Published:Updated:

`கோபி'யின் `கல்யாண வீடு' சீரியலுக்கு அபராதமா..? திருமுருகனைச் சோதித்த 2019

இயக்குநர் திருமுருகன்
News
இயக்குநர் திருமுருகன்

2019-ல் நேசமணி சிக்கியதுபோல், சின்னத்திரையில் 2018-ன் இறுதியிலேயே சிக்கியவர், சீரியல் ரசிகர்களால் `கோபி’ என அழைக்கப்படுகிற இயக்குநர் திருமுருகன்.

பழைய விஷயங்களையும், சம்பவங்களையும் தூசுதட்டி ட்ரெண்ட் செய்து வரும் இணைய தலைமுறைக்கு, 2019-ல் நேசமணி சிக்கியதுபோல், சின்னத்திரையில் 2018-ன் இறுதியிலேயே சிக்கியவர், சீரியல் ரசிகர்களால் `கோபி’ என அழைக்கப்படுகிற இயக்குநர் திருமுருகன்.

`நாதஸ்வரம்’ தொடரில் இவர் நடித்த சில காட்சிகளை வைரலாக்கி மகிழ்ந்தார்கள் மீம் கிரியேட்டர்கள். சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டு போட வந்தவர், `இப்படிக் கிளம்பி வந்து ஓட்டுவாய்ங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லைங்க’ என்றார்.

திருமுருகன்
திருமுருகன்

கூடவே, `பரவாயில்ல, அன்னைக்கு சீரியலை மிஸ் பண்ணினவங்க எல்லாம் தேடிப்பிடிச்சுப் பார்த்தாங்களே. அந்த வகையில எனக்குச் சந்தோஷம்தான்’ எனத் தானும் மகிழ்ந்தார். `நாதஸ்வரம்’ மட்டுமல்லாது, இவரது மற்ற சீரியல்களான `குல தெய்வம்’, `மெட்டி ஒலி’ என எல்லா சீரியலையும் அலசி ஆராய்ந்து ட்ரோலுக்கு கன்டென்ட் கிடைக்குமா எனத் தேடினார்கள் நெட்டிசன்கள்.

ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே கோபியின் இமேஜ் டேமேஜ் ஆகிற மாதிரியொரு சம்பவம் நடக்கும் என அப்போது யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆம்... அப்படியொரு நாளையும் 2019-ல் சந்தித்தார் திருமுருகன். அதுவும் கன்டென்ட் தொடர்பான பிரச்னைதான். `ப்ராட்காஸ்ட் கன்டென்ட் கம்ப்ளைன்ட் கவுன்சில்’ எனப்படும் பி.சி.சி.சி அமைப்பானது, இவரது `கல்யாண வீடு’ தொடரின் சில காட்சிகளை வன்மையாகக் கண்டித்ததுடன், அந்தக் காட்சிகளுக்காக 2.5 லட்சம் அபராதம் விதித்து, வருத்தம் தெரிவிக்கவும் உத்தரவிட்டது.

மே மாதம் 14, 15 தேதிகளில் அந்தத் தொடரில் ஒளிபரப்பான 15 நிமிடக் காட்சியானது பெண்களை மோசமாகச் சித்திரிப்பதாக இருந்தது என்பதுதான் குற்றச்சாட்டு,

`கோபி சீரியலுக்கா அபராதம், இருக்கவே இருக்காது’ என அந்த சீரியலை ரெகுலராகப் பார்க்காத அவரது ரசிகர்களே முதலில் இந்தத் தகவலை நம்ப மறுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இந்த உத்தரவை ஏற்று, தொடர்ந்து ஏழு நாள்கள் தொடர் ஒளிபரப்பாவதற்கு முன் சில நிமிடங்கள், திருமுருகனே திரையில் தோன்றி, மேற்படி காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் பிரச்னை முடிவுக்கு வந்தது.

`சீரியல் என்றாலும் சரி, சினிமா என்றாலும் சரி, குடும்பத்துடன் ரசிக்கிற மாதிரி தருபவர்' என அவருக்கு இருந்த பெயர் இந்தச் சம்பவத்தால் லேசாக அடி வாங்கியது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

திருமுருகன்
திருமுருகன்

அதேபோல், `இந்த விவகாரத்தால் தொடர் ஒளிபரப்பாகி வரும் சேனலுக்கும் திருமுருகனுக்கும் இடையிலும்கூட பிரச்னை. `கல்யாண வீடு’ தொடரை திருமுருகன் தன்னுடைய யூடியூப் சேனலில் ஒளிபரப்புவதில் சிக்கல்’ என்றெல்லாம் கூடச் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

எப்படியோ வரும் பிரச்னைகளை சமாளித்துவிட்டு, 500 எபிசோடுகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது, `கல்யாண வீடு’. தொடரை யூடியூபில் பார்த்து வருகிற ஒரு ரசிகர், சில தினங்களுக்கு முன், பழைய பிரச்னை குறித்து நினைவுபடுத்திய ஒருவருக்குப் பதில் தந்தபோது, இப்படியொரு ஜாலி கமென்ட் போட்டிருந்தார்...

`கோபி வெளியூர் போயிருந்தப்போ, வேற யாரோ டைரக்ட் பண்ணியிருக்காங்கப்பா. அதுவும் போக அவர்தான் மன்னிப்பும் கேட்டுட்டாரே, அதனால இனி பழையபடி நாம அவருக்கு சப்போர்ட் பண்றோம். அப்படியே அவரை ட்ரோலும் பண்றோம்..!'

பிறகென்ன, 2019-ன் அந்த நாள்களை மறந்துவிட்டு, 2020-ல் உற்சாகம் காட்டட்டும் திருமுருகன்!