Published:Updated:

``லிவ்-இன் நடிகரை மிரட்டவே வந்தார் ஈஸ்வர்!'' - ஜெயஶ்ரீ - மகாலக்ஷ்மி விவகாரம்

ஈஸ்வர்
ஈஸ்வர்

"'தேவதையைக் கண்டேன்'ல ஹீரோவா நடிச்சிட்டிருந்தவர் இன்னொரு ஹீரோ. அவரோட நல்ல நேரமா அல்லது ஈஸ்வருக்குப் போதாத நேரமா தெரியலை. ஆள்மாற்றம் நிகழ்ந்து ஈஸ்வர் சீரியலுக்குள் வர்றார்."

சீரியல் தம்பதி ஈஸ்வர்- ஜெயஶ்ரீ குடும்பப் பிரச்னையில் நாள்தோறும் புதுப்புதுக் கிளைக் கதைகள் விரியத் தொடங்கி இருக்கின்றன. "'கதை'ன்னா கற்பனைன்னு நினைச்சுக்காதீங்க; அத்தனையும் உண்மை" என்கிறார்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஈஸ்வரின் நடவடிக்கைகளை அருகிலிருந்து கவனித்து வந்தவர்கள்.

"இந்த மாதிரி சர்ச்சையான விவகாரத்தில் எங்க பேரையெல்லாம் வெளிப்படுத்த விரும்பலை" என்றபடி சிலர் பேசினர்.

'ஆமாம்.. இனி எங்களுக்குள் எதுவுமில்லை!- 'ரோஜா' சீரியல் ப்ரியங்காவின் பிரேக்-அப் மெசேஜ்

''இப்ப இல்லீங்க, இதுக்கு முன்னாடியும் நிறைய சர்ச்சைகள்ல மகாலக்ஷ்மி பெயர் அடிபட்டிருக்கு. 'வாணி ராணி' சீரியல்ல இயக்குநர் மாறியது, 'தேவதையைக் கண்டேன்'ல இயக்குநர் மாறியது, அதே தொடர்ல ஹீரோயின் மாறினதுன்னு எல்லா பிரச்னைகளோட பின்னணிலயும் மகாலக்ஷ்மிக்கு முக்கியப் பங்கு இருக்கறதா பேசினாங்க.

இப்ப கைது செய்யப்பட்டிருக்கிறாரே ஈஸ்வர், அவருக்கு மகாலக்ஷ்மி கூட எப்படிப் பழக்கமாச்சுன்னு நினைக்கிறீங்க?'' என்று நிறுத்திய சீரியல் ஸ்பாட்டின் அந்த சீனியர் டெக்னீஷயன் மொத்த விவரத்தையும் சொன்னார்.

'''தேவதையைக் கண்டேன்'ல ஹீரோவா நடிச்சிட்டிருந்தவர் இன்னொரு ஹீரோ. அவரோட நல்ல நேரமா அல்லது ஈஸ்வருக்குப் போதாத நேரமா தெரியலை. ஆள்மாற்றம் நிகழ்ந்து ஈஸ்வர் சீரியலுக்குள் வர்றார்.

மகாலக்ஷ்மி
மகாலக்ஷ்மி

அதேநேரம் சீரியல்ல இன்னொரு புதுமுக நடிகரும் சின்னதா ஒரு நெகட்டிவ் கேரக்டர் பண்ணிகிட்டிருந்தார். அவருக்கு மகாலக்ஷ்மி பத்தி எதுவும் தெரியாது. அவருக்கும் மகாலக்ஷ்மிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்க எச்சரிச்சப்போ, 'அவங்க கணவர் கொடுமைப்படுத்தறார். சீக்கிரத்துலயே அவங்க டைவர்ஸ் வாங்கிடுவாங்க'னு சொன்னார். தொடர்ந்து, அந்த நடிகரும் மகாலக்ஷ்மியும் 'லிவ் இன் ரிலேஷன்ஷிப்'பில் இருந்தாங்க. இது அவங்க பர்சனல் விஷயம்தான். ஆனா, இப்போ அதுதான் பொதுவெளியில பிரச்னை ஆகியிருக்கு. அதனால வேற வழியில்லாம பேச வேண்டியதாயிருக்கு.

கொஞ்ச நாள்ல ரெண்டு பேருக்குமிடையில் என்ன பிரச்னையோ தெரியலை, பிரிஞ்சிட்டாங்க. சீரியலைவிட்டு வெளியேறினார் அந்த நடிகர். வெளியேறியவர் அப்படியே ஒதுங்கியிருக்கலாம். அப்படிச் செய்யாம அவங்க ரிலேஷன்ஷிப் தொடர்பா கையில வச்சிருந்த ஆதாரங்களை எடுத்துக்கிட்டுப் போய் மகாலக்ஷ்மி கணவரைச் சந்திச்சார். அதுல கடுப்பான மகாலக்ஷ்மி ஒருபுறம் தனக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸை வெச்சு அந்த நடிகரை மிரட்டினாங்க. அது போதாதுன்னுதான் ஈஸ்வரோட உதவியை நாடியிருக்காங்க. ஈஸ்வர் அந்த வில்லன் நடிகரை மிரட்டவும் செய்திருக்கிறார். கடைசியில அந்த வில்லன் நடிகர் ஒதுங்கிவிட, அங்கிருந்துதான் தொடங்கியது ஈஸ்வர்-மகாலக்ஷ்மி விவகாரம்.

ஈஸ்வர்
ஈஸ்வர்
``நானும், என் மகளும் இருக்க எங்க முன்னாடியே மகாலக்ஷ்மிக்கு வீடியோ கால் போட்டு வெறுப்பேத்துவார்!'' -சீரியல் ஜெயஶ்ரீ

ஈஸ்வரோட மனைவி ஜெயஶ்ரீக்கு இவர்களின் விவகாரம் தெரிய கண்டித்தார். உடனேதான் அவருக்கு அடி உதை விழ, கடைசியில இப்ப இதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்து ஈஸ்வர் கம்பி எண்ணிகிட்டிருக்கார். 'போலீஸ் தன்னையும் கைது செய்யலாம்'னு நினைச்ச மகாலக்ஷ்மி தலைமறைவாகிட்டார்" என்கிறார் அந்த டெக்னீஷியன்.

ஈஸ்வர் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். கடந்தாண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனால், தேர்தலில் நின்று ஜெயிக்காமலேயே கௌரவ செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் மகாலக்ஷ்மி. ஈஸ்வரின் முயற்சியாலேயே அவரை சங்கப் பதவிக்குக் கொண்டு வந்ததாக அப்போதே உறுப்பினர்கள் சிலர் முணுமுணுத்தது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்வர் ஜெயஶ்ரீ
ஈஸ்வர் ஜெயஶ்ரீ

சரி சீரியலின் ஹீரோ ஜெயிலுக்குள்ளும், வில்லி தலைமறைவாகவும் இருக்கிற சூழலில் தொடரின் ஷூட்டிங்? சேனல் தரப்பில் கேட்டதற்கு, "இதுவரை எந்த முடிவும் எடுக்கபடவில்லை; விரைவில் பேசுகிறோம்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு