Published:Updated:

"நாங்க இனி கணவன் மனைவி கிடையாதுன்னு பொய் சொன்னோம்!" - அன்வர் - சமீரா வீட்ல விசேஷம்!

அன்வர் - சமீரா

"வித்தியாசமாச் சொல்லணும்னு நினைச்சது சமீராவுடைய ஐடியாதான். 'நாங்க இனி கணவன் மனைவி கிடையாது'னு பேசியிருந்த அந்த வீடியோவைப் பார்த்துட்டு உண்மையான 'அன்வீரா' ரசிகர்கள் ஒரு செகண்ட் அதிர்ந்து போயிட்டாங்க." - அன்வர்

Published:Updated:

"நாங்க இனி கணவன் மனைவி கிடையாதுன்னு பொய் சொன்னோம்!" - அன்வர் - சமீரா வீட்ல விசேஷம்!

"வித்தியாசமாச் சொல்லணும்னு நினைச்சது சமீராவுடைய ஐடியாதான். 'நாங்க இனி கணவன் மனைவி கிடையாது'னு பேசியிருந்த அந்த வீடியோவைப் பார்த்துட்டு உண்மையான 'அன்வீரா' ரசிகர்கள் ஒரு செகண்ட் அதிர்ந்து போயிட்டாங்க." - அன்வர்

அன்வர் - சமீரா
ஆந்திராவில் நிஜ வாழ்க்கையில் காதலித்துக் கொண்டிருந்த அன்வர் - சமீரா ஜோடியை 'பகல் நிலவு' சீரியலில் ஜோடியாக்கி அழகு பார்த்தது விஜய் டிவி. தொடர்ந்து நடிப்பில் மட்டுமல்லாது சீரியல் தயாரிப்பிலும் இறங்கினார்கள் இவர்கள். அதிலும் அன்வர் தயாரித்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அதே நேர‌ம், ஜீ தமிழில் 'ரெக்கை கட்டிப் பறக்குது மனசு' தொடரைத் தயாரித்தார் சமீரா.

இருவரது சீரியல்களும் முடிவடைந்த நிலையில் சீரியல்களுக்குக் கொஞ்சம் பிரேக் விட்டு நிஜ வாழ்க்கையில் இருவரும் இணைந்தார்கள். 2019-ம் ஆன்டு நவம்பர் 11-ம் தேதி இவர்களது திருமணம் இருவரின் பெற்றோர் முன்னிலையில் ஹைதராபாத்திலுள்ள அன்வரின் வீட்டிலேயே சிம்பிளாக நடந்தது.

அன்வர் - சமீரா
அன்வர் - சமீரா

திருமணத்துக்குப் பிறகு சென்னை திரும்பிய இருவருமே ஆளுக்கொரு சேனலில் சீரியல் தயாரிக்க இருந்த நிலையில்தான் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வர, ஹைதராபாத்துக்கே சென்றது ஜோடி.

அப்போது முதல் இருவரும் ஹைதராபாத்திலேயே இருக்கிறார்கள். ஊரடங்கிற்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டு சீரியல் ஷூட்டிங் தொடங்கிய பிறகும் கூட இவர்கள் சென்னை திரும்பவில்லை. கேட்டபோது, "எந்தவொரு பெருந்தொற்றும் நிச்சயம் ரெண்டாவது ரவுண்டு வரும். அதனால ரிஸ்க் எடுக்க விரும்பலை" எனச் சொல்லியிருந்தார்கள்.

இந்நிலையில்தான் தற்போது தாங்கள் அம்மா - அப்பா ஆகப் போகிற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள் இவர்கள்.

வாழ்த்துச் சொல்லி அன்வரிடம் பேசினேன்.

’பகல் நிலவு’ அன்வர் சமீரா
’பகல் நிலவு’ அன்வர் சமீரா

"வித்தியாசமாச் சொல்லணும்னு நினைச்சது சமீராவுடைய ஐடியாதான். 'நாங்க இனி கணவன் மனைவி கிடையாது'னு பேசியிருந்த அந்த வீடியோவைப் பார்த்துட்டு உண்மையான 'அன்வீரா' ரசிகர்கள் ஒரு செகண்ட் அதிர்ந்து போயிட்டாங்க. நிறையப் பேர் செல்லமா கோபிச்சுக்கிட்டாங்க. 'நல்ல செய்தியைச் சொல்றப்ப இந்த மாதிரியெல்லாம் விளையாடக் கூடாது'னு சிரீயஸாகவே சிலர் அட்வைஸ் பண்ணாங்க. எல்லாருக்கும் எங்களுடைய அன்பைத் தெரிவிச்சுக்கிறோம்" என்கிற அன்வர் மனைவியை உடனிருந்தே கவனித்துக் கொள்கிறார்.

சமீராவிடம் பேசிய போது, "சென்னையை ரொம்பவே மிஸ் செய்றேன். அடுத்த முறை சென்னை வர்றப்ப நாங்க மூணு பேராத்தான் வருவோம்" எனச் சிரிக்கிறார்.‌

வாழ்த்துகள் அன்வீரா!