Published:Updated:

உதவி இயக்குநரைக் கன்னத்தில் அறைந்த ஹீரோ; பாதியில் நின்ற `கண்ட நாள் முதல்' சீரியல் ஷூட்டிங்

நவீன்

அருண், நவீன் என இரண்டு ஹீரோக்கள் நடித்திருக்கும் இந்தத் தொடரின் ஷூட்டிங் சென்னை கிருஷ்ணா நகரில் நேற்று நடந்து கொண்டிருந்தது.

உதவி இயக்குநரைக் கன்னத்தில் அறைந்த ஹீரோ; பாதியில் நின்ற `கண்ட நாள் முதல்' சீரியல் ஷூட்டிங்

அருண், நவீன் என இரண்டு ஹீரோக்கள் நடித்திருக்கும் இந்தத் தொடரின் ஷூட்டிங் சென்னை கிருஷ்ணா நகரில் நேற்று நடந்து கொண்டிருந்தது.

Published:Updated:
நவீன்
சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ உதவி இயக்குநரைக் கன்னத்தில் அடித்ததால் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதுடன் விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துள்ளது.

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் `கண்ட நாள் முதல்'. அருண், நவீன் என இரண்டு ஹீரோக்கள் நடித்திருக்கும் இந்தத் தொடரின் ஷூட்டிங் சென்னை கிருஷ்ணா நகரில் நேற்று நடந்து கொண்டிருந்தது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டு ஹீரோக்களில் ஒருவரான நவீன் ஷூட்டிங் வராமல் தன்னுடைய அறையில் இருந்ததாகவும் உதவி இயக்குநர் குலசேகரன் என்பவர் அவரது அறைக்குச் சென்று அவரை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் உண்டாகி, அதன் தொடர்ச்சியாக குலசேகரனின் கன்னத்தில் நவீன் அடித்ததாகவும் சொல்கிறார்கள்.

நவீன்
நவீன்

இந்தச் சம்பவம் உடனே பரபரப்பாக ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் அடிபட்ட குலசேகரனுக்குக் கண்ணுக்குக் கீழே ரத்தம் வர முதலுதவி தரப்பட்டதாகவும் தெரிகிறது.

தொடர்ந்து சின்னத்திரை இயக்குநர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் குலசேகரன் அங்கு புகார் தந்திருக்கிறார். மேலும் மதுரவாயல் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட, தற்போது இரண்டு தரப்பையும் போலீஸ் விசாரித்து வருகிறதாம்.

சீரியல் தொடர்பான சிலரிடம் பேசிய போது, 'கொஞ்ச நாளாகவே இந்த சீரியல்ல நடிக்க ஆர்வம் இல்லாதவர் போல இருந்தார் நவீன்' என்கிறார்கள். சமீபத்தில்தான் செய்தி வாசிப்பாளர் கண்மனியுடன் நவீனுக்குத் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.