட்டும், எனக்கு அதுபத்திக் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை அழற சீன்னா நிஜமாவே அழுதுடுவேன். யாரையாச்சும் அறையற சீன்னா அறைஞ்சிடுவேன். அவ்ளோதான்.’’

சந்தியா
சந்தியா

ஆங்கரா இருந்து சீரியலுக்கு வந்தீங்க. ஆங்கர் சந்தியாவுக்கும் நடிகை சந்தியாவுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீங்க?

‘’ஆங்கரா டிவி முன்னாடி வந்தப்ப, ப்ரப்போசல் வந்தபடியே இருந்தது. அதுல முக்கால்வாசி பசங்க அதாவது அன்னைக்கு ‘ஐ லவ் யூ’ன்னு ப்ரப்போஸ் பண்ணவன்லாம் இன்னைக்கு அக்கானு கூப்பிடுறான். இதுதான் நான் கண்ட வித்தியாசம்.’’

அடுத்த கட்டுரைக்கு