Published:Updated:

`செம்பருத்தி’, `பாண்டியன் ஸ்டோர்ஸ்’லாம் இன்னும் 3 நாள்கள்தானா?! - என்ன சொல்கிறது சேனல்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

இருக்கவே இருக்கு சீரியல்னு மனசைத் தேத்தறவங்களுக்குத்தான் இந்த நியூஸ். `உங்களோட ஃபேவரைட் சீரியல்கள்லயும் அடுத்த சில நாள்களுக்குத்தான்’ எனத் தகவல்கள் வந்திருக்கின்றன.

பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சு. ஆனா பிள்ளைகள் சேர்ந்து விளையாட விடக் கூடாதுனு அட்வைஸ்! பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யச் சொல்லிவிட்டன. `ஆஹா, சாயங்காலமா கொஞ்சம் நேரம் வெளியில போகலாம்’னு நினைக்க முடியல. பூங்காவுல இருந்து மால் வரைக்கும் அடைச்சுக்கிடக்கு. எல்லாம் ஒரே கொரோனா பீதி.

செம்பருத்தி
செம்பருத்தி

`சரி, இருக்கவே இருக்கு சீரியல்'னு மனசைத் தேத்தறவங்களுக்குத்தான் இந்த நியூஸ். `உங்களோட ஃபேவரைட் சீரியல்கள்லயும் அடுத்த சில நாள்களுக்குத்தான்’ எனத் தகவல்கள் வந்திருக்கின்றன சேனல்களின் ஏரியாவிலிருந்து.

உறுதியான தகவல்களைப் பெற சில சேனல்கள் தரப்பில் பேசினோம்.

`செம்பருத்தி', `யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட எங்க டிவியில ஒளிபரப்பாகிற சீரியல்கள் ப்ளஸ் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாவற்றின் ஷூட்டிங்கும் நாளையோட நிறுத்தப்படறதா அறிவிச்சிருக்காங்க. எத்தனை நாளுக்கு இந்த லீவுன்னு தெரியலை. கையில் ஸ்டாக் இருக்கிற எபிசோடுகளை வச்சு அதிகபட்சம் மூணு நாளைக்கு ஒளிபரப்பலாம். அதுக்குப் பிறகு, ஏற்கெனவே ஒளிபரப்பான எபிசோடுகள் மறு ஒளிபரப்பு செய்யறதா அல்லது அந்த நேரத்துல திரைப்படங்களை ஒளிபரப்பறதான்னு ஓரிரு நாள்ல முடிவு செய்யப்படும்’’ என்றார்கள் ஜீ தமிழ் தரப்பினர்.

`யாரடி நீ மோகினி’  சீரியல்
`யாரடி நீ மோகினி’ சீரியல்

`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதலான ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியிலோ, நிலைமை கொஞ்சம் பரவாயில்லை எனத் தெரிகிறது. `எடுத்து வைக்கப்பட்டிருக்கும் எபிசோடுகளை வைத்து இரண்டு வாரங்களுக்காவது சீரியல்கள் தடையில்லாமல் ஒளிபரப்பாகும்' என்கிறார்கள் இவர்கள். அதற்குள் நிலைமை சரியாவிடுமென நம்புகிறார்களாம்.

சீரியல் தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசியபோது, ``பொதுவா ஒவ்வொரு சம்மர்லயும் ஐ.பி.எல் கிரிக்கெட் வந்து சீரியல்களோட ரேட்டிங்கைக் கொஞ்சம் பதம்பார்க்கும். அதைச் சரிக்கட்ட, சீரியல்கள்ல பல ட்விஸ்ட்களைக் கொண்டு வந்து சமாளிப்பாங்க இயக்குநர்கள். இந்த வருஷம் கிரிக்கெட்டை முந்திக்கிடுச்சு கொரோனா. உலகமே ஒருவித கலவரத்தோட அணுகுகிறபோது நாங்க மட்டும் விதிவிலக்கா? அதான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கு. ஒரு வாரத்துல நிலைமை சரியாகிடும்னு நம்பறோம். ஒருவேளை அதுக்குள் சரியாகலைன்னா, டிவி இண்டஸ்ட்ரியும் பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும்னு தெரியுது'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு